வெருளி நோய்கள் 729-733: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய் 724-728: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 729-733 729. காசாளர் வெருளி – Tamiaphobia காசாளர் (cashier) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் காசாளர் வெருளி. கிரேக்க மொழியில் tamஅas என்றால் காசாளர் என்று பொருள். 00 730. காசு வெருளி – Cuprolaminophobia காசு தொடர்பான அளவுகடந்த பேரச்சம் காசு வெருளி. காசுகள் மாழையில் செய்யப்படுவதால் மாழை வெருளி(Metallophobia)க்கும் இவர்கள் ஆளாவர். காசுகள் பணமதிப்பின் ஒரு பகுதி என்பதால் பண வெருளி(Chrometophobia/Chrematophobia)க்கும் ஆளாவர். Cuprum என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் செம்பு( )…

வெருளி நோய்கள் 724-728: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 723: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 724-728 கன்னெய்(gasoline/ petrol) பற்றிய அளவு கடந்த பேரச்சம் கன்னெய் வெருளி.கல்+நெய் = கன்னெய்.கன்னெய்யில் எரிநறா(எத்தனால்) அல்லது வேறு எதுவும் கலந்திருக்கலாம் என்ற அச்சத்தாலும் கன்னெய்மீது பேரச்சம் வருவதுண்டு. வளி நிலைய வெருளி(Aerostatiophobia) உள்ளவர்களுக்கும் கன்னெய் வெருளி வர வாய்ப்பு உள்ளது.00 (தொடரும்) இலக்குவனார் திருவள்ளுவன் வெருளி அறிவியல் 2/5

வெருளி நோய்கள் 723 கனவு வெருளி: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 719 -722 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 723 723. கனவு வெருளி-Oneirophobia கனவு தொடர்பான பெருங்கவலையும் தேவையற்ற பேரச்சமும் கனவு வெருளி. கனவு பற்றிய இயல்புக்கு மீறிய பேரச்சமே கனவு வெருளி. உறங்கினால் தீய கனவுகள், பேய்க்கனவுகள் வரும், மார்பில் பேய் அமர்ந்துஅழுத்தி மூச்சுத்திணற வைக்கும் என்பன போனற் அச்சங்களால் தூங்குவதற்குக்கூட அச்சம் கொள்வர்.நல்ல எண்ணங்களை மனத்தில் கொண்டு படுக்கச் சென்றால் கனவு வெருளி வர வாய்ப்பில்லை. அச்சம் தரும் கதைகளையும் செய்திகளையும் படித்தலும் கேட்டலும் ஒரு முறை கெட்டக் கனவு…

வெருளி நோய்கள் 714 -718 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 709 -713 :  தொடர்ச்சி) வெருளி நோய்கள் 714 -718 714. கறி அப்ப வெருளி  – Hamburgerphobia கறி அப்பம்(Hamburger) மீதான மிகையான பேரச்சம் கறி அப்ப வெருளி. மாட்டுக்கறி பயன்படுத்தப்பட்டிருக்குமோ என்று இந்துக்களும் பன்றி இறைச்சி பயன்படுத்தப்பட்டிருக்குமோ என்று இசுலாமியர்களும் கருதிக் கறிஅப்பம் மீது அளவுகடந்த பேரச்சம் கொள்கின்றனர். 00  715. கறித்துண்ட வெருளி – Biftekiphobia கறித்துண்டம்(steak) தொடர்பான வரம்பற்ற பேரச்சம் கறித்துண்ட வெருளி. காந்திநேவியன்(Scandinavian) மொழியில் steik என்றால் கறித்துண்டம் எனப் பொருள். 00  716….

வெருளி நோய்கள் 709 -713 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 704 -708 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 709 -713 709. கழுவுத் தூள்  வெருளி-Wajjeophobia ஏனம் கழுவிக்கான தேய்ப்புத்தூள் (dishwasher detergent) தொடர்பான அளவு கடந்த பேரச்சம் கழுவுத் தூள் வெருளி. தேய்ப்புத் தூள் என்றால் கைகளால் பாத்திரங்களை அலம்பும் பொழுது பயன்படுத்தும் தூளைக் குறிக்கும். காண்க: கழுவு நீர்ம  வெருளி – Xiwophobia 00  710. களவு வெருளி – Cleptophobia/Kleptophobia நம்மிடம் இருந்து யாரும் திருடி விடுவார்கள் என்ற அச்சமும் நாம் யாரிடமிருந்தாவது திருடுவோம் என்ற அச்சமும்…

வெருளி நோய்கள் 704 -708 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 699-703: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 704 -708 704. கழுதை வெருளி-Gaidouriphobia கழுதை தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கழுதை வெருளி. கழுதை உதைத்து வீழ்த்தி விடும் என்று தேவையின்றிப் பேரச்சம் கொள்கின்றனர். Gaidouri என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் கழுதை. 00 705. கழுதைக் குரங்கன் வெருளி – Donkeykongphobia காணாட்டங்களில் இடம்பெறும் புனைவுரு கழுதையான  கழுதைக் குரங்கன் (Donkeykong) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கழுதைக் குரங்கன் வெருளி. 00 706. கழுதைப்புலி வெருளி – Yainaphobia கழுதைப்புலிபற்றிய காரணமற்ற அளவுகடந்த பேரச்சம்…

வெருளி நோய்கள் 699-703: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 694-698: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 699-703 699. கழித்தல் வெருளி – Subtractionphobia கழித்தல் குறித்த வரம்பற்ற பேரச்சம் கழித்தல் வெருளி. கணக்கு வெருளி உள்ளவர்களுக்குக் கழித்தல் வெருளியும் வருகிறது. கடன்வாங்கிக் கழித்தல் முதலான கணக்கு புரியாமல் கழித்தல் கண்டு அஞ்சுகின்றனர். எனவே, கழித்தல் என்றாலே தேவையற்ற காரணமற்ற அளவுகடந்த அச்சத்திற்கு ஆளாகின்றனர். 00  700. கழிவறை வெருளி –  Toualetaphobia   கழிவறைபற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் கழிவறை வெருளி. தூய்மையின்மை, நாற்றம், நோய்த்தொற்று குறித்த கவலை போன்றவற்றால் கழிவறைபற்றிய அளவுகடந்த தேவையற்ற…

வெருளி நோய்கள் 694-698: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 689-693 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 694-698 694. கவர்மகர வெருளி – Zestorhodophobia கவர்மகர நிறம் தொடர்பான காரணமற்ற அளவுகடந்த பேரச்சம் கவர்மகர வெருளி. மகரநிற வெருளி அந்நிறத்தின் எல்லாச் சாயையும்() கொண்டிருக்கும். ஆனால், கவர்மகர வெருளி அதிலிருந்து மாறுபட்டது.  எழுச்சியூட்டும் நிறமாகப் பிறரைக் கவர்வதாக அமைவது. zesto என்னும் கிரேக்கச் சொல்லிற்குக் கவர்ச்சியான என்று பொருள். rhodophobia என்பது மகர நிற வெருளி. 00 695. கவலை வெருளி – Anisychiaphobia  கவலை குறித்த வரம்பற்ற பேரச்சம் கவலை வெருளி….

வெருளி நோய்கள் 689-693: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 684-688: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 689-693 689. கலை வெருளி – Artemophobia கலை தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கலை வெருளி இசை வெருளி, நாட்டிய வெருளி, நாடக வெருளி முதலான கலை தொடர்பான வெருளி உள்ளவர்களுக்குக் கலை வெருளி இருக்கவும் வாய்ப்புள்ளது. கலைகள் வழியாக ஆட்சிக்கு எதிரான புரட்சிக்குரல், கலகக் குரல், முதலானவை எழுப்பப்படும் என ஆட்சியாளர்களுக்கும் முற்போக்குக் கருத்துகள் பரப்பப்படும் என மதவாதிகளுக்கும் பிற்போக்கு வாதிகளுக்கும் கலை வெருளி உண்டாக வாய்ப்புள்ளது. 00  690. கலைமான் வெருளி –…

வெருளி நோய்கள் 684-688: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 679-683: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 684-688 684. கலவை வண்டி வெருளி – Seemptuophobia கற்காரை கலவை வண்டி (cement truck) தொடர்பான அளவு கடந்த பேரச்சம் கலவை வண்டி வெருளி. கற்காரை கலவை(concrete mixer/cement mixer)வண்டி, கற்காரை சுமை வண்டி(cement truck) எனப்படுகிறது. எனினும் கற்காரையைச் சுமந்து செல்லும் பார வண்டியே கற்காரை சுமை வண்டி. வேறு எதையாவது சுமந்து செல்லும் பொழுது அப்பொருளின் பெயரில் அழைக்கப்பெறும்.  எனவே, இங்கே இது கலவை வண்டியையே குறிக்கிறது. 00  685. கலவைப்பண்ட வெருளி…

வெருளி நோய்கள் 679-683: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 674-678: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 679-683 679. கரையான் வெருளி-Isopterophobia கரையான் முதலான மரம் அரிப்புப் பூச்சிகள் மீதான அளவுகடந்த பேரச்சம் கரையான் வெருளி. பூச்சிகளால் அரிக்கப்படாத மரக்கலன்கள் என்று உறுதி அளித்தாலும் சிலர் பூச்சிகள் அரிக்கப்படும் என்று பேரச்சத்தில்தான் இருப்பர். 00 680. கலங்கரை விளக்க வெருளி – Hotatsosphobia கலங்கரை விளக்கம் குறித்த வரம்பற்ற பேரச்சம் கலங்கரை விளக்க வெருளி. உயர வெருளி உள்ளவர்களுக்குக் கலங்கரை விளக்கவெருளி வருகிறது. 00  681. கலப்பி வெருளி – Blenderphobia/Blendaphobia கலப்பான்/கலப்பி…

வெருளி நோய்கள் 674-678: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 669-673: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 674-678 674. கருவண்ண வெருளி-Melanophobia கருநிறத்தைக் கண்டு ஏற்படும் தேவையற்ற பேரச்சம் கருவண்ண வெருளி. கரு வண்ணத்தைத் துயரத்தின் அடையாளமாகக் கருதுவதாலும் துன்பத்தின் குறியீடாகக் கருதுவதாலும் சிலருக்குக் கரு வண்ணத்தைக் கண்டால் வெறுப்பும் அச்சமும் வருகிறது. பல நாடுகளில் நீதிமன்றங்களில் நீதிபதிகள், வழக்குரைஞர்கள் முதலானவர்களின் மேலாடையின் நிறம் கருப்பு. இது அங்கே அதிகாரத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. இதனாலும் கருப்பு நிறம் கண்டு பேரச்சம் கொள்வோர் உள்ளனர். கருப்புதான் எனக்குப்பிடித்த வண்ணம் என்ற முறையில் வெற்றிக்கொடி கட்டு என்னும்…