சட்டச் சொற்கள் விளக்கம் 1006-1010 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 1001-1005 : தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 1006-1010 1006. Authorities அதிகார அமைப்புகள் ஒரு பொருண்மை தொடர்பில் செயற்பட, முடிவுகளை எடுக்க, உத்தரவுகளைப் பிறப்பிக்க, இசைவுகளை வழங்க, முறையான சட்ட பூர்வ அதிகாரம் கொண்ட அமைப்புகள் 1007. Authority inferior கீழ்நிலை அதிகாரி எந்தப் பதவியாக இருந்தாலும் அந்தப் பதவிக்குச் சார்நிலையிலுள்ள அதிகாரி 1008. Authority, power and அதிகாரமும் அதிகார உரிமையும் Authority என்றால் சான்று வலிமை, இசைவு, அதிகாரமுடையவர், அதிகாரக்குழு,…
வெருளி நோய்கள் 471-475 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 466-470 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 471-475 ஊர்தி விற்பவர் தொடர்பாக (வாங்குநருக்கு) ஏற்படும் அளவுகடந்த பேரச்சம் ஊர்தி விற்பனையாளர் வெருளி.ஊர்தி விற்பவர் ஊர்தி விற்பவர் தவறான அல்லது பொய்யான அல்லது மிகையான தகவல்களைக் கூறி ஏமாற்றுவார், அவரை நம்பி எங்ஙனம் ஊர்தியை வாங்குவது எனப் பேரச்சம் கொள்கின்றனர்.00 ஊர்திகள் தொடர்பான தேவையற்ற அளவுகடந்த பேரச்சம் ஊர்தி வெருளி.amaxa or hamaxa, ஆகிய கிரேக்கச் சொற்களுக்கு வண்டி எனப் பொருள்.00 ஊர்திக் கொட்டில் கழுவிடம் (garage sink ) குறித்த வரம்பற்ற…
வெருளி நோய்கள் 466 – 470 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 461 – 465 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 466 – 470 466. ஊக்கிசை வெருளி – Zorevophobia ஊக்கிசை (Jazz Music) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ஊக்கிசை வெருளி.முதலில் அகராதிப் பொருள் அடிப்படையில் ஆரவார இசை எனக் குறிப்பிட்டிருந்தேன். இயாசு / jazz என்பதன் மூலப் பொருள் ஊக்கம் என்பதாகும். எனவே, ஊக்குவிக்கும் இவ்விசையை ஊக்கிசை எனக் குறித்துள்ளேன்.00 ஊஞ்சல் குறித்த வரம்பற்ற பேரச்சம் ஊஞ்சல் வெருளி.ஊஞ்சல் ஆடும் பொழுது கீழே விழ நேரிடலாம், ஊஞ்சல் சுற்றிக் கொள்வதால்…
வெருளி நோய்கள் 461 – 465 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 456 – 460 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 461 – 465 உறைபனி தொடர்பான அளவுகடந்த பேரச்சம் உறைபனி வெருளிசிலர் பனிக்கட்டி தொடர்பான பனிச்சறுக்கு விளையாட்டு போன்றவற்றில் மரணப் பயத்தைச் சந்திருக்கலாம் அல்லது பனிச் சூழல் காரணமாகச் சாலை வழுக்கல் போன்றவற்றால் ஊர்தி நேர்ச்சி(விபத்து) நேர்ந்திருக்கலாம் அல்லது பனி தொடர்பான நோய்களோ இன்னல்களோ பிறருக்கு வந்ததைக் கேள்விப்பட்டிருக்கலாம் அல்லது கதைகளில் படித்தோ திரைக்காட்சிகளில் பார்த்தோ இருக்கலாம். இதனால் அளவு கடந்த பேரச்சத்திற்கு ஆளாகின்றனர். இவர்களுள் பலர் பனிபாலேட்டைக்கூட(ice cream) உட் கொள்ள…
வெருளி நோய்கள் 456 – 460 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 451 – 455 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 456 – 460 456. உள்ளாடை வெருளி – Esorouchaphobia உள்ளாடை குறித்த வரம்பற்ற பேரச்சம் உள்ளாடை வெருளி.உள்ளாடைகளைக் கடைகளில் கேட்பதற்கு அணிவதற்கு மாற்றுவதற்கு எனப் பல நிலைகளில் உள்ளாடைகள் குறித்த பேரச்சம் கொள்வோர் உள்ளனர். உள்ளாடைகள் மூலம் நோய் வரும் என அஞ்சுவோரும் உள்ளனர்.Esoroucha என்னும் கிரேக்கச் சொல்லிற்கு உள்ளாடை என்று பொருள்.அழுக்கு உள்ளாடை வெருளி(snickophobia) உள்ளவர்களுக்கு உள்ளாடை வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.அமெரிக்க அதிபர் கிளிண்டன், தன் செயலர்…
எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 8 : ஓரெழுத்தொரு மொழிகளுக்கு அடுத்தும் கிழமைகளுக்கு அடுத்தும் வல்லினம் மிகும்
(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 7: தொடர்ச்சி) எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 8 : ஓரெழுத்தொரு மொழிகளுக்கு அடுத்தும் கிழமைகளுக்கு அடுத்தும் வல்லினம் மிகும் இக்கோப்பில், “கை குழந்தைகளுக்குச் சொட்டு மருந்து கொடுக்கப்படும்’ என உள்ளது. “கை’ என்பது ஓரெழுத்து ஒரு மொழி எனப்படும். ஓரெழுத்துச் சொல்லிற்குப் பின்பும் வல்லினம் மிக வேண்டும். கைக்குழந்தை தீத்தடுப்புப் பயிற்சி தைத்திங்கள் ஈத்தொல்லை கேள்வி: ஓரெழுத்து ஒரு மொழி’ சிலவாகத்தானே இருக்கும். பதில் : இல்லவேயில்லை. ஓர் எழுத்தே பொருள் தரும் சொல்லாய் அமையும்…
வெருளி நோய்கள் 446 – 450 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 441-445 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 446 – 450 உலர் சளி தொடர்பான வரம்பு கடந்த பேரச்சம் உலர்சளி வெருளி.சளியில் உள்ள தொற்றுயி நுண்மிகள் மூலம் பன்றிக்காய்ச்சல் முதலான நோய்கள் பரவுவதால், சளிமீதான பேரச்சம் வருகிறது. இருமலைத் தூண்டும்; சோர்வை உண்டாக்கும்; பொதுவான நலிவை ஏற்படுத்தும்; பல நாட்களுக்கு உடலைப் பாதிக்கக்கூடும்; என்ற காரணங்களால் உலர்சளி மீது பேரச்சங்கள் வருகின்றன.Nakusophobia என்பதையும் உலர்சளி வெருளி என முன்பதிப்பில் குறித்திருந்தேன். எனினும் இதை ஆசனவாய் வெருளி என்பதுதான் பொருத்தமாக இருக்கும். எனவே…
சட்டச் சொற்கள் விளக்கம் 1001-1005 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 996-1000 : தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 1001-1005 1001. Authorised officer / Authorized officer அதிகாரம் பெற்ற அலுவலர் அதிகாரம் பெற்ற அலுவலர் என்பவர் தனியொருவர், ஓர் அமைப்பு அல்லது அரசு நிறுவனத்தின் சார்பாகச் செயற்பட, குறிப்பிட்ட கடமைகளைச் செய்ய, ஆவணங்களைச் செயற்படுத்த அல்லது சட்டப்பூர்வமாகக் கட்டுப்படுத்தும் முடிவுகளை எடுக்க அதிகாரம் அல்லது அதிகாரப்பூர்வமாக அதிகாரம் வழங்கப்பட்டவர். இந்த ஏற்பு/ அங்கீகாரம் இயக்குநர்கள் குழு அல்லது அரசுத் துறை அல்லது ஒரு குறிப்பிட்ட சட்டத்தின் மூலம்…
வெருளி நோய்கள் 441-445 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 436-440 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 441-445 உருள்வளிக் கோள்(Uranus) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் உருள்வளிக் கோள் வெருளி.ஆரிய மூடத்தனங்களுக்கு முன்னோடிக் கிரக்க உரோமானிய மூடத்தனங்கள் ஆகும். இயற்கைக் கோளான உரேனசை சனியின் தந்தை என்றும் வியாழனின் தாத்தா என்றும் கருதினர். இவரின் மனைவி பூமிக்கடவுளான கையா. இருவருக்கும் நூறு கைகள் கொண்ட நூற்றொரு கையர்(Hecatoncheires/எகாடோஞ்சிர்கள்), ஒற்றைக் கண் கொண்ட ஒற்றைக் கண்ணன், பேருருவன் என்னும் அரக்கர்கள் போன்ற வலிமை மிகுந்த பிள்ளைகள் பிறந்தனர். இவர்களுக்கு அஞ்சி இவர்களையே பாதாளச்சிறையில் உரேனசு…
வெருளி நோய்கள் 436-440 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 431-435 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 436-440 உருப்படம்(icon) குறித்த வரம்பற்ற பேரச்சம் உருப்படவெருளி.இவற்றுள் குறிப்பாக மதச் சின்னங்கள் மீதான ஒரு வலுவான வெறுப்பு அல்லது பேரச்சம் இருக்கும். உருவ வழிபாட்டாளர்களை, கடவுள் உருவ எதிர்ப்பாளர்களை எதிர்க்கும் உருவ எதிர்ப்பு நிலைக்கு மாறுபட்டது. எனினும் உருவப்பட வெருளி, உருவ எதிர்ப்பு நிலைக்குக் கொண்டு செல்லலாம்.மேலும் இஃது உருவ நேயர்களுக்கு எதிரானநிலைப்பாடாகும். உருப்பொருள்கள் மீதான அளவுகடந்த பேரச்சம் உருப்பொருள் வெருளி.அசைவூட்டப்படங்கள் அல்லது கேலிப்படங்களில் பயன்படுத்தும் வகையில் ஆயிரக்கணக்கில் உருப்பொருள்கள் உள்ளன. இவற்றின்மீதான பேரச்சமே…
எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 7: back என்றால் முன் என்றும் பொருள்- இலக்குவனார் திருவள்ளுவன்
(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! –6, தொடர்ச்சி) எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 7: back என்றால் முன் என்றும் பொருள் எந்த ஒரு சொல்லும் தான் பயன்படும் இடத்திற்கேற்ப உள்ள பொருளைச் “”சுமந்து செல்லும் ஊர்தி”தான். எனவே, மூலச் சொல்லுக்கு நேரான பெயர்ப்புச் சொல்லை அமைக்காமல் மூலப் பொருளுக்கு ஏற்ற பெயர்ப்புச் சொல்லை ஆக்க வேண்டும். சொல் செறிவாயும் செவ்விதாயும் இருத்தல் வேண்டும். பயன்பாட்டுப் பின்னணியைக் கருத்தில் கொண்டு கலைச் சொற்களை உருவாக்க வேண்டும். ” “குன்றக் கூறல்” முதலான நூல்…
வெருளி நோய்கள் 431-435 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 426-430 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 431-435 உயிரிய மணிப்பொறி (biological clock) தொடர்பான அளவுகடந்த கவலையும் பேரச்சமும் உயிரிய மணிப்பொறி வெருளி00 432. உயிருடன் அடக்க வெருளி-Subterraneapremortephobia உயிருடன் அடக்கம் செய்யப்படுவோமோ என்ற பெருங்கவலையும் பேரச்சமும் உயிருடன் அடக்க வெருளி.இதை முதலில் உயிருடன் புதைதல் வெருளி எனக் குறித்திருந்தேன். ஆனால் புதைவு வெருளி எனத் தனியாகக் குறித்துள்ளதால் இவ்விரண்டிற்கும் குழப்பம் வரக்கூடாது என்றே உயிருடன் அடக்கம் வெருளி என இப்போது குறித்துள்ளேன்.Subterranea நிலத்தடி எனப் பொருள்; premorte என்றால் இறப்பிற்கு முன்…