சங்கப் புலவர்கள் பொன்னுரை – 28 : நண்பர்க்குத் துன்பம் வரும் பொழுது கை விடாதே! – இலக்குவனார் திருவள்ளுவன்

(சங்கப் புலவர்கள் பொன்னுரை – 27 தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 28 நண்பர்க்குத் துன்பம் வரும் பொழுது கை விடாதே!  ”நன்றல் காலையும் நட்பிற் கோடார்” கல்லாடனார், அகநானூறு 113. 1. தலைவி கூற்று திணை: பாலை துறை: தலைமகன் பிரிவின்கண், தலைமகள் தோழிக்குச் சொல்லியது பொருள் விளக்கம்: நன்று அல் காலையும் நட்பின் கோடார். நன்றல்காலை – நன்றல்லாத பொழுது = கேடுவந்த பொழுது = துயருற்ற பொழுது; நட்பின் கோடார் = நட்பிலிருந்து கோணாதவர்கள் = நட்பை விட்டு…

கஎ. ஈழத்தைப் பாரடா! ஏமாளித்தமிழா!-திருத்துறைக் கிழார்

(க௬. தமிழர் செய்ய வேண்டுவன?- தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள்புலவர் வி.பொ.பழனிவேலனார்ஆ.தமிழர் கஎ. ஈழத்தைப் பாரடா! ஏமாளித்தமிழா! இலங்கையின் மக்கள் தொகை நூற்று எழுபது இலக்கம். அதில் வாழும் தமிழர்களின் எண்ணிக்கை இருபது இலக்கம். சிங்களர் அரசு 1980 – ஆம் ஆண்டு தமிழின அழிப்புப் பணியில் இறங்கி, பல்லாயிரம் தமிழர்களைக் கொன்று குவித்தது. ஆண், பெண், சிறார் என்ற வேறுபாடு கருதாது நூழிலாட்டு நடத்தியது. ஈழத்தில் தங்கட்கு விடுதலை வேண்டிப் போராடிய தமிழர் நான்கு பிரிவினராவர். அவர்களுள் விடுதலைப்புலிகள் தீவிரமாகச் செயல்பட்டனர். இக்குழுவினர்க்குத் தலைவர்…

விருதுகளுக்குத் தகுதியான இல.அம்பலவாணனின் புதினம்!

நூல் அறிமுகம்: ஆசைக்கோர் அளவில்லை!  இலக்கியம் காலம் காட்டும் கண்ணாடி என்பர். அவ்வகையில் குமுகாயத்தைப் படம் பிடித்துக் காட்டுவனவாகக் கதை இலக்கியங்கள் உள்ளன. அந்த வகையில் குமுக அவலங்களை நமக்குக் கண்முன் நிறுத்துபவராக எழுத்தாளர் முனைவர் இல.அம்பலவாணன் திகழ்கிறார். அவரது ஐந்தாவது புதினம் ‘ஆசைக்கோர் அளவில்லை’ என்பது. ஆசிரியர் அறிமுகம் புதின ஆசிரியரை அறிமுகப்படுத்துவதற்குக் காவியா சண்முகசுந்தரம் பதிப்புரையில் குறிப்பிட்டுள்ள பின்வரும் பகுதி சரியாக இருக்கும்: “அம்பலவாணன் நல்ல கதைசொல்லி. இயல்பாக – இனிதாக – இசைவாய்க் கதை சொல்பவர். பெயர்தல், பொட்டுவைத்த பொழுதில், தூய்மை,…

க௬. தமிழர் செய்ய வேண்டுவன?-திருத்துறைக் கிழார்

(கரு.  தடைச்சட்டமும் தமிழ் இனமும் 3/3: தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் புலவர் வி.பொ.பழனிவேலனார் ஆ.தமிழர் க௬. தமிழர் செய்ய வேண்டுவன? க. விலைகள் உயர்வை எதிர்த்து மறியல் செய்தல். உ. மதுக்கடைகளை எடுக்கக் கோரி ஆர்ப்பாட்டம்செய்தல்௩. உப்பு காய்ச்சுதல், உப்பு அள்ளுதல் போராட்டம்நடத்தல்.௪. வரிகொடாப் போராட்டம் நடத்தல்.ரு. காவிரிநீர் கொடாமலும், திருவள்ளுவர் படிமம்நாட்ட இசைவு கொடாமலும், கருநாடகத் தமிழர்பலரைக் காவு கொடுத்த கருநாடக அரசுடன்தமிழக அரசு எவ்வகை உறவும் வைத்துக்கொள்ளக் கூடாதென்று தமிழக அரசைவற்புறுத்தல்.௬. தமிழ்நாட்டில் வாழும் அயலாரையெல்லாம்வெளியேற்றுமாறும், இனி எவரையும்தமிழ்நாட்டில் குடியமர விடக்…

கரு.  தடைச்சட்டமும் தமிழ் இனமும் 3/3: திருத்துறைக் கிழார்

(கரு.  தடைச்சட்டமும் தமிழ் இனமும் 2/3: தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் புலவர் வி.பொ.பழனிவேலனார் ஆ.தமிழர் கரு.  தடைச்சட்டமும் தமிழ் இனமும் 3/3 ஆயின், ஆப்பிரிக்காவில் வாழும் ‘இந்தி’யர், அமெரிக்கா, இங்கிலாந்து முதலான அயல்நாடுகளில் உறையும் இந்தியர் (வடநாட்டார்)க்கு ஓர் இடர் என்றால் இந்திய அரசு எதிர்ப்புக்குரல்  எழுப்புவதும் குற்றமன்றோ? இராசீவு காந்தியின் இறப்பைச் சாக்காக வைத்து தமிழ்மக்களின் விடுதலை உணர்வையும், உயிரையும், பொருட்படுத்தாமல் மானங்காக்க, உரிமைபெறப் போராடும் ஈழத்தமிழரின் வீர உணர்வையும் மழுங்கடிக்க இந்திய அரசும், தமிழக அரசும் பாடுபடுவது நன்றன்று. இதனை முன்வைத்து…

பிறருக்காக வாழும் பேரருள் நெஞ்சம்! – இலக்குவனார் திருவள்ளுவன், தாய் மின்னிதழ்

சங்கப் புலவர்கள் பொன்னுரை – 27  ****** பிறர் நலத்திற்காக வாழ்க! பிறர்க்கு என முயலும் பேர் அருள் நெஞ்சமொடு காமர் பொருட்பிணிப் போகிய                            நற்றிணை 186 : 8-9 பிறருக்காக வாழும் பேரருள் நெஞ்சத்துடன் பொருளாசையைப் போக்கிய தலைவன். முழுப் பாடல்: கல்லூற்று ஈண்டல கயன்அற வாங்கிஇரும்பிணர்த் தடக்கை நீட்டி நீர்நொண்டுபெருங்கை யானை பிடியெதிர் ஓடும்கானம் வெம்பிய வறம்கூர் கடத்திடைவேனில்ஓதி நிறம்பெயர் முதுபோத்துப் 5பாண்யாழ்…

கரு.  தடைச்சட்டமும் தமிழ் இனமும் 2/3: திருத்துறைக் கிழார்

(கரு.  தடைச்சட்டமும் தமிழ் இனமும் 1/3: தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் புலவர் வி.பொ.பழனிவேலனார் ஆ.தமிழர் கரு.  தடைச்சட்டமும் தமிழ் இனமும் 2/3 இலங்கை அரசுடன் இந்தியா உடன்படிக்கை இந்திராகாந்தி இந்தியாவை ஆண்டகாலத்தில் தமிழ்நாட்டிற்குரிய கச்சத்தீவு இலங்கையரசிடம் விடப்பட்டது. தமழக அரசு வடவரக்கு அடிமையாயிருப்பதால் தட்டிக்கேட்கத் துணிவில்லை. கேட்டால் பதவி பறிபோகும்!  ஈழ விடுதலைப்புலிகள் போராட முற்பட்டனர். ஈழத்தமிழர் இளைஞர் பலர் படையில் சேர்ந்தனர். சிங்களர் அரசுடன் போர் தொடங்கினர். சிங்களர் திணறினர். இலங்கையரசால் தாக்குப் பிடிக்கவியலவில்லை. அமெரிக்கப் படைகள் தங்க இலங்கையில் இடமளிக்க முடிவு செய்தது…

சங்கப் புலவர்கள் பொன்னுரை – 26: தளர்ச்சியில்லாதவர் நட்பை வளர்த்துக் கொள்க! – இலக்குவனார் திருவள்ளுவன்

(சங்கப் புலவர்கள் பொன்னுரை – 25: செய்யாததைச் செய்ததாகக் கூறிப் புகழாதே! – தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 26: தளர்ச்சியில்லாதவர் நட்பை வளர்த்துக் கொள்க! “மெலிவில் உள்ளத்து உரனுடை யாளர் கேண்மையொடு இயைந்த வைகல் உளவா கியரோ” தமக்கெனப் பொருளைப் பதுக்கி வைக்கின்ற நல்லுள்ளம் இல்லாதவரோடான நட்பைக் கைவிட்டு, தளர்ச்சியில்லாத வலிமையுடையவர் நட்பை நாள்தோறும் வளர்த்துக் கொள்ள வேண்டும். புறநானூறு 190 ஆவது பாடல் பாடியவர்: சோழன் நல்லுருத்திரன் திணை: பொதுவியல் துறை: பொருண்மொழிக் காஞ்சி நெல் விளைச்சலின் பொழுது கதிர்களைக்…

கரு. தடைச்சட்டமும் தமிழினமும் 1/3: திருத்துறைக் கிழார்

(க௪.  தமிழர் என்றும் ‘இந்தி’யை ஏற்கமாட்டார் – திருத்துறைக் கிழார் : தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் புலவர் வி.பொ.பழனிவேலனார் ஆ.தமிழர் கரு.  தடைச்சட்டமும் தமிழ் இனமும் 1/3 தமிழக அரசு இன்று (28.01.1992) பயன்படுத்தும் தடைச்சட்டத்தைத் ‘தடா’ என்று இந்தியில்++ சொல்கின்றனர். ‘தடா’ என்றால் தடைசெய்யாத என்று தமிழில் பொருள்படும். ‘இந்தி’ தான் தமிழுக்கு எதிரியாயிற்றே! 21.05.1991 அன்று 10.50 மணிக்கு திரு மரகதம் சந்திரசேகரன் போட்டியிட்ட திருப்பெரும்புதூர் தொகுதிக்குத் தேர்தல்  பொழிவுக்கு திரு. இராசீவு காந்தி வந்தபோது மாலையில் வெடிவைத்துக் கொல்லப்பட்டார். அதன்…

செய்யாததைச்செய்ததாகக்கூறிப்புகழாதே!- பரணர்: இலக்குவனார் திருவள்ளுவன், தாய் இதழ்

(சங்கப் புலவர்கள் பொன்னுரை – 24: வருந்தி வருவோரிடம் அருள் உள்ளத்துடன் நடந்துகொள்க! – தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 25 செய்யாததைச்செய்ததாகக்கூறிப்புகழாதே! ”செய்யா கூறிக் கிளத்தல், எய்யாதாகின்று எம் சிறு செந்நாவே.” செய்யா=செய்யாதவற்றை, கிளத்தல்=பேசுதல், எய்யாதாகின்று=அறியாததாக ஆயிற்று, செய்யாததைச் செய்ததாகப் பாராட்டிக் கூறுதல் என் நா அறியாததாகும். அஃதாவது பொய்யாகப் புகழ்தல் புலவருக்கு வழக்கமில்லை என்கிறார். நாமும் இதைப் பின்பற்றி ஒருவர் செய்யாததைச் செய்ததாகக் கூறிப் பாராட்டக் கூடாது. *** கண்டீரக் கோப்பெருநள்ளி கடையெழு வள்ளல்களுள் ஒருவராகப் போற்றப்படுபவர். நள்ளியிடம் சென்று புலவர்…

க௩. போலித் தமிழர் – திருத்துறைக் கிழார்

(கஉ. இந்திய அரசே, தமிழினத்தைப் பழிவாங்காதே!  – திருத்துறைக்கிழார்- தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள்புலவர் வி.பொ.பழனிவேலனார் ஆ.தமிழர் க௩. போலித் தமிழர் இன்று  தமிழ் நாட்டில் பலவகையான மக்கள் வாழ்கின்றனர். கிறித்தவர், இசுலாமியர், இந்துக்கள், சமணர், சீக்கியர், பௌத்தர் முதலிய மதத்தினரும், முதலியார், நாயக்கர், இரெட்டியார், நாயுடு, மராட்டியர், வேளாளர், தேவாங்கர், வன்னியர், கள்ளர், மறவர், நாடார், கௌடர், படையாட்சி, பள்ளர், பறையர், அம்பலக்காரர், முத்தரையர், பார்ப்பனர் முதலிய பல குலத்தினரும், தெலுங்கர், மலையாளர், கன்னடர், தமிழர், ஆங்கிலர், இந்தியர், மராட்டியர், சௌராட்டிரர், குசராத்தியர், சமற்கிருதர்…

சங்கப் புலவர்கள் பொன்னுரை – 24: வருந்தி வருவோரிடம் அருள் உள்ளத்துடன் நடந்துகொள்க!  – இலக்குவனார் திருவள்ளுவன்

(சங்கப் புலவர்கள் பொன்னுரை – 23: சான்றோர் பக்கமே சான்றோர்சேருவர்! – தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 24 வருந்தி வருவோரிடம் அருள் உள்ளத்துடன் நடந்துகொள்க! “வல்லார் ஆயினும், வல்லுநர் ஆயினும், வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி, அருள வல்லை ஆகுமதி”               புறநானூறு – 27 : 15 – 17 பாடியவர் :  உறையூர் முதுகண்ணன் சாத்தனார். பாடப்பட்டோன் :  சோழன் நலங்கிள்ளி. திணை :   பொதுவியல். துறை :   முதுமொழிக் காஞ்சி. வல்லவர் ஆயினும், வல்லவர் அல்லர் ஆயினும்…

1 2 58