மும்மொழித்திணிப்பு எதிர்ப்பு இணைய உரையரங்கம்
மும்மொழித்திணிப்பு எதிர்ப்பு இணைய உரையரங்கம் மாசி 07, 2054 / 19.02.2023 காலை 10.00 கூட்ட எண் Meeting ID: 864 136 8094 கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன் தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன் எதிர்ப்புரைகள்: முனைவர் நா.இளங்கோ முனைவர் வெற்றிச் செழியன் தோழர் தமிழ்க்கதிர் நிறைவுரை: தோழர் தியாகு நன்றியுரை: திருவாட்டி புனிதா சிவக்குமார் தமிழ்க்காப்புக் கழகம் தமிழ்நாடு–புதுச்சேரி தமிழ் அமைப்புகள்
மொழிப்போராளிகள் புகழ் போற்றி இணைய உரையரங்கம்
தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய மன்னுயிர் எல்லாம் தொழும் (திருவள்ளுவர், திருக்குறள் 268) மொழிப்போராளிகள் புகழ் போற்றி இணைய உரையரங்கம் தை 08, 2054 ஞாயிறு 22.01.2023 காலை 10.00 மணி கூட்ட எண்: 864 136 8094 ; புகு எண்: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09(map) வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன், செயலர், தமிழ்க்காப்புக் கழகம் தலைமையுரை : இலக்குவனார் திருவள்ளுவன் புகழ் போற்றுநர் : வழ.பால சீனிவாசன் முனைவர் தமிழ் வேலு மும்பை இசைக்கலைஞர் இராணிசித்திரா மாணவர் தமிழ் கார்த்தி…
இந்தி எதிர்ப்புத் தீர்மானம்: முதல்வருக்கும் பேரவையினருக்கும் பாராட்டு! எனினும் . . . .- இலக்குவனார் திருவள்ளுவன்
முதல்வர் தலைமையில் தேசிய மொழிகள் ஆட்சிமொழிச் செயலாக்கக் குழு அமைக்க வேண்டும்! நேற்றைய சட்டமன்ற நாள்(ஐப்பசி 01,2053/18.10.2022) மொழிப்போர் வரலாற்றில் முதன்மையான நாள்களுள் ஒன்றாகும். நேற்று சட்டப்பேரவையில் இந்தி எதிர்ப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிக்கத்தக்கதாகும். தீர்மானத்தை முன் மொழிந்து முதல்வர் மு.க.தாலின், “மொழி என்பது, நமது உயிராய், உணர்வாய், விழியாய், நம் அனைவரின் எதிர்காலமாய் இருக்கிறது. . . . ஆட்சி நிருவாகத்தில் இந்தியைத் திணிப்பது தொடங்கிக், கல்வி மூலமாகத் திணிப்பது வரை, தாங்கள் ஆட்சிக்கு வந்ததன் நோக்கமே இந்தியைத் திணிப்பதுதான் என்று நினைக்கிறார்கள். …
‘ஒன்றிய அரசின் இந்தித்திணிப்புகள்’ தலைப்பிலான கட்டுரைப் போட்டி
‘ஒன்றிய அரசின் இந்தித்திணிப்புகள்’ தலைப்பிலான கட்டுரைப் போட்டி 17.11.2022 அன்று வரும் உலகத்தமிழ் நாளையும் தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் 123 ஆவது பிறந்த நாளையும் முன்னிட்டு, ‘ஒன்றிய அரசின் இந்தித்திணிப்புகள், முற்றாக ஒழிப்பதற்கான தீர்வுகள்’ என்னும் தலைப்பிலான கட்டுரைப்போட்டியைத் தமிழ்க்காப்புக் கழகமும் இலக்குவனார் இலக்கிய இணையமும் இணைந்து நடத்துகின்றன. ஏ4 அளவில் 4 பக்கம் குறையாமல் 6 பக்கம் மிகாமல் கட்டுரை இருத்தல் வேண்டும். இந்திய விடுதலை நாளில் இருந்து ஒன்றிய அரசு செய்துவரும் இந்தித்திணிப்புகளையும் அவற்றால் தேசிய மொழிகளுக்கு ஏற்பட்டு வரும் இடர்களையும்…
தமிழ்ப்பெயர் சூட்டாதாரை இரும்புக் கரம் கொண்டு அடக்கிடுக! – இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழ்ப்பெயர் சூட்டாதாரை இரும்புக் கரம் கொண்டு அடக்கிடுக! உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது கொள்வாரும் கள்வரும் நேர் (திருவள்ளுவர், திருக் குறள் 813) பயன்கருதிப் பழகுநருக்கும் பரத்தையருக்கும் கள்வருக்கும் ஒப்பாகத் தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தாமல் பிற மொழிச்சொற்களைப் பயன்படுத்துவோரைக் கூறலாம். ஏனெனில் அவர்கள் தமிழ்ச்சொற்களை மக்கள் பயன்படுத்த இயலா வண்ணம் கவர்ந்து அகற்றி விடுகிறார்கள். பொதுநலம் பார்க்காமல் பிறருக்குப் பொதுவாக இருந்து புன்னலம் தோயும் விலைமக்களுக்கு ஒப்பாகத் தமிழ் நலம் பார்க்காமல் வாழ்கிறார்கள். குமரி முதல் இமயமலை வரை வழங்கி வந்த தமிழ் மொழி,…
இந்தி கலந்து எழுதுவோரை இருட்சிறையில் தள்ளிடுக! – இலக்குவனார் திருவள்ளுவன்
இந்தி கலந்து எழுதுவோரை இருட்சிறையில் தள்ளிடுக! “சமையல் குறிப்பாளர்களைத் தூக்கிலிடுக” என்று எழுத எண்ணினேன். அத்தகைய கடுஞ்சினத்திற்குக் காரணம் சமையல் குறிப்பு என்ற பெயரில் சமையல் பொருள்களை எல்லாம் இந்திச் சொற்களாலேயே குறிப்பிடுகின்றனர். . . . . . . . . . . . . . . . . . . எடுத்துக் காட்டிற்குச் சில குறிப்புகளைப் பார்ப்போம். “சுகர் பேசண்ட்சு” “முளைத்த கிராம்சு, பச்சை மூங் பருப்பு” “முளைத்த மேத்தி முளைத்த கிராம்சு”, “முளைத்த மேத்தி…
தமிழனின் மொழிப்போர் எதற்காக? – இலக்குவனார் திருவள்ளுவன், இன்றைய(25/01) உரை
திராவிடர் ஒன்றியச் சமத்துவக் கழகம் இணையவழிக் கருத்தரங்கம் 37 தை 12, 2053 / செவ்வாய் / 25.01.2022 / மாலை 6.30 குறி எண் : 894 6054 6548 கடவு எண் : 202020 வலையொளி நேரலை : Dhiravidam 1944 தலைமை: தகடூர் சம்பத்து சிறப்புரை : இலக்குவனார் திருவள்ளுவன் “தமிழனின் மொழிப்போர் எதற்காக?” தொடர்பு : 8939 59 4500
மொழிப்போராளிகள் புகழ் போற்றி இணைய அரங்கம் + பாவாணன் உரை
தமிழே விழி ! தமிழா விழி ! …
உபநிடதங்கள் உயர்ந்தவையா?, இணையக் கூட்ட நாள் 06.06.2021
தேசியமொழிகள் பாதுகாப்புப் பன்னாட்டுக் கருத்தரங்கம், தை 2052
ஒப்பிலக்கியத்தில் கால ஆராய்ச்சியும் கட்டாயம் தேவை! – இலக்குவனார் திருவள்ளுவன்
ஒப்பிலக்கியத்தில் கால ஆராய்ச்சியும் கட்டாயம் தேவை! ஒப்பிலக்கியம் அல்லது ஒப்பியல் இலக்கியம் என்பது இலக்கிய ஆராய்ச்சிகளில் இடம் பெறுவது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. அமெரிக்க இந்தியானா பல்கலைக்கழகப் பேராசிரியர் எச்.எச்.இரீமாக்கு ((H.H.Remack), “ஒப்பிலக்கியம் என்பது ஒரு நாட்டின் இலக்கியத்தை இன்னொரு நாட்டு இலக்கியத்தோடு ஒப்பிடுவது; இலக்கியங்களுக் கிடையேயான உறவுகளை ஒரு பக்கமும், குமுகாயவியல் தத்துவம் போன்ற துறைகளை இன்னொரு பக்கமுமாக ஒப்பிட்டுக் கூறுவது ; இலக்கியத்திற்கும், இசை, ஓவியம், கூத்து போன்ற கலை வடிவங்களுக்குமிடையேயான உறவுகளைக் கூறுவது” என்கிறார். பொதுவாக ஒரு நாட்டு…
மொழிப்போர் நாள் கொண்டாட நமக்குத் தகுதி உள்ளதா? – இலக்குவனார் திருவள்ளுவன்
மொழிப்போர் நாள் கொண்டாட நமக்குத் தகுதி உள்ளதா? தமிழ்க்காப்பு மொழிப்போரில் உயிர் நீத்தவர்களுக்கும் சிறைப் பட்டவர்களுக்கும் இன்னல் உற்றவர்களுக்கும் நம் வீர வணக்கங்கள்! மொழிப்போர் நாள் கொண்டாடுவதால் நாம் புத்துணர்வு பெறவும் வரும் தலைமுறையினர் வரலாறு அறிந்து மொழி காப்புப்பணியில் ஈடுபடவும் வாய்ப்பு இருப்பின் அதனை வரவேற்கலாம். ஆனால், ஒரு சடங்காக அதனைக் கொண்டாடுகிறோம். அதனைக் கொண்டாடுபவர்களுக்கும் பங்கேற்பவர் களுக்கும் மொழிக்காப்பு உரிமையைப் பெற வேண்டும் என்ற உணர்வுதான் இல்லை. அவ்வாறிருக்க ஆரவாரக் கொண்டாட்டத்தால் என்ன பயன்? இந்தி எதிர்ப்புப் போராட்டத்தினால் சிறையடைப்புக் காலத்தில்…