வெருளி நோய்கள் 891-895: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 886-890: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 891-895 கூட்டாட்சி, கூட்டுரிமைக் குடியிருப்பு, கூட்டாண்மை(condominium) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கூட்டாண்மை வெருளி.00 புனைவுரு இசுகூபி -டூ (Scooby Doo) குறித்த வரம்பற்ற பேரச்சம் கூபிவெருளி.(இசு)கூபி-டூ (Scooby-Doo) என்பது அமெரிக்க இயங்குபடத் தொடராகும்.00 கூம்பு தித்தி குறித்த வரம்பற்ற பேரச்சம் கூம்பு தித்தி வெருளி1880 இல் இஃது முதலில் உற்பத்தியான பொழுது இதன் பெயர் கோழித்தீனி(Chicken Feed) என்பதுதான். கற்கண்டு நிறுவனம் (Wunderlee Candy Company) ஒன்று இதனை உற்பத்தி செய்தபொழுது அந்நிறுவனப் பெயரையும் இதன்…
வெருளி நோய்கள் 886-890: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 881-885: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 886-890 கூட்டத்தைக் கண்டு ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம் கூட்ட வெருளி.பொதுவிட வெருளி(agoraphobia) உடன் தொடர்பு உடையது.கூட்டம் என்பது சந்திப்பு என்பதையும் குறிக்கும். இங்கே திரளாகக் கூடுவதைக் குறிக்கிறது. திரளான கூட்டத்தைப்பார்ததால் அஞ்சுவோர் உள்ளனர்.கூட்டத்தில் பொருள்கள் தொலைந்து போகலாம், உடைமைகள் திருடு போகலாம், துன்புறுத்தல் நிகழலாம், தொற்றுநோய்க்கு ஆளாகலாம் என்பன போன்ற அச்சங்களாலும் கூட்டம் கண்டு அஞ்சுவோர் உள்ளனர்.‘சொர்க்கம்’ திரைப்படத்தில் கண்ணதாசனின் சொல்லாதே யாரும் கேட்டால் எனத் தொடங்கும் பாடலில்,உரிமையோ உரிமை என்று ஊரெங்கும் மேடை…
வெருளி நோய்கள் 881-885: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 876-880: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 881-885 குறை வுணா (junk food) மீதான மிகையான பேரச்சம் குறை வுணா வெருளி.குறை வுணா என்றால் குறைந்த அளவு உணவு என்று கருதாமல் குறைந்த அளவு ஊட்டமுள்ள சிற்றுணா எனக் கொள்ள வேண்டும்.junk, cibus ஆகிய கிரேக்கச் சொற்களுக்கு முறையே சிறுமை, உணவு எனப் பொருள்.00 தாளில் எழுதத் தொடங்கி அல்லது வரையத் தொடங்கி முற்றுப்பெறாமல் அரைகுறையாக விடப்படும் குறைபடைப்புத் தாள் குறித்த அளவு கடந்த பேரச்சம் குறை தாள் வெருளி.தாள் வெருளியிலும் வெற்றுத்தாள்…
வெருளி நோய்கள் 876-880: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 871-875) வெருளி நோய்கள் 876-880 குறுந் தகடு தொடர்பான அளவுகடந்த பேரச்சம் குறுந் தகட்டு வெருளி.ஒலி. ஒளி அலைப்பதிவுகள் சரியாக மேற்கொள்ளப் படவில்லையோ, கீறல் விழுந்த குறுந்தகடாக இருந்து சரியாக இசையையோ உரையையோ கேட்க முடியாமல் போகுமோ, கேட்கத்தகாதவை அல்லது பார்க்கத்தகாதவை பதிவாிகியருக்குமோ என்ற பேரச்சத்திற்கு ஆளா்வோர் உள்ளனர்.00 குறுமி(dwarf planet) குறித்த வரம்பற்ற பேரச்சம் குறுமிவெருளி.dwarf planet என்றால் குள்ளன் என்கிறார்கள். அவ்வாறு சொல்வது உயர்திணையாகும். குறுமளவு உள்ள கோளைச் சுருக்கமாகக் குறுமி என்பது பொருத்தமாக இருக்கும்.Ceres என்னும் இலத்தீன்…
வெருளி நோய்கள் 871-875: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 866-870: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 871-875 குறியீடு தொடர்பான அளவுகடந்த பேரச்சம் குறியீட்டு வெருளி.கருத்துப் பரிமாற்றம் செய்வோர் அல்லது உரையாடுவோர் குழுஉக் குறி முறையில் அல்லது அடையாள முறையில் அல்லது குறியீட்டு முறையில் பேசுவது.கால்கழுவுதல் போன்று இடக்கர் அடக்கலாகச்சொல்வதும் குறியீட்டு உரையேSymbolo என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் குறியீடு.00 குறுகிய பகுதி தொடர்பான அளவுகடந்த பேரச்சம் குறுகிய பகுதி வெருளி.ஒருவருக்குக் குறுகிய பொருட்கள் அல்லது இடங்களைப் பற்றிய வெருளியை ஏற்படுத்துவது.சான்றாகக் குறுகிய நடைபாதை, அடித்தளம் அல்லது மாடிச்சிற்றறை, அல்லது மாடிப்படிகளின் அடிப்பகுதி,…
வெருளி நோய்கள் 866-870: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 861-865: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 866-870 உறுப்பு அளவுகள் இயல்பிற்கு மாறாகக் குறைந்துள்ள குறளன்/குறளி(midgets) தொடர்பான தேவையற்ற அளவு கடந்த பேரச்சம் குறளன் வெருளி.குள்ளவாதம், குறுநிலை என்று இதனை அழைக்கின்றனர். பொதுவாக அகவை வந்தும் 147 சிறுகோல்/செ.மீ. அளவிற்குக் குறைவானவர்களே இவ்வாறு அழைக்கப்படுகிறார்கள். இவர்களுள் சிலர் சற்று உயரமாக இருந்தாலும் கை, கால் உறுப்புகள் வழக்கத்திற்கு மாறாகக் குறு நிலையிலேயே இருக்கும்.00 குறிகை குறித்த வரம்பற்ற பேரச்சம் குறிகை வெருளி.அடையாளமாகக் காட்டப்பெறும் குறிகை தவறாக இருக்குமோ அதனால் தீய விளைவுகள் வருமோ என்ற…
வெருளி நோய்கள் 861-865: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 856-860:தொடர்ச்சி) வெருளி நோய்கள் 861-865 குளியலறை தொடர்பான அளவுகடந்த பேரச்சம் குளியலறை வெருளி.Loutro என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் குளியல். இந்த இடத்தில் குளிக்கும் இடத்தை – குளியல் அறையை-க் குறிக்கிறது.00 குளியல் தொட்டி தொடர்பான அளவுகடந்த பேரச்சம் குளியல் தொட்டி வெருளி.மனை வெருளி(oikophobia) உள்ளவர்களுக்குக் குளியல் தொட்டி வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.00 குளிர் பானங்கள் குறித்த வரம்பற்ற பேரச்சம் குளிர் பானங்கள் வெருளி.பற் சிதைவு, எலும்பு பலவீனம், சிறுநீரகப் பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு, இதய நோய்கள், செரிமானச் சிக்கல்கள்…
வெருளி நோய்கள் 856-860: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 851-855: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 856-860 குழிப்பந்தாட்ட ஊர்தி(golf cart) மீதான அளவுகடந்த பேரச்சம் குழி யாட்ட ஊர்தி வெருளி.ஆட்ட ஊர்தி வெருளி(Gelandelimophobia) உள்ளவர்களுக்குக் குழியாட்ட ஊர்தி வெருளி வர வாய்ப்புள்ளது.00-857. குழிப்பந்தாட்ட வெருளி – Golfphobiaகுழிப்பந்தாட்டம் குறித்த வரம்பற்ற பேரச்சம் குழிப்பந்தாட்ட வெருளி.வளைகோலாட்ட வெருளி(hockey phobia) உள்ளவர்களுக்குக் குழிப்பந்தாட்ட வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.00 குழிப்பேரி(peach) என்னும் பழத்தின் நிறம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் குழிப்பேரி நிற வெருளி.Persi என்பது குழிப்பேரிப் பழமாகும். Persico என்றால் குழிப்பேரி நிறமாகும்.00 குளவி…
வெருளி நோய்கள் 851-855: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 846-850: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 851-855 காழநீர்(காப்பி) முதலான குடிவகைகளுக்குப் பயன்படுத்தப்படும் நெகிழிக் குவளைகள் பற்றிய அளவுகடந்த பேரச்சம் நெகிழிக்குவளை வெருளி. சுருக்கமாகக் குவளை வெருளி எனலாம்.சூடான பானங்கள் நெகிழிக் குவளைகளில் ஊற்றப்படுவது உடல் நலனுக்குக் கேடு விளைவிக்கும். என்றாலும் இது குறித்து மிகையான பேரச்சம் கொள்ளாமல் தவிர்க்க வேண்டும். இப்பொழுது அரசே நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்தத் தடை விதித்துள்ளதால் இத்தகைய வெருளி குறையும், மறையும். (பேரச்சம் காழநீர் மீது என்றால் காழநீர் வெருளி என்றே சொல்லலாம்.)இப்பொழுது நெகிழி பயன்பாட்டிற்கே தடை…
வெருளி நோய்கள் 846-850: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 841-845: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 846-850 குருதி ஊசி காயம் தொடர்பான மிகையான பேரச்சம் குருதி ஊசி காய வெருளி.குருதியைக் கண்டும் ஊசி போடுவதாலும் ஊசி போடப்படுவதைப் பார்த்தாலும் காயம் வந்தாலும் பிறர் காயங்களைப் பார்த்தாலும் ஏற்படக்கூடிய அளவுகடந்த பேரச்சங்களை இது குறிக்கிறது.இதனைத் தனி ஒரு வெருளியாகக் குறிப்பிடாமல் குருதி வெருளி, ஊசி வெருளி(நுதி வெருளி/மருந்தூசி வெருளி), உடற்காய வெருளிவகைகளைக் குறிப்பிடும் பொதுச்சொல்லாகத்தான் கையாளுகின்றனர்.00 குருதியைக் கண்டால் ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம் குருதி வெருளிகுருதி என்பது தமிழ்ச்சொல்லல்ல என எண்ணிக்…
வெருளி நோய்கள் 841-845: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 836-840: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 841-845 குமுகாயச்சடங்குகள், நிகழ்வுகள், போக்குகள் தொடர்பிலான அளவுகடந்த பேரச்சம் குமுகாய வெருளி.ஒன்றுகூடல் நிகழ்வுகள், விருந்துக் கூட்டங்கள்,ஆட்டம் பாட்டம் கொண்டாட்டங்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், நண்பர்கள் உறவினர்களுடான சுற்றுலாக்கள் என எந்தப் பொது நிகழ்வாயினும் காரணமற்ற பேரச்சம் கொள்வர்.00 காரணமின்றிக் கூடும் கும்பல் பற்றிய அளவுகடந்த பேரச்சம் கும்பல் வெருளி.கூட்ட வெருளியைப் போன்றதுதான் இதுவும். ஆனால், அதனைவிட இதில் பேரச்சம் மிகுதி. கும்பல் கலவரத்தில் ஈடுபடலாம், கொலை, கொள்ளைகளில் ஈடுபடலாம் எனப் பேரச்சத்திற்கு ஆளாகின்றனர். demo என்னும் கிரேக்கச்…
வெருளி நோய்கள் 831-835: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 826-830) வெருளி நோய்கள் 831-835 குப்பைத் தொட்டி(dumpster) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் குப்பைத் தொட்டி வெருளி.குப்பைத்தொட்டியில் உள்ள குப்பை, கூளம், செத்தை, அழுகல் பொருள், கழிவு போன்றவற்றால் எற்படும் தீ நாற்றம் குறித்து அ்ருவருப்பு அடைந்து வெருளிக்கு ஆளாகின்றனர். குப்பைத் தொட்டி காலியாக இருந்தாலும் இவை குறித்த எண்ணத்தால் வெருளி கொள்வர்.காண்க: குப்பை வெருளி-Purgamentophobia00 குப்பை வாளி(trash can) குறித்த வரம்பற்ற பேரச்சம் குப்பை வாளி வெருளி.குப்பைத் தொட்டி வெருளி போன்றதுதான் குப்பை வாளி வெருளி. குப்பை வாளியில் உள்ள குப்பை,…
