மைசூர், தேசிய மொழிபெயர்ப்பு ஊழிய அலுவலகத்தில் இலக்குவனார் நினைவேந்தல்

மைசூர், தேசிய மொழிபெயர்ப்பு ஊழிய அலுவலகத்தில் இலக்குவனார் நினைவேந்தல் நடைபெற்றது. தி. பி.2056, ஆவணி 18/ 03.09.2025 முற்பகல் இந்நிகழ்வு அறிவியல் நூற்கள் கூர்ந்தாய்வர்களிடையே நிகழ்ந்தது. இலக்குவனார் திருவள்ளுவன், பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் குறித்த நினைவுரையாற்றினார். தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேரா.முனைவர் ப.மருதநாயகம், தமிழ்ப்போராளி இலக்குவனார் குறித்த புகழுரை ஆற்றினார். தே.மொ.ஊ. மூத்த வளமையர் முனைவர் வின்சுடன் நிறைவுரை யாற்றினார். இலக்குவனார் நினைவேந்தலை முன்னிட்டு, இலக்குவனார் இலக்கிய இணையம் சார்பில் தேசிய மொழிபெயர்ப்பு ஊழியத்திற்கு இலக்குவனார் திருவள்ளுவன் எழுதிய பின் வரும் நூல்கள் முதுநிலை…

சி.இலக்குவனார் நினைவேந்தல் இணைய உரையரங்கம் – ஆவணி 22, 2056  / 07.09.2025 ஞாயிறு காலை 10.00

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் படும்.(திருவள்ளுவர், திருக்குறள் ௫௰ – 50) தமிழ்க்காப்புக் கழகம் இலக்குவனார் இலக்கிய இணையம் தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார் நினைவேந்தல் இணைய உரையரங்கம் ஆவணி 22, 2056  / 07.09.2025 ஞாயிறு காலை 10.00 கூட்ட எண்: 864 136 8094 ; புகு எண்: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன் வரவேற்புரை:     கவிஞர் தமிழ்க்காதலன் உரையாளர்கள் : தயால் சிங்கு மாலைக் கல்லூரி, புது தில்லி மாணாக்கர்கள் செல்வி சி. சிரீ தர்சினி…

தொல்காப்பியமும் பாணினியமும் – முன்னுரை: இலக்குவனார் திருவள்ளுவன்

தொல்காப்பியமும் பாணினியமும் முன்னுரை கனடாவில்  முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு நிகழும் திருவள்ளுவர் ஆண்டு 2055, புரட்டாசித் திங்கள், 04, 05, 06ஆம் நாள்களில் (2024-09-20, 2024-09-21, 2024-09-22) கனடா, தொரண்டோ (Toronto) நகரில் சிறப்பாக நடைபெற்றது. கனடாத் தொல்காப்பிய மன்றமும் (தமிழ்நாட்டின்) இலக்குவனார் இலக்கிய இணையமும் இணைந்து இதனை நடத்தின. அதன் கருத்தரங்கத்தில் வாசிக்க நான் ‘தொல்காப்பியமும் பாணினியமும்’ என்னும் கட்டுரையை அனுப்பியிருந்தேன். நான் பொதுவாகக் கருத்தரங்கங்களில் பங்கேற்கும்போது விரிவான கட்டுரையை  அனுப்பிவிட்டு அதன் பின்னரே சுருக்கத்தை எழுதியனுப்புவது வழக்கம். ஏனெனில்…

தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் 4 – இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் 3 – தொடர்ச்சி) தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் 4 தமிழின் தாய்மையை ஒத்துக் கொள்வது பிற மொழிகளைத் தரம் தாழ்த்தும் செயலல்ல! “தமிழ் மொழிதான் அனைத்துத் திராவிட மொழிகளுக்கும் தாய் மொழி என நிலைநாட்ட நினைப்பது மற்ற திராவிட மொழிகளைத் தரம் தாழ்த்தும் செயல்” என்று சிலர் கூறுகின்றனர்.  தாய்க்குப் பலர் மகவுகள் இருக்கும் பொழுது அது பெருமைக்குரிய செய்தியே தவிர யாரையும் இழிவுபடுத்தும் செயலல்ல. இது குறித்து அறிஞர் அ.அரசேந்திரன் பின்வருமாறு கூறுகிறார்: “ஓர் அம்மாவிற்கு…

தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் 3 – இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் 2 – தொடர்ச்சி) தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் 3 செம்மை வழக்குகள் தமிழிலும் சிதைந்த வழக்குகள் பிற மொழிகளிலும் உள்ளன. தமிழ்ச்சொற்கள் செப்பமுற்ற நிலையிலும் தமிழ்க் குடும்ப மொழிகளில் உள்ள சொற்கள் சிதைந்த நிலையிலும் உள்ளமை குறித்துப் பின்வருமாறு பேரா.இலக்குவனார் கூறுகிறார்.  “இவ்வாறு எவ்வகையில் நோக்கினாலும் தமிழும், தமிழல் திராவிட மொழிகளும் ஒரு மொழி போலவே தோன்றுகின்றன. பெரும்பாலும் செப்பமுற்ற வழக்குகள் தமிழிலேயே உள்ளன. பிறமொழிகளின் சொற்கள், சிதைந்த வழக்குகளாகவே யுள்ளன. பண்பட்ட பழந்தமிழிலிருந்து பிரிந்து, நெருங்கிய தொடர்பு…

நாலடி நல்கும் நன்னெறி 12: நன்றியில் செல்வத்தை விரும்பாதீர்! – இலக்குவனார் திருவள்ளுவன்

(நாலடி நல்கும் நன்னெறி :11.  நல்லன புரிந்து நற்கதி/நன்மை அடைவோம்! – தொடர்ச்சி) நாலடி நல்கும் நன்னெறி 12: நன்றியில் செல்வத்தை விரும்பாதீர்! அள்ளிக்கொள் வன்ன குறுமுகிழ வாயினும் கள்ளிமேற் கைந்நீட்டார் சூடும்பூ அன்மையால் செல்வம் பெரிதுடைய ராயினும் கீழ்களை நள்ளார் அறிவுடை யார்.  நாலடியார்  பொருட்பால் – இன்ப இயல் – நன்றியில் செல்வம் 262 அதிகாரத் தலைப்பு விளக்கம்: “நன்றியில் செல்வம்” என்றால், பிறருக்கு உதவாத, அல்லது பயனில்லாத செல்வம் என்று பொருள்.  ஒருவரிடம் எவ்வளவு செல்வம் இருந்தாலும், அதை அவர்…

103 ? தொல்காப்பியர் சனாதனத்தை ஏற்றதாகத்தானே பொருள் என்கிறார்களே! – இலக்குவனார் திருவள்ளுவன்

(சனாதனம் – பொய்யும் மெய்யும் 101-102 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 103 103 ? தொல்காப்பியர் சனாதனத்தை ஏற்றதாகத்தானே பொருள் என்கிறார்களே!  ? சனாதன நூலான நாட்டிய சாத்திரத்தைப் பார்த்துத்தான் தொல்காப்பியர் எழுதினார். அப்படி என்றால் அவரே சனாதனத்தை ஏற்றுக் கொண்டதாகத்தானே பொருள் என்கிறார்களே! “தொல்காப்பியத்தால் பெண்கள் மேம்பாடு அடைந்தார்கள். நாட்டிய சாத்திரத்தால் தேவதாசி முறையும், பெண்ணடிமைத்தனமும், பரத்தமையும் (விபச்சாரமும்) வளர்ந்தன.”  என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். “தொல்காப்பியம் தமிழ் கற்பவர்களுக்கு எழுதப் பட்டது. நாட்டிய சாத்திரம் இந்தியாவில் உள்ள மக்கள் உல்லாசமாக…

தமிழ்க் காப்புக் கழகம்: இணைய அரங்கம்: ஆளுமையர் உரை132 & 133; என்னூலரங்கம்

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும்.   (திருவள்ளுவர், திருக்குறள்,௪௱௰௬ – 416) தமிழே விழி!                         தமிழா விழி! தமிழ்க் காப்புக் கழகம் இணைய அரங்கம்: ஆளுமையர் உரை132 & 133; என்னூலரங்கம் கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ;  கடவுக்குறி / Passcode: 12345 வைகாசி 25, 2056  ஞாயிறு 08.06.2025  காலை 10.00 மணி தலைமை:  இலக்குவனார் திருவள்ளுவன் வரவேற்புரை : கவிஞர் தமிழ்க் காதலன் “தமிழும் நானும்”  – ஆளுமையர்கள் பேரா.மரு.மு.செம்மல், முதன்மை…

கலைஞர் பல்கலைக்கழகம் தவறில்லை. தமிழ்ப்போராளி இலக்குவனார் பெயரிலும் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும்

நேரலை: கலைஞர் பல்கலைக்கழகம்.. பாமக கேட்கலாமா? வன்னியர்களுக்கு கலைஞர் செய்த துரோகம் | TNMedia Debate நெறியாளர் – தொகுநர், ஊடகர் சிவசங்கர் உரைஞர்கள் தமிழ்த்தேசச் செயற்பாட்டாளர் செந்தமிழ்க் குமரன் மூத்த தமிழறிஞர் இதழாளர் இலக்குவனார் திருவள்ளுவன் எழுத்தாளர், மூத்த ஊடகர் பவா சமுத்துவன்

தமிழ்க் காப்புக் கழகம்: ஆளுமையர் உரை 122 & 123; எம் நூலரங்கம்

நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம் யாநலத்து உள்ளதூஉம் அன்று.   (திருவள்ளுவர், திருக்குறள், ௬௱௪௰௧ – 641) தமிழே விழி!                                                    தமிழா விழி! தமிழ்க் காப்புக் கழகம் ஆளுமையர் உரை 122 & 123; எம் நூலரங்கம் கூட்ட இணைப்பு  கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ;  கடவுக்குறி / Passcode: 12345 மாசி 25, 2056  ஞாயிறு 09.03.2025  காலை 10.00 மணி தலைமை:  இலக்குவனார் திருவள்ளுவன்  வரவேற்புரை : கவிஞர் தமிழ்க் காதலன் “தமிழும் நானும்”  – ஆளுமையர்கள்…

குறள் கடலில் சில துளிகள் 11. உலகம்தழுவியதேஅறிவு! – இலக்குவனார் திருவள்ளுவன்

(குறள் கடலில் சில துளிகள் 10. கேட்பதிலும் சொல்வதிலும் புரிதல் வேண்டும்! – தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 11. உலகம் தழுவியதே அறிவு! உலகம் தழீஇயது ஒட்பம் மலர்தலும் கூம்பலும் இல்லது அறிவு. (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: அறிவுடைமை, குறள் எண்: 425) உலகத்தைத் தழுவிச் செல்லுதல் அறிவு. இன்பத்திற்கு மகிழ்தலும் துன்பத்திற்கு வருந்தலும் அறிவாகா என்கிறார் திருவள்ளுவர். துன்பத்திலிருந்து அறிவு வரும். ஆனால், அறிவு துன்பமோ இன்பமோ தராது என்கின்றனர் கல்வியியலறிஞர்கள். தழீஇயது என்பது  உலகத்தாரைத் தழுவிச் செல்லுதல் –…

இலக்குவனார் திருக்குறள் எளிய பொழிப்புரை  : சிறப்புகள்: குமரிச்செழியன்

இலக்குவனார் திருக்குறள் எளிய பொழிப்புரை  : சிறப்புகள் இலக்கியங்கள் என்பவை மக்களின் வாழ்க்கை இலக்குகளை உரைப்பவை. உலகில் எண்ணற்ற இலக்கியங்கள் பல்வேறு மொழிகளிலும் உள்ளன என்றாலும் உலகத்தொன்மொழியாகிய தமிழ்மொழிக்குத் தனியிடம் உள்ளது. தமிழ் மொழியில் உள்ள இலக்கியங்களிலும் திருக்குறளுக்குத் தனியிடம் உள்ளது. உலக மக்களின் வாழ்க்கை நெறிகளைப் பகுத்தும் தொகுத்தும் வழங்கும் நூல் திருக்குறள். உலகில் அதிகமான மொழிகளில் மொழி பெயர்க்கப்பெற்ற ஒரே நூல் திருக்குறள். உலக மக்கள் அனைவராலும் போற்றப்பட்டும் உரிமை கொண்டாடப்பட்டும் வருகின்ற ஒப்புயர்வற்ற உயர்ந்த நூல். திருக்குறள் ஒரு தனித்தமிழ்…