வெருளி நோய்கள் 426-430 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 421-425 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 426-430 உயரம் அல்லது உயரமான இடங்களை அண்ணாந்து பார்ப்பதால் ஏற்படும் பேரச்சம் அண்ணாத்தல் வெருளி.உயரமான இடங்களை அண்ணாந்து பார்க்கும் பொழுது தலைசுற்றல், கிறுகிறுப்பு, மயக்கம் வரலாம் எனப் பேரச்சம் கொள்வோர் உள்ளனர். hyps என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் உயரம். இதனை முதல் பதிப்பில் உயர வெருளி(Hypsiphobia) எனத் தனியாகக் குறித்திருந்தேன். என்றாலும் உயரம் குறித்த பேரச்சம் உயர்வு வெருளி எனத் தனியாகக் குறிக்கப் பெற்றுள்ளது. எனவே, மேல் நோக்கி அண்ணாந்து பார்ப்பது குறித்த…
வெருளி நோய்கள் 416-420 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 411-415 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 416-420 உண்ணுகை குறித்த வரம்பற்ற பேரச்சம் உண்கை வெருளி.உண்ணும் பொழுது அருகில் அல்லது சுற்றுப்புறத்தில் யாரேனும் காற்றை வாய்வழியாகவோ பின்வழியாகவோ வெளியேற்றும் பொழுது உண்பதை வெறுத்துப் பேரச்சம் கொள்வதும் இவ்வகைதான். உண்ணும் பொழுது வாய்வழியாக மூச்சு விடுவதும் உண்கை வெருளிதான்.00 உண்டியகம்(cafeteria) பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் உண்டியக வெருளி.கஃபேட்டிரியா என்பது நமக்கு நாமே பரிமாறிக்கொள்ளும் தற்பரிமாற்றச் சிற்றுண்டியகம். சில இடங்களில் ஒரு பகுதித் தற்பரிமாற்றப் பகுதியாகவும் மறு பகுதி பரிமாறுபவர்கள் உள்ள உண்டியகமாகவும் இருக்கலாம். இதனாலும்…
வெருளி நோய்கள் 411-415 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 406-410 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 411-415 411. உணர்ச்சி வெருளி – Animotophobia உணர்ச்சி தொடர்பான அளவுகடந்த பேரச்சம் உணர்ச்சி வெருளி.மகிழ்ச்சி சார்ந்த அல்லது துயர உணர்வுகள் எதுவாயினும் அதற்கு ஆட்பட்டுப் பேரச்சம் கொள்வர்.உணர்ச்சிவய வெருளி(Emotaophobia) உள்ளவர்களுக்கு உணர்ச்சி வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.00 உணர்ச்சிவயம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் உணர்ச்சிவய வெருளி.உணர்ச்சி வெருளி(Animotophobia) உள்ளவர்களுக்கு உணர்ச்சிவய வெருளி வரும் வாய்ப்பு உள்ளது. 00 உணவு விடுதிபற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் உணவு விடுதி வெருளி.உணவகங்களில் தரப்படும் உணவு நலஆதாரமற்று(சுகாதாரமற்று) இருக்கும்,…
சட்டச் சொற்கள் விளக்கம் 996-1000 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 991-995 : தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 996-1000 996. Authorise அதிகாரமளி / அதிகாரம் அளி உரிமையளி, இசைவளி, ஏற்பளி செயலைச் செய்வதற்கான அதிகாரத்தை ஒருவருக்கோ நிறுவனத்திற்கோ சட்ட முறைப்படி அளித்தல். காண்க: Authorisation / Authorization 997. Authorised absence / Authorized absence இசைவுடன் வராமை ஏற்புடை வராமை இசைவு பெற்று வராமை ஓப்பளிப்புப்பெற்ற வாராமை என அகராதிகளில் குறிக்கப் பெற்றுள்ளன. பொருள் சரிதான். விடுப்பு ஒப்பளிப்பு என்பதுபோல்தான் இதுவும். என்றாலும் ஒப்பளிப்பு என்பது பொதுவாக நிதி…
வெருளி நோய்கள் 401-405 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 396-400 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 401-405 உடன் பிறந்தவர்கள் மகன், மகள் இருவர் மீதான அளவுகடந்த பேரச்சம் உடன்பிறந்தார் மக்கள் வெருளி.உடன்பிறந்தார் மகள் வெருளியில் குறிப்பிட்டவாறு, சொத்துத் தகராறு, குடும்பத் தகராறு, வாய்ச்சண்டை ஏற்படும் சூழல்களில் உடன்பிறந்தார் மக்கள் மீது பேரச்சம் வருவது இயற்கை. மகன், மகள் என்பவற்றின் பன்மையும் இருவரையும் சேர்த்துக் குறிப்பது மக்கள் என்னும் சொல்.Nibli என்றால் உடன் பிறந்தார் மகன் அல்லது மகள் அல்லது இருவரையும் குறிக்கும்00 உடன் பிறந்தவர் மீதான அளவுகடந்த பேரச்சம் உடன்பிறந்தார் வெருளி.உறவினர்கள் பகையாக…
வெருளி நோய்கள் 396-400 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 391-395 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 396-400 396. உடற்காய வெருளி – Traumaphobia / Traumatophobia உடற்காயம் குறித்த வரம்பற்ற பேரச்சம் உடற்காய வெருளி. பெண்களுக்கும் குறைந்த கல்வி உடையவர்களுக்கும் உடற்காய வெருளி மிகுதியாக இருப்பதாகக் கூறுகின்றனர். பொதுவாகப்பெண்களுக்கும் கல்வியறிவு குறைந்தவர்களுக்கும் இவ்வெருளி வருவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். trauma என்னும் கிரேக்கச் சொல்லிற்குக் காயம் எனப் பொருள். 00 397. உடற்பயிற்சி வெருளி -Exercitophobia / Drapanophobia உடற்பயிற்சி தொடர்பான அளவுகடந்த பேரச்சம் உடற்பயிற்சி வெருளி. உடற்பயிற்சியின் பொழுது இறப்பு நேர்ந்த…
வெருளி நோய்கள் 391-395 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 386-390 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 391-395 ஈரிடவாழ்வி பற்றிய இயல்பு மீறிய தேவையற்ற பேரச்சம் [ஈர்+இட(ம்)+ வாழ்வி+ வெருளி)பொன்னால் வளைத்து இரண்டு சுற்றாக அமைக்கப்பட்ட காற்சரி என்னும் கால்நகையைக் குறிப்பிடுகையில் கலித்தொகை(85.1) ஈரமை சுற்று என்கின்றது. கீழும் மேலுமாக அமைந்த நீச்சல் உடை ஈரணி எனப்படுகின்றது. ஈரறிவு (பதிற்றுப்பத்து : 74.18), ஈருயிர்(அகநானூறு : 72.12), ஈரெழுவேளிர்(அகநானூறு :135.12), ஈரைம்பதின்மர் (புறநானூறு : 2.15; பதிற்றுப்பத்து : 14.5; பெரும்பாணாற்றுப்படை 415) என இரண்டின் அடுக்கு சுட்டப்படுவதைப் பார்க்கிறோம். எனவே,…
வெருளி நோய்கள் 386-390 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 381-385 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 386-390 ஈட்டி வெருளி – Dartophobia எறிந்து விளையாடப்பயன்படும் ஈட்டி(Dart) குறித்த வரம்பற்ற பேரச்சம் ஈட்டி வெருளி.எறியப்படும் ஈட்டி மேலே பட்டுக் காயம் ஏற்படும் அல்லது உயிருக்குப் பேரிடர் ஏற்படும் என்று பேரச்சம் கொள்ளேவார் உள்ளனர். இத்தகைய அச்சம் உடன் விளையாடுபவர்களுக்கும் வேடிக்கை பார்ப்பவர்களுக்கும் ஏற்படும்.00 ஈயக் குவளை குறித்த வரம்பற்ற பேரச்சம் ஈயக் குவளை வெருளி.Gloindophobia என்றும் சொல்வர்.ஈயக் குவளை என்றும் ஈயக்கலன் என்றும் சொல்வர்.காலகக் கலன் வெருளி(soda cans) (stprophobia), மெனபான…
வெருளி நோய்கள் 381-385 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 376-380 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 381-385 புனைவுரு பாத்திரமான தித்தி மனிதன்(Candyman) குறித்த வரம்பற்ற பேரச்சம் தித்தியன் வெருளி.தித்தி மனிதன் பாத்திரம் திகிலூட்டுவதால் இப்படத்தைப் பார்த்தாலும் தித்தி மனிதன் தொடர்பான செய்திகளைப் படித்தாலும் தொடர்புடை படங்களைப் பார்த்தாலும் பேரச்சம் கொள்கின்றனர்.00 இன்மா (cake) மீதான மிகையான பேரச்சம் இன்மா வெருளி.cake என்பதற்கு அணிச்சல், இனிப்பப்பம், இனியப்பம், இன்னப்பம், மாப்பண்டம் எனப் பலவாறாகக் கூறுகின்றனர். நான் இன்மா எனச் சுருக்கமாகக் கூறுகிறேன்.இனிப்பு மீதும் இனிப்புப் பொருள்கள் மீதும் வெருளி உள்ளவர்களுக்கு இன்மா…
வெருளி நோய்கள் 376-380 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 371-375 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 376-380 இன்கண்டு(chocolate)பற்றிய அளவற்ற பேரச்சம் இன்கண்டு வெருளி.‘சாக்கலேட்டு’ அல்லது ‘சாக்கொலேட்டு’ என்பது கொக்கோ மரத்திலிருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. இது மத்தியக் கால அமெரிக்கச் சொல் ஆகும். கல்கண்டு என்பதன் அடியொற்றி இதன் இனிப்புச் சுவை அடிப்படையில் தமிழில் இன்கண்டு எனலாம்.00 தித்தி (candy) குறித்த வரம்பற்ற பேரச்சம் தித்தி வெருளி.‘மிட்டாய்’ என்பது தமிழ்ச்சொல்லல்ல. karamela என்னும் கிரேக்கச் சொல்லை இன்பண்டம், தித்தி எனச் சொல்லலாம். எனினும் chocolate என்பதை இன்கண்டு எனக் குறித்துள்ளதால் இதனைத்…
வெருளி நோய்கள் 371-375 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 366-370 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 371-375 இறைமம்(spiritual thing)சார்பானவை குறித்த வரம்பற்ற பேரச்சம் இறைம வெருளி.இதனை ஆன்மா என்றும் ஆன்மாவைத் தமிழில் ஆதன் என்றும்உயிர் நலம்சார்ந்த என்றும் குறிப்பிடுகின்றனர். எனினும் நடைமுறையில் சமயம் சார்ந்தும் இறை நெறி சார்ந்தும் உள்ளது. எனவே, இதனை இறைமம் எனக் குறிப்பிட்டுள்ளேன்.00 இறைமை தொடர்பான வரம்பற்ற பேரச்சம் இறைமை வெருளி.இறைமை நூலைப்படிப்பதால் மட்டுமல்லாமல், இறைமை வழிபாடு, தொடர்பான நிகழ்வுகள் முதலான அனைத்திலும் வெறுப்பும் பேரச்சமும் கொள்வர்.காதல் தோல்வியால்கண்ணைப் படைத்து பெண்ணைப் படைத்த இறைவன் கொடியவனே…
வெருளி நோய்கள் 361-365 – இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய் 356-360 தொடர்ச்சி) 361. இளம்பிள்ளைவாத வெருளி-Poliosophobia இளம்பிள்ளைவாதம்(Polio) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் இளம்பிள்ளைவாத வெருளி. இது போலியோ என்னும் ஆங்கிலப் பெயராலும் பரவலாக அழைக்கப்படுகின்றது. போலியோமியெலிட்டிசு (Poliomyelitis) என்பது இந்நோயின் மருத்துவப் பெயர்.போலியோமைலிட்டிசு தீ நுண்மம். இது தண்டுவடத்தைத் தாக்கும்போது ஏற்படும் பக்கவாதம் இது. நுரையீரல் அழற்சி, இதயக்கீழறை மிகுவழுத்தம், அசைவின்மை, நுரையீரல் சிக்கல்கள், நுரையீரல் வீக்கம், அதிர்ச்சி, நிரந்தரத் தசை வாதம், சிறுநீர்ப்பாதைத் தொற்று, இடுப்பு, கணுக்கால், பாதங்களின் குறைபாடுகளுள், ஊனம், இளம்பிள்ளை வாதத்தினால் உண்டாகலாம். எனவே, இக்குறைபாடுகள் நேரும்…