(வெருளி நோய்கள் 821-825: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 826-830 பூச்சிகளின் கொடுக்கு அல்லது தாவரங்களின் முள்ளிழை முதலான குத்துமுனைகள் குறித்த அளவு கடந்த பேரச்சம் குத்துமுனை வெருளி.வெருளிக்குக் காரணமான ஒரு பகுதியைக மட்டும் கருத்தில் கொண்டு நேர் பொருளாகக் கொடுக்கு வெருளி(Cnidophobia) எனக் குறித்திருந்தேன். ஆனால் பூனைக்காஞ்சொறிச் செடி வகை செடி கொடிகளின் குத்தும் முள்ளிழைக்கும் நச்சுப் பூச்சிகளின் கொட்டுமுனைகளுக்கும் பொதுவான குத்து முனை என்பதை இப்பொழுது பயன்படுத்தி உள்ளேன்.00 குத்தப்படுவோம் எனப் பேரச்சம் கொள்வது குத்து வெருளி.grothia, gronthokopo, ஆகிய கிரேக்கச் சொற்களின்…