வெருளி நோய்கள் 831-835: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 826-830) வெருளி நோய்கள் 831-835 குப்பைத் தொட்டி(dumpster) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் குப்பைத் தொட்டி வெருளி.குப்பைத்தொட்டியில் உள்ள குப்பை, கூளம், செத்தை, அழுகல் பொருள், கழிவு போன்றவற்றால் எற்படும் தீ நாற்றம் குறித்து அ்ருவருப்பு அடைந்து வெருளிக்கு ஆளாகின்றனர். குப்பைத் தொட்டி காலியாக இருந்தாலும் இவை குறித்த எண்ணத்தால் வெருளி கொள்வர்.காண்க: குப்பை வெருளி-Purgamentophobia00 குப்பை வாளி(trash can) குறித்த வரம்பற்ற பேரச்சம் குப்பை வாளி வெருளி.குப்பைத் தொட்டி வெருளி போன்றதுதான் குப்பை வாளி வெருளி. குப்பை வாளியில் உள்ள குப்பை,…

வெருளி நோய்கள் 826-830: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 821-825: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 826-830 பூச்சிகளின் கொடுக்கு அல்லது தாவரங்களின் முள்ளிழை முதலான குத்துமுனைகள் குறித்த அளவு கடந்த பேரச்சம் குத்துமுனை வெருளி.வெருளிக்குக் காரணமான ஒரு பகுதியைக மட்டும் கருத்தில் கொண்டு நேர் பொருளாகக் கொடுக்கு வெருளி(Cnidophobia) எனக் குறித்திருந்தேன். ஆனால் பூனைக்காஞ்சொறிச் செடி வகை செடி கொடிகளின் குத்தும் முள்ளிழைக்கும் நச்சுப் பூச்சிகளின் கொட்டுமுனைகளுக்கும் பொதுவான குத்து முனை என்பதை இப்பொழுது பயன்படுத்தி உள்ளேன்.00 குத்தப்படுவோம் எனப் பேரச்சம் கொள்வது குத்து வெருளி.grothia, gronthokopo, ஆகிய கிரேக்கச் சொற்களின்…

வெருளி நோய்கள் 821-825: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 816-820: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 821-825 குட்டையர் பற்றிய காரணமற்ற பேரச்சம் குட்டையர் வெருளி.“கள்ளனை நம்பினாலும் குள்ளனை நம்பாதே” என்பது பழமொழி. குள்ள உருவத்தில் வாமனனாகத் தோற்றம் எடுத்து சேர மன்னனையே(மகாபலி) ஏமாற்றியவன் திருமால். எனவேதான் கள்ளத்தனம் செய்வோரை நம்பினாலும் குள்ளனை நம்பாதே எனப் பழமொழி வந்தது. ஆனால் இக்கதையைப் புரிந்து கொள்ளாமல் குட்டையாக இருப்பவர்கள்பற்றி அஞ்சுவோர் உள்ளனர்.00 தங்களைக் கவர்ச்சியாளர்களாக எண்ணிக்கொண்டுள்ள உண்மையில் பருத்த தோற்றம் உடைய அழகற்ற பெண்களைக் கண்டால் வரும் தேவையற்ற பேரச்சம் குண்டுப்பெண் வெருளி.குண்டுப் பெண்களில்…

வெருளி நோய்கள் 816-820: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 811-815: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 816-820 குடும்ப மர வலைத்தளங்கள் குறித்தும் உருவாக்கநர் குறித்தும் அளவுகடந்த தேவையற்ற பேரச்சம் கொள்வது குடும்ப மர வெருளி.தடத்தள வெருளி(Oikoechophobia) என்பது குடும்பர மர உருவாக்கல் தொடர்பான குறிப்பிட்ட -குடும்பத்தடம் – வலைத்தளம் பற்றியது. இது பொதுவாகக் குடும்ப மரம்(Family Tree) குறித்த எல்லா வலைத்தளங்கள் பற்றியது.00 கண்ணாடிக் கொள்கலனில் வளர்க்கப்படும் பயிர்கள் குறித்த தேவையற்ற அளவுகடந்த பேரச்சம் குடுவைப்பயிர் வெருளி.கண்ணாடிக் குடுவைப் பயிர் என்னும் பொருள் கொண்ட terrarium என்ற சொல்லில் இருந்து Terraro…

வெருளி நோய்கள் 811-815: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 806-810:  தொடர்ச்சி) வெருளி நோய்கள் 811-815 குடிநீர் ஊற்று தொடர்பான அளவுகடந்த பேரச்சம் குடிநீர் ஊற்று வெருளி.சீன மொழியில் shui என்றால் தண்ணீர் எனப் பொருள்.“Yinshui” என்றால் தண்ணீர் குடிக்க என்று பொருளாகும்.நீர் வெருளி உள்ளவர்களுக்குக் குடிநீர் ஊற்று வெருளி வரும் வாய்ப்புள்ளது.00 போதைநீர்களைக் குடிப்பது தொடர்பான இயல்பு மீறிய பேரச்சம் குடிப்பு வெருளி.குடிப்பு என்பது மதுவகைகளைக் குடிப்பதைக் குறிக்கிறது. மதுப் பழக்கத்தைக் கைவிடாமல் அதே நேரம், குடிப்பழக்கம் தொடர்பில் அளவுமீறிய பேரச்சம் கொள்வதே இது.குடிப்பழக்கத்தின் தீமைகளை அறிந்தே குடித்துக்கொண்டு அதற்கு…

வெருளி நோய்கள் 806-810: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 801-805: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 806-810 குச்சிப் பனி மீதான மிகையான பேரச்சம் குச்சிப் பனி வெருளி .இதனை உருவாக்கும் நிறுவனப் பெயரில் பாப்புசிக்கில் வெருளி என்றும் சொல்வதுண்டு.00 குடல் செயல்பாடு தொடர்பான அளவுகடந்த தேவையற்ற பேரச்சம் குடலியக்க வெருளி.Defecalgesiophobia என்றால் குடல் நோவு வெருளி எனலாம். எனினும் ஒத்த பொருளை இருவகையாகச் சொல்வதை விடக் குடலிறக்க வெருளி என்றே அழைக்கலாம்.de என்னும் இலத்தீன் சொல்லின் பொருள்கள் இருந்து / இடத்திலிருந்து/முதலாக முதலியன. fec என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் குடலினின்றும்…

வெருளி நோய்கள் 801-805: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 796-800: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 801-805 கிறுகிறுப்பு தொடர்பான தேவையற்ற அளவுகடந்த பேரச்சம் கிறுகிறுப்பு வெருளி.நீர்ச்சுழற்சி அல்லது தலை சுற்றல் தொடர்பான பேரச்சத்தையும் குறிக்கும்.இரண்டிற்கும் பொதுவான சுழற்சி அடிப்படையில் முதலில் சுழற்சி வெருளி எனக் குறித்திருந்தேன். நீர்ச்சுழியாகிய நீர்ச்சுழற்சியைப்பார்க்கும் பொழுது தலை கிறு கிறு எனச் சுற்றுவதால் அல்லது தலை சுற்றும் என அஞ்சுவதால் வரும் பேரச்சத்தைத்தான் இது குறிக்கிறது. எனவே சுற்றல் வெருளி என்பதை விட கிறுகிறு வெருளி என்பது இன்னும் பொருத்தமாக இருக்கும் என்பதால் அதனைக் குறித்துள்ளேன்.கிறுகிறுப்பு வரும்…

வெருளி நோய்கள் 796-800: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 791-795 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 796-800 கிறித்துப் பிறப்பு நாள் குறித்த பேரச்சம் கிறித்துநாள் வெருளி. கிறித்துப்பிறப்பு(கிறித்துமசு) கொண்டாட்டங்கள் குறித்த பெருங்கவலையும் பேரச்சமும் சிறாருக்கே மிகுதியாக வருகிறது.கிறித்துப் பிறப்பு வெருளி என்றால் கிறித்து பிறந்தது குறித்த பேரச்சம் என்றாகிறது. கிறித்துப் பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்த பேரச்சத்தைத்தான் இங்கே குறிக்கிறது. எனவே, சுருக்கமாகக் கிறித்து நாள் என்பது சரியாக இருக்கும்.00 கிறித்துப்பிறப்பு விளக்கு குறித்த வரம்பற்ற பேரச்சம் கிறித்துப்பிறப்பு விளக்கு வெருளி.கிறித்து நாள் வெருளி உள்ளவர்களுக்குக் கிறித்துப்பிறப்பு விளக்கு வெருளி வரும் வாய்ப்பு…

வெருளி நோய்கள் 791-795: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 786-790: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 791-795 கிழக்கு தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கிழக்கு வெருளி/ கீழ்த்திசைச் செலவு வெருளி. கிழக்கே பயணம் செய்தால், கிழக்குத் திசையில் எதையும் செய்தால் தீமை நிகழும் என்ற பேரச்சம். ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு கோள்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. சில நாள், சில கோள்களின் ஆற்றல் குறைந்திருக்கும். அந்த நாளில் பயணம் மேற்கொள்ளக்கூடாது என்பது கணிய/சோதிடப் பித்தர்களின் நம்பிக்கை. இந்தியாவில் கணிய(சோதிட)ப் பற்றர்கள், திங்கட் கிழமைகளிலும் சனிக்கிழமைகளிலும் கிழக்குத் திசையில் பயணம் செய்ய மாட்டார்கள். இதனைக்  ‘கிழக்கே…

வெருளி நோய்கள் 786-790: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 781-785 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 786-790 கிண்ண வெதுப்பம்(muffin) குறித்த வரம்பற்ற பேரச்சம் கிண்ண வெதுப்ப வெருளி.உணவு வெருளி(Cibophobia) உள்ளவர்களுக்குக் கிண்ண வெதுப்ப வெருளி வரும் வாய்ப்பு உள்ளது. கிண்ணவெதுப்பன்(The Muffin Man) மழலைப்பாடல்களை அடிப்படையாகக் கொண்ட திகில் தொடரில் எதிராளராக வருபவன். சிலர் இதனை அதனடிப்படையில் கிண்ண வெதுப்பன் வெருளி என்கின்றனர்.கிலி வெருளி உள்ளவர்களுக்குக் கிண்ண வெதுப்பன் வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.00 கிராண்டு தாம்பசன்(Grant Thompson)என்னும் இளைஞர் மீதான அளவுகடந்த பேரச்சம் கிராண்டு தாம்பசன் வெருளி.நேர்ப்பு மன்னர் வெருளி(The…

வெருளி நோய்கள் 781-785: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 776-780 தொடர்ச்சி0 வெருளி நோய்கள் 781-785) 781. கிச்சிலிச் சாறு வெருளி – Chymoportokaliphobia கிச்சிலிப் பழச் சாறு(orange juice) குறித்த வரம்பற்ற பேரச்சம் கிச்சிலிச் சாறு வெருளி. Chymo என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் சாறு. Portokali என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள் கிச்சலிப் பழம் (ஆரஞ்சு). கிச்சிலிப் பழ வெருளி – Portokaliphobia  00 782. கிடப்பு வெருளி – Adhaesitophobia  செயல்பாடின்றிக் கிடப்பில் போடுதல் அல்லது நின்று போதல் தொடர்பான தொடர்பான வரம்பற்ற  கிடப்பு வெருளி எனப்படும். Adhaesito…

வெருளி நோய்கள் 776-780: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 771-775: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 776-780 காற்று வீச்சு தொடர்பான அளவுகடந்ததேவையற்ற பேரச்சம் காற்று வெருளி.சிறு பருவத்தில் காற்று, சூறைக்காற்று, சூறாவளிக் காற்று, புயல் காற்று முதலியவற்றால் ஏற்பட்ட ஊறு உள்ளத்தில் ஆழ் மனத்தில் பதிந்து அதனால் காற்று வெருளி உண்டாகிறது. காற்று என்பது கொல்வதற்கு அல்லது அழிப்பதற்கு என்று எண்ணிக் காற்று மீது தேவையற்ற பேரச்சம் கொள்கின்றனர்.புயல் வெருளி(Procellaphobia), கடும்புயல் வெருளி(Tempestaphobia), சூறாவளி வெருளி(Lilapsophobia), சூறைக்காற்று வெருளி( Cyclonophobia) முதலானவற்றையும் காண்க.குட காற்று எறிந்த குப்பை, வட பால் (பெரும்பாண் ஆற்றுப்படை…

1 2 4