அகல் விளக்கு – மு.வரதராசனார்: 46
(அகல் விளக்கு – மு.வரதராசனார். 45. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 19 நான் எண்ணியது உண்மை ஆயிற்று. இரண்டு வாரங்கள் கழித்து ஆசிரியர் எனக்கு விடுதி முகவரிக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். சந்திரன் தேயிலைத் தோட்டத்தை அடியோடு மறந்துவிட்டான் என்றும், அங்கு உள்ளவர்களுக்கு ஒரு கடிதமும் எழுதவில்லை என்றும், முன்போல் பரபரப்பாக அலையாமல் வீட்டோடு ஒதுங்கியிருந்தாலும் கவலை இல்லாமல் இருக்கிறான் என்றும், தந்தையார் திருமணத்துக்காகப் பெண் பார்த்து வருகிறார் என்றும், ஆவணியில் தவறாமல் திருமணம் நடக்கும்போல் இருக்கிறது என்றும் எழுதியிருந்தார். ‘ஏதாவது…
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 21
(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 20 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் அத்தியாயம் 8 தொடர்ச்சி “செல்லம், அந்த அக்காவை விட்டுவிடாதே. அடுத்த மாதம் முதல் மாதர் சங்கத்திலே தினம் சாயங்காலம் இவங்க தமிழ்ப் பாடமெல்லாம் சொல்லிக் கொடுக்கப் போறாங்க. நீயும் தவறாமப் போகணும்” என்று சிரித்துக் கொண்டே பெண்ணுக்குச் சொன்னாள் மங்களேசுவரி அம்மாள். “இந்த அக்கா சொல்லிக் கொடுப்பதாக இருந்தால் நான் இருபத்து நாலுமணி நேரமும் மாதர் சங்கத்திலே இருக்கத் தயார் அம்மா” என்றவாறே புள்ளிமான் போல துள்ளிக் குதித்து ஓடிவந்து பூரணியின்…
அகல் விளக்கு – மு.வரதராசனார்: 45
(அகல் விளக்கு – மு.வரதராசனார். 44. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 18 தொடர்ச்சி “சந்திரா!” என்றேன். “அம்மா இல்லையா? போய்விட்டார்களா? ஐயோ! அம்மா நினைவு அடிக்கடி வந்ததே! நான் பார்க்கவே முடியாதா?” என்று விம்மி அழுதான். அப்பா வந்திருக்கிறார் என்று சொல்ல வாயெடுத்து, உடனே அடக்கிக் கொண்டேன். “எப்போது இறந்து போனார்கள்?” என்றான். “ஒரு மாதம் ஆச்சு.” “அய்யோ! என் மனம் என்னவோ போல் இருக்கிறதே” என்று கலங்கினான். சிறிது நேரத்தில் முற்றிலும் மாறியவனாய், “நீ ஏன் இங்கே வந்தாய்! உனக்கு எப்படித் தெரியும்”…
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 20
(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 19 தொடர்ச்சி) குறிஞ்சி மலர்அத்தியாயம் 8 “நின்னாவார் பிறரன்றி நீயே ஆனாய்நினைப்பார்கள் மனத்துக்கோர் விபத்தும் ஆனாய்பொன்னானாய் மணியானாய் போகமானாய்பூமிமேல் புகழ்தக்க பொருளே உன்னைஎன்னானாய் என்னானாய் என்னில் அல்லால்ஏழையேன் என்சொல்லி ஏத்துகேனே“ – தேவாரம் “முக்கியமான காரியம் பூரணி. எங்கே, எதற்கு என்று கேட்டுக் கொண்டிருக்காதே. மறுக்காமல் என்னோடு உடனே புறப்படு…” என்று மங்களேசுவரி அம்மாள் வந்து கூப்பிட்டபோது அவளால் அந்த அழைப்பைத் தட்டிக் கழிக்க முடியவில்லை. பழைய வீட்டிலிருந்து சாமான்களை ஒழித்துப் புது…
ஈழத்துப் புதின இலக்கியம் – . மௌனகுரு, மௌ. சித்திரலேகா & எம். ஏ. நுஃமான்
(முன்னிதழ்த் தொடர்ச்சி) இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் 8 அத்தியாயம் 4. புதினம் பத்தொம்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இலங்கையிலும் இந்தியாவிலும் நிலவுடைமைச் சமூக அமைப்பில் ஏற்ப்பட்ட சீர்குலைவும், முதலாளித்துவ சமூக அமைப்பின் தோற்றம், பிரித்தானியர் அறிமுகப்படுத்திய ஆங்கிலக் கல்வி, மேலைநாட்டு இலக்கியப் பரிச்சயம் முதலியவை தமிழ் இலக்கியப் போக்கில் பாரிய மாற்றங்கள் ஏற்படக் காரணிகளாயின. புதினம், சிறுகதை முதலிய நவீன இலக்கிய வடிவங்களின் தோற்றம் இவற்றுளொன்றாகும். பத்தொன்பதால் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோற்றம் பெற்ற புதின இலக்கியம் இன்று பல்வேறு வளர்ச்சிப் போக்குகளையும்…
அகல் விளக்கு – மு.வரதராசனார்: 44
(அகல் விளக்கு – மு.வரதராசனார். 43. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 18 தொடர்ச்சி அந்த வழியே நடந்து சென்று அவர் காட்டிய தேநீர்க் கடையை கண்டுபிடித்தோம். அங்கே தேநீர் தந்து கொண்டிருந்த ஆட்களை உற்றுப்பார்த்தேன். இளைஞனாக இருந்த ஒருவனை அழைத்துச் சந்திரனைப் பற்றிக் கேட்டேன். “நான் இங்கே வந்து ஒருவாரம்தான் ஆச்சு, அதோ அவனைக் கேட்டுப்பாருங்கள்” என்று அவன் வேறொருவனைக் காட்டினான். அவனிடம் நானே சென்று மெல்லக் கேட்டேன். அவன் ஒன்றும் விடை கூறாமல், “நீங்கள் யார்? எந்த ஊர்?”, என்று என்னையே திரும்பக்…
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 19
(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 18. தொடர்ச்சி) குறிஞ்சி மலர்அத்தியாயம் 7 தொடர்ச்சி தூங்கிக் கொண்டிருந்த கமலாவுக்கு இடையூறில்லாமல் மேசை விளக்கைப் போட்டுக் கொண்டு அரவிந்தனின் ஏட்டுப் புத்தகத்தைப் பிரித்தாள் பூரணி. கடிகாரத்தின் டிக் டிக் ஒலியும், ‘ஙொய்’ என்று சுவர்க்கோழிக் குரலுமாகக் கமலாவின் வீட்டுக் கூடத்தில் இருள் அணையிட்டுக் கொண்டு நின்றது. மேசை விளக்கைச் சுற்றி மட்டும் வெண் நில மின்னொளி, மாவைக் கொட்டின மாதிரி பரவியிருந்தது. ஏறக்குறைய இரண்டரை மணி வரையில் அந்த மேசை விளக்கு அணையவில்லை. படிக்கப் படிக்க ஆச்சரியமாக இருந்தது…
அகல் விளக்கு – மு.வரதராசனார்: 43
(அகல் விளக்கு – மு.வரதராசனார். 42. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 18 தொடர்ச்சி ‘பார்ப்பதற்கு நல்லபடி இருக்கிறாயே’ப்பா உனக்கு என்ன குறை, சொல். ஆங்கில மருத்துவரிடம் போனாலும், அவர்கள் உடனே தெரிந்துகொள்ளமாட்டார்கள். நம் உடம்பில் உள்ள குறை இன்னது என்று நாமே தெளிவாகச் சொன்ன பிறகுதான் ஆராய்ந்து மருந்து கொடுப்பார்கள். இல்லையானால் ஒன்று கிடக்க ஒன்று செய்வார்கள், ‘முதலில் உன் உடம்புக்கு என்ன என்று சொல்’ என்று கேட்டேன். உடம்பில் சத்து எல்லாம் வீணாகிறது என்றான். ஏன் அப்படி என்றேன். தூங்கும்போது என்றான். உடனே…
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 18
(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 17. தொடர்ச்சி) குறிஞ்சி மலர்அத்தியாயம் 7 பெண் வழி நலனொடும் பிறந்த நாணொடும்என் வழி உணர்வு தான் எங்கும் காண்கிலேன்மண் வழி நடந்தடி வருந்தப் போனவன்கண் வழி நுழையுமோர் கள்தனே கொலாம் — கம்பன் பூட்டியிருந்த வீட்டின் முன்பு கையில் அரவிந்தன் வைத்துச் சென்றுவிட்ட ஏட்டுப் புத்தகத்தோடு தெரு வாசலில் நின்றாள் பூரணி. அவள் நிற்பதைத் தன் வீட்டு வாசற்படியிலிருந்து பார்த்து விட்டாள் ஓதுவார்க் கிழவரின் பேத்தி காமு. அவள் வந்து கூறினாள்: “பூரணி! சாயங்காலம்…
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 17
(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 16. தொடர்ச்சி) குறிஞ்சி மலர் அத்தியாயம் 6 தொடர்ச்சி இந்த இருபத்தெட்டு வயதில் அரவிந்தன், மீனாட்சி அச்சக நிருவாகத்தையே தனித்தூண் போலிருந்து தாங்கிக் கொண்டிருந்தான். அரவிந்தன் அழகன், அறிஞன், கவிஞன், சாமர்த்தியமான குறும்புக்காரன், எல்லாம் இணைந்த ஒரு குணச்சித்திரம் அவன்; பார்த்தவுடன் பதிந்துவிடுகிற, கவரும் தன்மை வாய்ந்த முக்கோண வடிவ நீள முகம் அவனுடையதாகையால், ஒரு தடவை பார்த்தாலும் அவனை மறக்க முடியாது. ஆணியல்புக்குச் சற்று அதிகமாகவே சிவந்து தோன்றும் உதடுகளின் குறும்பு நகை நெளிய அவன்…
அகல் விளக்கு – மு.வரதராசனார்: 41
(அகல் விளக்கு – மு.வரதராசனார். 40. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 17 அடுத்த மார்கழி விடுமுறையில் ஊருக்குச் சென்றபோது, பாக்கிய அம்மையார், வீட்டுக்கு வந்து என்னைப் பற்றியும் சந்திரனைப் பற்றியும் கேட்டார். அவருடைய முகத்தில் முன்போல் மகிழ்ச்சியும் ஊக்கமும் காணப்படவில்லை. கவலையும் சோர்வும் காணப்பட்டன. அவரைப் பார்த்தவுடன், இமாவதி சொன்னது நினைவுக்கு வந்து என் உள்ளத்தை வருத்தியது. எந்தப் பெண்ணையும் – வயதில் பெரியவள் சின்னவள் என்று இல்லாமல் – தன்மேல் ஆசை கொண்டதாக எண்ணி யாரையும் இப்படிப் பழி தூற்றுவது சந்திரனுடைய தீயகுணம்…
ஈழத்துப் புதின இலக்கியம் – தொடர்ச்சி:மௌனகுரு, மௌ. சித்திரலேகா & எம். ஏ. நுஃமான்
(முன்னிதழ்த் தொடர்ச்சி) இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் 10 அத்தியாயம் 4. புதினத் தொடர்ச்சி தமிழ் நாட்டுப் புதினங்களைவிட ஈழத்துத் தமிழ்ப் புதினங்கள் கூடியளவு சமூகச் சிக்கல்களைக் கருத்திற் கொண்டு எழுதப்பட்டன என்று கூறுவோர் கணேசலிங்கனின் புதினங்களைத் தவறாமல் சான்று காட்டுவர். ஈழத்து முற்போக்கு எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தக்க புதினங்களை எழுதியவராகிய கணேசலிங்கன், தனது படைப்புகள் அனைத்தையும் தொடர்கதைகளாக அன்றி முழுப் புதினங்களாகவே எழுதினார். இளங்கீரன் போல் இவரும் கருத்துகளுக்கே முதன்மை கொடுப்பர். அதனால் இவரது கதாபாத்திரங்கள் பல அனுபவச் செழுமை குறைந்த, கருத்துகளின்…