எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 7: back என்றால் முன் என்றும் பொருள்- இலக்குவனார் திருவள்ளுவன்

(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! –6, தொடர்ச்சி) எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 7: back என்றால் முன் என்றும் பொருள் எந்த ஒரு சொல்லும் தான் பயன்படும் இடத்திற்கேற்ப உள்ள பொருளைச் “”சுமந்து செல்லும் ஊர்தி”தான். எனவே, மூலச் சொல்லுக்கு நேரான பெயர்ப்புச் சொல்லை அமைக்காமல் மூலப் பொருளுக்கு ஏற்ற பெயர்ப்புச் சொல்லை ஆக்க வேண்டும். சொல் செறிவாயும் செவ்விதாயும் இருத்தல் வேண்டும். பயன்பாட்டுப் பின்னணியைக் கருத்தில் கொண்டு கலைச் சொற்களை உருவாக்க வேண்டும். ” “குன்றக் கூறல்” முதலான நூல்…

தொல்காப்பியமும் பாணினியமும் – 4 : முதனூல்  – இலக்குவனார் திருவள்ளுவன்

(தொல்காப்பியமும் பாணினியமும் – 3 தொடர்ச்சி) தொல்காப்பியமும் பாணினியமும் 4 முதனூல் தொல்காப்பியம் தமிழர்க்குக் கிடைத்த முதலாவது நூலே தவிர, அதுவே தமிழில் எழுதப்பட்ட முதல் நூல் அல்ல. இது குறித்துப் பேராசிரியர் சி.இலக்குவனார் (தொல்காப்பிய ஆராய்ச்சி , பக்கம்: 10) பின் வருமாறு உரைக்கிறார்: “தமிழ் மொழியில் நமக்குக் கிடைத்துள்ள நூல்களில் மிகப் பழைமையானது தொல்காப்பியம் என்று கூறப்படுகின்றது.  தொல்காப்பியத்திற்கு முற்பட்ட நூல்கள் நமக்குக் கிடைத்தில.  ஆதலின் தொல்காப்பியத்திற்கு முற்பட்ட நூல்கள் இல்லையென்று கூறிவிட இயலாது.  தொல்காப்பியம் ஓர் இலக்கண நூலாகும்.  எம்மொழியிலும்…

தொல்காப்பியமும் பாணினியமும் – 3 : நூற்சிறப்பு – இலக்குவனார் திருவள்ளுவன்

(தொல்காப்பியமும் பாணினியமும் – 2 :பாணினியின் அ(சு)ட்டாத்தியாயி பிரிவுகள் – தொடர்ச்சி) தொல்காப்பியமும் பாணினியமும் நூற்சிறப்பு தொல்காப்பியச் சிறப்பு தொல்காப்பியம், பழந்தமிழர் வரலாற்றை எழுதுவதற்கு வேண்டிய கருவூலமாகத் திகழ்வது என்றும் தொல்காப்பியமே கிறித்து காலத்திற்கு முற்பட்ட வரலாற்று வாயில் என்றும் பேரா.முனைவர் சி.இலக்குவனார் தொல்காப்பியத்தின் சிறப்பினைப் பாராட்டுகிறார்.  “பொருள்” சிந்தனை தமிழுக்கே உரியது. தொல்காப்பியரும் முன்னோர் வழித் தம் நூலான தொல்காப்பியத்தில் பொருள் சிந்தனையை வெளிப்படுத்தியுள்ளார். இதனைப் பேராசிரியர் க. அன்பழகனார் (கலைஞரின் தொல்காப்பியப் பூங்கா: அணிந்துரை: பக்கம். 12-13) பின்வருமாறு கூறுகிறார்:- “மேலும்,…

தொல்காப்பியமும் பாணினியமும் – 2 :பாணினியின் அ(சு)ட்டாத்தியாயி பிரிவுகள் – இலக்குவனார் திருவள்ளுவன்

(தொல்காப்பியமும் பாணினியமும் – 1 : தொடர்ச்சி) தொல்காப்பியமும் பாணினியமும் 2 பாணினியின் அ(சு)ட்டாத்தியாயி பிரிவுகள் எட்டு அத்தியாயங்களை உடைய நூல் என்னும் பொருளில் பாணினி தன் நூலுக்கு அட்டாத்தியாயி என்று பெயர் வைத்தார். தமிழில் அட்டம் என்றால் எட்டைக் குறிக்கும். எட்டுபோல் காலைக் குறுக்கே மடக்கி அமர்வதை அட்டக்கால் என்று இன்றும் கூறிவருகிறோம். தமிழ் அட்டத்திலிருந்து வந்ததே சமற்கிருத அசுட்டம். எனவே, எட்டு அத்தியாயங்களைக் கொண்டது என்னும் பொருளில் அட்டகம் என்றும் கூறுகின்றனர்.  இதனைத் தமிழில் வேறுவகையில் குறிப்பிடுவதானால் எண்(8) இயல்கள் பகுக்கப்பட்டுள்ள…

தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் 9 – இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் 8 தொடர்ச்சி) தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் 9 சூரியன் – சூர்ய செக்கு  – செக்கு  செம்பருத்தி  – கெம்பத்தி செருப்பு  – செர்ப்பு செவி – கிவி செவ்வரி – கெம்பரி செவ்வவரை –  கொம்பவரே செவ்வாம்பல்  – கெம்பாவல் செவ்வாழை – கெம்புபாளெ  சேரி  – கேரி சேலை  – சேல சோளம் –  (ஞ்)சோள சோளிகை – (ஞ்)சோளிகை தகரம் – தகர தகர் –  தகர் தக்காளி  தக்காளி தக்கோலம் – …

தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் 8 – இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் 7 – தொடர்ச்சி) தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் 8 கன்னடச் சொற்கள் உணர்த்தும் தமிழ்த்தாய்மை கன்னடச் சொற்களைப் பார்ததால் ஆராயாமலேயே அவை தமிழ் அல்லது தமிழில் இருந்து மாற்றம் பெற்றவை எனலாம். எனவே, கன்னடத்தின் தாய் தமிழ் என்பது சொல்லாமலே விளங்கும். அச்சொற்கள் சிலவற்றைப் பின்வருமாறு பார்ப்போம் ஆடை அணிப் பெயர்கள், இடப்பெயர்கள், உறவுப்பெயர்கள், ஐம்பூதப் பெயர்கள், கருவிப்பெயர்கள், கனிமப்பெயர்கள், காலப் பெயர்கள், சினைப்பெயர்கள், தட்டுமுட்டுப் பெயர்கள், நிறப்பெயர்கள், பறவைப்பெயர்கள், விலங்குப் பெயர்கள், நீர்வாழ்வனவற்றின் பெயர்கள், ஊர்வனவற்றின்…

தொல்காப்பியமும் பாணினியமும் – 1 : இலக்குவனார் திருவள்ளுவன்

(தொல்காப்பியமும் பாணினியமும் – பொருளடக்கம் : தொடர்ச்சி) தொல்காப்பியமும் பாணினியமும் – 1 : மூவாத் தமிழில்  கிடைத்துள்ள முதல் நூலாகத் திகழ்வது சாவாப் புகழ் கொண்ட தொல்காப்பியம் ஆகும். தொல்காப்பியத்தின் உண்மையான சிறப்பை இன்னும் தமிழர்களே அறிந்திலர். அவ்வாறிருக்கப் பிறர் எங்ஙனம் அறிவர்? தொல்காப்பியச் சிறப்பை மறைக்கும் வண்ணம் ஆரிய வெறியர்கள் பாணினியத்தை உயர்த்தியும் அதன் காலத்தை முன்னுக்குக் குறிப்பிட்டும் பிற வகைகளிலும் எழுதி வருகின்றனர். தொல்காப்பிய நூற்பாக்கள் சிறப்பு குறித்தும் பாணினியின் அட்டாத்தியாயி நூற்பாக்கள் குறித்தும் ஒப்பிட்டு எழுத முதலில் எண்ணினேன்….

தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் 7 – இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் 6 – தொடர்ச்சி) தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் 7 கடலில் மறைந்த குமரிக்கண்டம் தமிழின் தொன்மையை ஏற்பதன் மூலமும் தமிழின் தாய்மையை உணரலாம்.  இந்தியப் பெருங்கடலாகச் சொல்லப்படும் குமரிக்கடலில் மறைந்த நிலப்பகுதியே குமரிக்கண்டம் அல்லது இலெமூரியாக் கண்டம். இங்குதான் மனித இனம் தோன்றியதாக ஆய்வறிஞர்கள் கூறுகின்றனர். இங்குள்ள மக்கள் பேசிய மொழி தமிழே என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். புறத் தமிழ்ப்பகைவர்களும் அகத்தமிழ்ப்பகைவர்களும் தமிழின் பெருமையை மறைக்கும் வகையில் குமரிக்கண்டம் பற்றிய ஆய்வுகளையே புனைகதைபோல் திரித்துக் கூறி வருகின்றனர்….

தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் 6 – இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் 5 – தொடர்ச்சி) தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் 6 கன்னடத்தில் சமற்கிருதம் கலப்பதற்கு எதிர்ப்பு கன்னட மொழியில் சமற்கிருதக் கலப்பு குறித்துப் பின்வரும் நூற்பாவில் அதற்கு எதிராகத் தெரிவிக்கிறார் கவிராச மார்க்கம்                நூலாசிரியர். தற்சமந் தன்னில் இணைந்து பிணைந்த கன்னட நடையினைக் கண்டு கைக்கொள்க நூலறி புலவர் நுவன்ற நெறியிது வடமொழி கலந்து வழங்குதல் தகாது (51) சமற்கிதச் சொற்களைக் கலந்து எழுதப் புலவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சமற்கிருதக் கலப்பு கடூரம் பயக்கும் கன்னட மொழியில் வடெமாழிக்…

தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் 5 – இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் 4 – தொடர்ச்சி) தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் 5 வரி வடிமைப்பியல் தமிழைப்போலவே கன்னடத்திலும் உள்ளமை தமிழ்மொழியின் வடிவமைப்பு முறையையே(ORTHOGRAPHY) இந்தியமொழிகள் அனைத்தும் பெற்றுள்ளன! அஃதாவது, இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் பேசப்படும் மொழிகள் அனைத்திற்கும், மொழி-வடிவமைப்பு என்னும் எழுத்தியல் முறை முற்றிலும் தமிழ் மொழியின் மொழி-வடிவமைப்பு  முறையைப் பின்பற்றியே அமைந்துள்ளது. அவ்வாறிருக்கும் பொழுது கன்னட மொழிக்கான எழுத்தமைப்பு முறையும் தமிழ் வரிவடிவ முறைமையைப் பின்பற்றியே உள்ளது என்பது வியப்பல்ல. எனவேதான், தமிழ்த்தாயின் நெடுங்கணக்கு போன்றே கன்னடச் சேயிலும்…

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! –6, இலக்குவனார் திருவள்ளுவன்

(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! –5 தொடர்ச்சி) எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்!  – 6 இதில் 8 நாள் முதல் 10 நாள் முடிய விழா நடைபெறும்’ என உள்ளது.  எட்டு நாள் எட்டாத நாள், பத்து நாள், பத்தாத நாள் என்றெல்லாம் இங்கு வேண்டா.  ‘ஆவது’ என எழுத வேண்டியதுபோல் ‘ஆம்’ என்றே எழுத வேண்டும்.  8-ஆம் நாள்  10-ஆம் நாள் என்றாவது  எட்டாவது நாள்  பத்தாவது நாள்  என முழு எழுத்து வடிவிலாவது இருக்க வேண்டும். ‘பயனாளிகளுக்கு தவறாமல் கொடுக்க வேண்டும்’ என இக்கோப்பில் உள்ளது. ‘பயனாளிளுக்குத் தவறாமல் கொடுக்க வேண்டும்‘ என வர வேண்டும். நான்காம் வேற்றுமை உருபான ‘கு’வின் பின்னும்…

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 5

(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 4  தொடர்ச்சி) எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 5 இவ்வாறு செய்திகளில் அடிக்கடி இடம் பெறும் தொடர்கள் சிலவற்றைப் பார்ப்போம். 50.      ஊழியர்களைத் தேர்வு செய்தனர். 51.      16 பேரைக் கைது செய்தனர். 52.      புதிய ஆட்களைத் தேர்ந்தெடுத்தனர். 53.      நடவடிக்கையைக் கைவிடு. 54.      விடுமுறையைக் குறை.    55.      புதுமுறையைப் பின்பற்று. 56.      நடைமுறையைக் கவனி. 57.      அமைப்பைச் சேர்ந்தவர்கள். 58.      கோசுட்டியைச் சேர்ந்தவர்கள்.   59.      கும்பலைச் சேர்ந்தவர்கள். 60.      தமிழகத்தைக் கடும் வெயில் வாட்டுகிறது. 61.      நிதியுதவியைப் பெற்றுக் கொண்டார். 62.      ஆகியவற்றைப் பார்வையிட்டார். 63.      போட்டியிடாததைத் தொடர்ந்து … 64.      பெயரைப் பரிந்துரைத்தால் …    65.      பயிர்களைச்…