2 ஆவது தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு+ கட்டுரைச் சுருக்க இறுதி நாள்
வணக்கம்தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டு நாள் புரட்டாசி 02,03, தி.பி.2057 /செட்டம்பர் 19, 20, 2026 மாநாட்டிற்குஆய்வுச்சுருக்கம்அனுப்ப பங்குனி 01, தி.பி.2057 / மார்ச்சு 15, 2026 வரைகாலநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. பின்வரும் இணைப்பில் கட்டுரையின் ஆய்வுச் சுருக்கத்தை 2 பக்கங்களுக்குள் சொற்கோப்பில் (word file ) அளிக்கவும். . https://forms.gle/QN63VR5v2KJAH5VA9நன்றி ஒருங்கிணைப்பாளர்2ஆவது உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு 2026, தொரண்டோ, கனடா
தொல்காப்பியம் – சொல்லதிகாரம் : பட்டய வகுப்பு : வாழ்த்துரை : இலக்குவனார் திருவள்ளுவன்
தொல்காப்பியம், சொல்லதிகாரம், இணையவழியிலான பட்டயத்தேர்வு இணைய வழி வாழ்த்துரை : இலக்குவனார் திருவள்ளுவன் நாள் மாசி 17,2057 / 01.03.2056 மாலை 4.45(தமிழ்நாட்டு நேரம்) புகு எண் & சொல் 81766444296 : avvai ஆத்திரேலியா தொல்காப்பிய மன்றம் தமிழ் ஐயா கல்விக்கழகம் ஒளவை அறக்கட்டளை, திருவையாறு
தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 05: இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 04: தொடர்ச்சி) தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 05 இந்நூற்பா மட்டுமல்ல, மற்றொரு நூற்பா மூலம் தமிழர் உலகிலேயே முதன்முறையாகத் திருமணப் பதிவு முறையைப் பின்பற்றி உள்ளனர் என்பதையும் நாம் அறியலாம். இதனைப் பேராசிரியர் சி.இலக்குவனார் நன்கு விளக்கியுள்ளார். திருமணப் பதிவை இங்கிலாந்து அரசாங்கம் 1653இல் அறிமுகப்படுத்தியது. பிரான்சு நாட்டில் பிரெஞ்சுப் புரட்சியின் விளைவாக 1791இலும் உருசியப் புரட்சியினால் உருசியாவில் 1917இலும் திருமணப் பதிவு நடைமுறைப்படுத்தப்பட்டது. இவ்வாறு வெவ்வேறு நாடுகள் வெவ்வேறு காலங்களில் திருமணப் பதிவைக்…
தொல்காப்பியமும் பாணினியமும் – 15 : உரையாசிரியர்கள் நால்வருண விளக்கங்கள் தொல்காப்பியர் கொள்கைக்கு முரண்பட்டன
(தொல்காப்பியமும் பாணினியமும் – 14 : இடைச்செருகுநர்களின் தோல்விக்கான காரணங்கள்-தொடர்ச்சி) தொல்காப்பியமும் பாணினியமும் 15 ஆரியர் வரவு தொல்காப்பியர் காலத்தில்தான் ஆரியம் தமிழ் நாட்டில் பரவத் தொடங்கி இருக்க வேண்டும். தமிழகத்தில் முதன் முதலாகக் குடியேறிய வேற்று நாட்டார் வட ஆரியரே. அவருள்ளும் மொழி நூற் புலமையும்ஒழுக்க மேம்பாடும் பிறர்க்கென வாழும் பெற்றிமையும் கொண்ட ஆரியரே தமிழகச் சான்றோருடனும் அரசர்களுடனும் தொடர்பு கொண்டனர். ஆரிய மொழிப் புலவரும் தமிழ் மொழிப்புலவரும் நட்புடன் அளவளாவி உறவாடினர். “கற்றாரைக் கற்றாரே காமுறுவர், அன்றோ?” எவரையும் வரவேற்று இன்ப வாழ்வு…
தொல்காப்பியமும் பாணினியமும் – 14 : இடைச்செருகுநர்களின் தோல்விக்கான காரணங்கள்-இலக்குவனார் திருவள்ளுவன்
(தொல்காப்பியமும் பாணினியமும் – 13 : இடைச்செருகல்கள் – தொடர்ச்சி) தொல்காப்பியமும் பாணினியமும் 14 இடைச்செருகுநர்களின் தோல்விக்கான காரணங்கள் தொல்காப்பிய இடைச்செருகுநர்களின் தோல்விக்கான காரணங்கள் குறித்துப் பேரா.முனைவர் மறைமலை இலக்குவனார் பின்வருமாறு தெரிவிக்கிறார்:- ”தொல்காப்பியர் இலக்கண முறைமைகளைத் தொடுத்துக் கூறும் அல்லது அடுக்கி வைக்கும் பாங்கு தொன்மைமிக்க தமிழின் இலக்கணச் சீர்மையை மட்டுமின்றி, நம் முன்னோரின் சிந்தனைப்போக்கின் முதிர்ச்சியையும் ஏரணவியலின் தொன்மையையும், அறிவியல் முறைமைப்படத் தரவுகளைத் தொகுத்து வழங்கும் ஆய்வுநெறிமுறைப் பயிற்சியையும் தெள்ளத்தெளிவாகக் காட்டுகிறது. தமிழைக் கணிணிமொழி என்று பெருமிதத்துடன் கொண்டாடிக் கொள்ளத் தூண்டுவது எழுத்துப்…
தொல்காப்பியமும் பாணினியமும் – 13 : இடைச்செருகல்கள் – இலக்குவனார் திருவள்ளுவன்
(தொல்காப்பியமும் பாணினியமும் – 12 : பாணினியின் வேர்ச்சொல்லாய்வு மிகப்பெரும் மோசடி– தொடர்ச்சி) தொல்காப்பியமும் பாணினியமும் 13 இடைச்செருகல்கள் இருவகை இடைச்செருகல்களை நாம் இருவகைகளாகக் குறிக்கலாம். ஆரிய நூல்கள் தம் நூல்களில் இல்லாச் சிறப்புகளை இருப்பதுபோல் காட்டுவதற்காகப் பிற நூல்களிலுள்ள நல்ல கருத்துகளை உட்புகுத்துவது. இதன் மூலம் ஆரிய நூல்களைச் சிறப்பானதாகவும் செம்மையானதாகவும் பிற நூல்களுக்கு முன்னோடியாகவும் காட்டுவது. மற்றொரு வகை தமிழ் நூல்களின் சிறப்புகளைக் குறைப்பதற்காகவும் காலத்தைப் பின்னுக்குத் தள்ளுவதற்காகவும் சமற்கிருத நூல்களின் வழி நூலாக அல்லது சமற்கிருத நூல்களில் இருந்து கருத்துகளை எடுத்துக்…
தொல்காப்பியமும் பாணினியமும் – 12 : பாணினியின் வேர்ச்சொல்லாய்வு மிகப்பெரும் மோசடி– இலக்குவனார் திருவள்ளுவன்
(தொல்காப்பியமும் பாணினியமும் – 11 : முன்னோர் மொழியைப் பொன்போல் போற்றும் தொல்காப்பியர்– தொடர்ச்சி) தொல்காப்பியமும் பாணினியமும் 12 பாணினியின் வேர்ச்சொல்லாய்வு மிகப்பெரிய மோசடி தொல்காப்பியப் பொருளதிகாரம் குறித்த நடுநிலையான பொருளுரையைப் பேரா.ப.மருதநாயகம் அளித்துள்ளார். பாணினியின் வேர்ச்சொல்லாய்வு மிகப்பெரிய மோசடி, ஏமாற்றுவேலை. ‘ஆதிபாஃசா’ நூலில் சட்டம்பி அடிகளார், தமிழிலிருந்து பிராகிருதமும் பிராகிருதத்திலிருந்து சமற்கிருதமும் தோன்றியது என்னும் வரலாற்று உண்மையை மெய்ப்பிக்கிறார். பேரா.சி.இலக்குவனார் அவர்களும் அவர் வழியில் அறிஞர்கள் பலரும் தொல்காப்பியத்தில் இடம் பெற்ற இடைச்செருகல்களை நீக்கினால் தொல்காப்பியம் முரண்பாடு இன்றிச் செம்மையாக இருக்கும் என நிறுவியுள்ளனர். இவை…
தொல்காப்பியமும் பாணினியமும் – 11 : முன்னோர் மொழியைப் பொன்போல் போற்றும் தொல்காப்பியர்– இலக்குவனார் திருவள்ளுவன்
(தொல்காப்பியமும் பாணினியமும் – 10 : தொல்காப்பியமும், திருக்குறளும் தமிழர்களின் இரண்டு கண்களாகும். – தொடர்ச்சி) தொல்காப்பியமும் பாணினியமும் 11 முன்னோர் மொழியைப் பொன்போல் போற்றும் தொல்காப்பியர் “தொல்காப்பிய மொத்த நூற்பாக்கள் 1571 ஆகின்றன. இவற்றுள் எழுத்து அதிகாரத்தில் 57, சொல் அதிகாரத்தில் 72, பொருள் அதிகாரத்தில் 158, ஆக மொத்தம் 287 நூற்பாக்கள் தொல்காப்பியருக்கு முன் உள்ளவர்களின் கருத்தை மேற்கோளாகக் குறிப்பிடுவனவாகும்.” என்கிறார் பேராசிரியர் சி. இலக்குவனார்(தொல்காப்பிய ஆங்கில மொழிபெயர்ப்பும் திறனாய்வும்: பக்கம் 15). இதனையே வரலாற்று நூலாகவும் கருத வேண்டும் என அவர்…
தொல்காப்பியமும் பாணினியமும் – 10 : தொல்காப்பியமும், திருக்குறளும் தமிழர்களின் இரண்டு கண்களாகும். – இலக்குவனார் திருவள்ளுவன்
(தொல்காப்பியமும் பாணினியமும் – 9 : வடமொழி இலக்கண நூலாசிரியர் அறுபத்து நால்வர் என்னும் புரட்டு – தொடர்ச்சி) தொல்காப்பியமும் பாணினியமும் தொல்காப்பியமும், திருக்குறளும் தமிழர்களின் இரண்டு கண்களாகும். திருவள்ளுவரும், திருக்குறளும் உலகளாவிய நிலையில் புகழ்பெற்ற அளவுக்கு தொல்காப்பியமும், தொல்காப்பியரும் உலக அளவில் சிறப்படையவில்லை. தொல்காப்பியரும், அதங்கோட்டாசானும், பனம்பாரனாரும் கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்தவர்கள் என வரலாற்று நிலையில் வரையறுக்கப்படுகிறது. தொல்காப்பியர் காலம் வடமொழி இலக்கண நூலான பாணினியின் காலமான கி.மு. 5 ஆம் நூற்றாண்டுக்கும், புத்தர் காலமான கி.மு. 6 ஆம் நூற்றாண்டுக்கும் முற்பட்டது. தொல்காப்பியர்…
தொல்காப்பியமும் பாணினியமும் – 9 : வடமொழி இலக்கண நூலாசிரியர் அறுபத்து நால்வர் என்னும் புரட்டு – இலக்குவனார் திருவள்ளுவன்
(தொல்காப்பியமும் பாணினியமும் 8 : தொல்காப்பியர் காலத்தில் சமற்கிருதத்தில் இலக்கணநூல் உருவாகவே வாய்ப்பில்லை – தொடர்ச்சி) தொல்காப்பியமும் பாணினியமும் 9 வடமொழி இலக்கண நூலாசிரியர் அறுபத்து நால்வர் என்னும் புரட்டு “இந்திரனுக்குப் பின்னும் பாணினிக்கு முன்னுமாக ஒருவன் பின் ஒருவராய் வந்த வடமொழி இலக்கண நூலாசிரியர் அறுபத்து நால்வர் என்பர். இவர்கள் ஒவ்வொருவர்க்கும் முப்பதாண்டுகளாக வைத்துக் கணக்கிடுங்கால் இந்திரனுக்கும் தொல்காப்பியம் – பாணினிக்கும் இடைப்பட்ட காலம் 1920 ஆண்டுகளாம்.” என்பது அடுத்த புரட்டாகும். ஆனால் இதை மெய்யென்று நம்பி, க.வெள்ளைவாரணார், தொல்காப்பியம்(வரலாறு) என்னும் தம் நூலில்…
தொல்காப்பியமும் பாணினியமும் – 8 : தொல்காப்பியர் காலத்தில் சமற்கிருதத்தில் இலக்கணநூல் உருவாகவே வாய்ப்பில்லை-இலக்குவனார் திருவள்ளுவன்
(தொல்காப்பியமும் பாணினியமும் – 7 : தொல்காப்பியர் குறிப்பிடும் சொற்கள் யாவும் தமிழே-தொடர்ச்சி) தொல்காப்பியமும் பாணினியமும் 8 பழந்தமிழர் நாகரிகத்தைப் பேசும் நூல் பழந்தமிழர் நாகரிகத்தைப்பற்றிப் பரக்கப் பேசும் நூல் தொல்காப்பியம். மக்கள் வையத்து வாழ வழிவகுத்துக் காட்டும் இலக்கிய நெறியினை எடுத்து இனிதியம்பும் ஒப்பற்ற தனிப் பெரும் நூல் இது. தமிழினத்தின் பரந்துபட்ட பண்பாட்டுப் பெருமையைப் பறைசாற்றும் தொல்பெரு நூலாகத் தொல்காப்பியத்தைச் கருதுவதில் யாதொரு தடையும் இல்லை. இந்நூலைத் தம் விழுமிய சொத்தாக எண்ணித் தமிழர்கள் பாதுகாக்க வேண்டும்.(புலவர் தி.வே. விசயலட்சுமி,தொல்காப்பியம் காட்டும் பண்பாட்டு…
தொல்காப்பியமும் பாணினியமும் – 7 : தொல்காப்பியர் குறிப்பிடும் சொற்கள் யாவும் தமிழே-இலக்குவனார் திருவள்ளுவன்
(தொல்காப்பியமும் பாணினியமும் – 6 : பாணினியத்தின் சிறப்பு?!-தொடர்ச்சி) தொல்காப்பியமும் பாணினியமும் 7 தொல்காப்பியர் குறிப்பிடும் சொற்கள் யாவும் தமிழே தமிழ் நூல்களைக் காப்பதற்காக இயற்றப் பெற்ற தொல்காப்பியத்தில் தொல்காப்பியர் தமிழ்ச்சொற்களைக் கையாள்வதுதானே முறை. தமிழ் மீதுள்ள வெறுப்பின் காரணமாகவும் சமற்கிருதத்தை உயர்த்தும் நோக்கிலும் வையாபுரி போன்றோர் பல சொற்களையும் சமற்கிருதமாகத் தவறாகக் கூறுகின்றனர். தொல்காப்பியர் காலத்தில் எழுத்தமைப்பு உருவாக்கி அதன்பின் சொல் வளத்தை உருவாக்கிய சமற்கிருதச் சொற்கள் எங்ஙனம் தொல்காப்பியத்தில் இடம் பெற இயலும்? தமிழ் இலக்கணம் வகுக்க வந்த தொல்காப்பியர் எதற்கு வளமில்லாத…
