எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 16 : case, bail, receipt – தமிழில்: இலக்குவனார் திருவள்ளுவன்
(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 15 : insolvent, adolescent, juvenile, minor, post-mortem – தமிழில்: தொடர்ச்சி) எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 16 : case, bail,receipt ? case என்றால் என்ன பொருள்? நீங்கள் எந்தத் துறை? ? மருத்துவத் துறை. case என்றால் வழக்கு என்கிறோமே. மருத்துவமனையில் case-history ஐ எவ்வாறு குறிப்பிடுவது? ‘case’ என்றால் பொதுவாக வழக்கு என்பதை நாமறிவோம். நிலை, நிலைமை, சூழ்நிலை, என்றும் பொருள்களுண்டு. எனவே, மருத்துவத்துறையில் நோய் நிலைமை, நோயர்…
எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 15 : insolvent, adolescent, juvenile, minor, post-mortem – தமிழில்: இலக்குவனார் திருவள்ளுவன்
(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 14 : தொடர்ச்சி) எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 15 insolvent, adolescent, juvenile, minor, post-mortem – தமிழில் திவாலானவர் என இக்கோப்பில் குறிக்கப் பெற்றுள்ளது. திவால் தமிழ்ச் சொல்லல்ல. insolvency – என்பது கடனைத் திருப்பச் செலுத்த இயலாமல் நொடித்துப் போன நிலையைக் குறிப்பது. நொடிப்பு என்று சொல்லலாம். இந்த நிலைக்கு ஆளானவர் insolvent – நொடித்தவர் எனலாம். இதற்கு நொடித்துப்போன என்றும் பொருளுண்டு. எனினும் பொதுவாக நாம் நொடித்துப் போனவர் >…
எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 14 : உம்மைத் தொடர்களில் ‘மற்றும்’ தேவையில்லை : இலக்குவனார் திருவள்ளுவன்
(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 13 : ஓர், ஈர்,அஃது, இஃது பயன்பாடு, அது,இது, எது, யாது அடுத்து வல்லினம் மிகாது : தொடர்ச்சி) எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 14 : உம்மைத் தொடர்களில் ‘மற்றும்’ தேவையில்லை தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத்துறை எனக் குறிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மற்றும் எனச் சேர்ப்பது தவறாகும். மற்றும் என்பதை நீக்கிப் பின்வருமாறு குறிப்பிட வேண்டும். தமிழ் வளர்ச்சி பண்பாட்டுத் துறை ஆதி திராவிடர் பழங்குடியினர் நலத் துறை இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை…
தொல்காப்பியமும் பாணினியமும் – 7 : தொல்காப்பியர் குறிப்பிடும் சொற்கள் யாவும் தமிழே-இலக்குவனார் திருவள்ளுவன்
(தொல்காப்பியமும் பாணினியமும் – 6 : பாணினியத்தின் சிறப்பு?!-தொடர்ச்சி) தொல்காப்பியமும் பாணினியமும் 7 தொல்காப்பியர் குறிப்பிடும் சொற்கள் யாவும் தமிழே தமிழ் நூல்களைக் காப்பதற்காக இயற்றப் பெற்ற தொல்காப்பியத்தில் தொல்காப்பியர் தமிழ்ச்சொற்களைக் கையாள்வதுதானே முறை. தமிழ் மீதுள்ள வெறுப்பின் காரணமாகவும் சமற்கிருதத்தை உயர்த்தும் நோக்கிலும் வையாபுரி போன்றோர் பல சொற்களையும் சமற்கிருதமாகத் தவறாகக் கூறுகின்றனர். தொல்காப்பியர் காலத்தில் எழுத்தமைப்பு உருவாக்கி அதன்பின் சொல் வளத்தை உருவாக்கிய சமற்கிருதச் சொற்கள் எங்ஙனம் தொல்காப்பியத்தில் இடம் பெற இயலும்? தமிழ் இலக்கணம் வகுக்க வந்த தொல்காப்பியர் எதற்கு வளமில்லாத…
சமற்கிருதத்திற்கு கூடுதல் நிதி- சரிதானே!?- 2: இலக்குவனார் திருவள்ளுவன்
(சமற்கிருதத்திற்கு கூடுதல் நிதி- சரிதானே!?- 1 தொடர்ச்சி) சமற்கிருதத்திற்கு கூடுதல் நிதி- சரிதானே!?- 2 நாம் செய்ய வேண்டியது என்னவாக இருக்க வேண்டும்? தமிழுக்குத் திட்டங்கள் தர வேண்டும். தரவில்லையே! ஒன்றும் செய்யவே இல்லையே! நமக்கு ஒன்றும் வேண்டா, செம்மொழி அறிவிக்கப்பட்ட பிறகு செம்மொழி விருது கொடுத்தார்கள். யாருக்கு? இளைய அறிஞர்களுக்கு ஆண்டுக்கு ஐவருக்குக் கொடுத்தார்கள். (அதிலும் சில ஆண்டுகள் குறைவாகக் கொடுத்தார்கள்.) ஒவ்வோர் ஆண்டும் சமற்கிருத அறிஞர்கள் 15 பேர், அரபி அறிஞர்கள் 3 பேர், பெருசியன் அறிஞர்கள் 3 பேர், பாலி/பிராகிருத…
எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 13 : ஓர், ஈர்,அஃது, இஃது பயன்பாடு, அது,இது, எது, யாது அடுத்து வல்லினம் மிகாது : இலக்குவனார் திருவள்ளுவன்
(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 12 : ‘என’, ‘இனி’ அடுத்து வல்லினம் மிகும் : தொடர்ச்சி) எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 13 : ஓர், ஈர்,அஃது, இஃது பயன்பாடு, அது, இது, எது, யாது அடுத்து வல்லினம் மிகாது “ஒரு ஊழியரேனும்’ எனக் குறிக்கப் பெற்றுள்ளது. இது தவறு ஆங்கிலத்தில் உயிரெழுத்துக்களுக்கு முன் என்ன குறிப்பிட வேண்டும் என நன்கு அறிவோம். கேள்வி: ‘an’ என உயிரெழுத்தில் தொடங்கும் சொல்லின் முன்னால் சேர்ப்போம். இவ்வாறு தமிழிலும் உள்ளதா? விடை:…
எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 12 : ‘என’, ‘இனி’ அடுத்து வல்லினம் மிகும் : இலக்குவனார் திருவள்ளுவன்
(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 11 : Conference Call – பன்முகஅழைப்பு : தொடர்ச்சி) ‘என’, இனி’ அடுத்து வல்லினம் மிகும் . .என தெரிவிக்கிறேன்’ என்று உள்ளது “என’ என்னும் இடைச்சொல் அடுத்து வல்லின எழுத்து மிகுதியாய் வரவேண்டும். இவ்வாறு அடிக்கடி வருமிடங்களை நினைவில் கொண்டால் தவறின்றி எழுதலாம். எனத் தெரிவிக்கிறேன் எனக் கூறினான் எனச் சொல்லேன் எனப் படிக்க வேண்டும் எனத் திட்டமிடு எனத் தெளிவாகக் கூறு எனத் தெரிவித்துக் கொள்கிறேன் எனப் பாராட்டினார் எனக் குறிப்பாணையில் குறிக்கப்பட்டுளளது…
தொல்காப்பியமும் பாணினியமும் – 6 : பாணினியத்தின் சிறப்பு?!-இலக்குவனார் திருவள்ளுவன்
(தொல்காப்பியமும் பாணினியமும் – 5 : மிகவும் பழமை வாய்ந்தது தொல்காப்பியம் – தொடர்ச்சி) தொல்காப்பியமும் பாணினியமும் 6 பாணினியத்தின் சிறப்பு?! தொல்காப்பியம் இயல்பிலேயே தமிழாகிய சிறந்த மொழிக்கான இலக்கணம் என்பதால் சிறப்பானதாக அமைந்துள்ளது. ஆனால் பாணினியின் அட்டாத்தியாயி சிறப்பாகத் திரித்துக் கூறப்படும் சிறப்பற்ற மொழியான சமற்கிருததத்திற்கானது என்பதால் திரிக்கப்பட்ட சிறப்பையும் உண்மையில் சிறப்பின்மையையும் கொண்டுள்ளது. பாணினியத்துக்கு மிக விரிந்ததொரு உரை செய்த பதஞ்சலி, “இச்சூத்திரங்களின் பெருமையை நோக்குமிடத்து, பொருளில்லாத ஒரு எழுத்தையேனும் அவற்றினுள்ளே யான் காண்கிலேன்” என்று அட்டத்தாயி குறித்துக் கூறியுள்ளார். “எங்கப்பன் குதிருக்குள்…
எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 10 : conference, seminar, symposium – தமிழில் . . . -இலக்குவனார் திருவள்ளுவன்
(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 9 : Positive, Remark, Adverse, Negative, Lodged – தமிழில்-தொடர்ச்சி) எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 10 conference, seminar, symposium – தமிழில் . . . ? ‘Consultation’, ‘discussion’, ‘Conference’ என்பனவற்றிற்கு என்ன சொல்ல வேண்டும்? Consultation என்பதற்குச் சரியான பழந்தமிழ்ச் சொல் சூழ்ச்சி என்பதாகும். இருப்பினும் இப்பொழுது சூழ்ச்சி என்பது “கலந்து பேசுதல்’ என்னும் பொருள் தராமல் சதி செய்வது போன்ற எதிர்மறையான எண்ணத்தைக் குறிக்கிறது. மருத்துவரிடமோ வழக்குரைஞரிடமோ…
எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 9 : Positive, Remark, Adverse, Negative, Lodged – தமிழில்-இலக்குவனார் திருவள்ளுவன்
(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 8 : தொடர்ச்சி) எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 9 : Positive, Remark, Adverse, Negative, Lodged – தமிழில் இக்கோப்பில் Action should be taken on 30.9.92 positively என ஆங்கிலத்தில் உள்ளது. தமிழில் எழுதும் பலர்கூட, இவ்வாறு கோப்பில் சுருக்க ஆணைகளை அல்லது கட்டளைகளை அல்லது குறிப்புகளை ஆங்கிலத்தில் எழுதிவிடுகின்றனர். பொதுவாகக் குறிப்பிட்ட நாளில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்னும் பொழுது ‘Positively’ எனக் குறிக்கத் தேவை இல்லை. எனினும் குறிப்பிட்ட…
தொல்காப்பியமும் பாணினியமும் – 5 : மிகவும் பழமை வாய்ந்தது தொல்காப்பியம் – இலக்குவனார் திருவள்ளுவன்
(தொல்காப்பியமும் பாணினியமும் – 4 : முதனூல் – தொடர்ச்சி) தொல்காப்பியமும் பாணினியமும் 5 மிகவும் பழமை வாய்ந்தது தொல்காப்பியம் இது குறித்துப் புலவர் செந்துறைமுத்து (பரிபாடல் பழக்க வழக்கங்கள்: பக். 14) பின்வருமாறு தெரிவிக்கிறார்: “தமிழ் இலக்கிய உலகு மிகவும் பழமைபட்டது; பரந்து பட்டது; பெருமைபட்டது. தமிழ் இலக்கியங்களைத் தமிழ் உலகு எனவும் தமிழ் கூறும் இலக்கிய உலகு எனவும் கூறலாகும். காலவரையறையைக் காண வியலாத பழமையையும் பெருமையையும் கொண்டது தமிழ் உலகு. தமிழ் உலகில் வழங்கும் நூல்களில் தொல்காப்பியம் மிகவும் பழமை வாய்ந்தது….
எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 8 : ஓரெழுத்தொரு மொழிகளுக்கு அடுத்தும் கிழமைகளுக்கு அடுத்தும் வல்லினம் மிகும்
(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 7: தொடர்ச்சி) எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 8 : ஓரெழுத்தொரு மொழிகளுக்கு அடுத்தும் கிழமைகளுக்கு அடுத்தும் வல்லினம் மிகும் இக்கோப்பில், “கை குழந்தைகளுக்குச் சொட்டு மருந்து கொடுக்கப்படும்’ என உள்ளது. “கை’ என்பது ஓரெழுத்து ஒரு மொழி எனப்படும். ஓரெழுத்துச் சொல்லிற்குப் பின்பும் வல்லினம் மிக வேண்டும். கைக்குழந்தை தீத்தடுப்புப் பயிற்சி தைத்திங்கள் ஈத்தொல்லை கேள்வி: ஓரெழுத்து ஒரு மொழி’ சிலவாகத்தானே இருக்கும். பதில் : இல்லவேயில்லை. ஓர் எழுத்தே பொருள் தரும் சொல்லாய் அமையும்…
