தொல்காப்பியமும் பாணினியமும் – 7 : தொல்காப்பியர் குறிப்பிடும் சொற்கள் யாவும் தமிழே-இலக்குவனார் திருவள்ளுவன்
(தொல்காப்பியமும் பாணினியமும் – 6 : பாணினியத்தின் சிறப்பு?!-தொடர்ச்சி) தொல்காப்பியமும் பாணினியமும் 7 தொல்காப்பியர் குறிப்பிடும் சொற்கள் யாவும் தமிழே தமிழ் நூல்களைக் காப்பதற்காக இயற்றப் பெற்ற தொல்காப்பியத்தில் தொல்காப்பியர் தமிழ்ச்சொற்களைக் கையாள்வதுதானே முறை. தமிழ் மீதுள்ள வெறுப்பின் காரணமாகவும் சமற்கிருதத்தை உயர்த்தும் நோக்கிலும் வையாபுரி போன்றோர் பல சொற்களையும் சமற்கிருதமாகத் தவறாகக் கூறுகின்றனர். தொல்காப்பியர் காலத்தில் எழுத்தமைப்பு உருவாக்கி அதன்பின் சொல் வளத்தை உருவாக்கிய சமற்கிருதச் சொற்கள் எங்ஙனம் தொல்காப்பியத்தில் இடம் பெற இயலும்? தமிழ் இலக்கணம் வகுக்க வந்த தொல்காப்பியர் எதற்கு வளமில்லாத…
தொல்காப்பியமும் பாணினியமும் – 5 : மிகவும் பழமை வாய்ந்தது தொல்காப்பியம் – இலக்குவனார் திருவள்ளுவன்
(தொல்காப்பியமும் பாணினியமும் – 4 : முதனூல் – தொடர்ச்சி) தொல்காப்பியமும் பாணினியமும் 5 மிகவும் பழமை வாய்ந்தது தொல்காப்பியம் இது குறித்துப் புலவர் செந்துறைமுத்து (பரிபாடல் பழக்க வழக்கங்கள்: பக். 14) பின்வருமாறு தெரிவிக்கிறார்: “தமிழ் இலக்கிய உலகு மிகவும் பழமைபட்டது; பரந்து பட்டது; பெருமைபட்டது. தமிழ் இலக்கியங்களைத் தமிழ் உலகு எனவும் தமிழ் கூறும் இலக்கிய உலகு எனவும் கூறலாகும். காலவரையறையைக் காண வியலாத பழமையையும் பெருமையையும் கொண்டது தமிழ் உலகு. தமிழ் உலகில் வழங்கும் நூல்களில் தொல்காப்பியம் மிகவும் பழமை வாய்ந்தது….
தொல்காப்பியமும் பாணினியமும் – 4 : முதனூல் – இலக்குவனார் திருவள்ளுவன்
(தொல்காப்பியமும் பாணினியமும் – 3 தொடர்ச்சி) தொல்காப்பியமும் பாணினியமும் 4 முதனூல் தொல்காப்பியம் தமிழர்க்குக் கிடைத்த முதலாவது நூலே தவிர, அதுவே தமிழில் எழுதப்பட்ட முதல் நூல் அல்ல. இது குறித்துப் பேராசிரியர் சி.இலக்குவனார் (தொல்காப்பிய ஆராய்ச்சி , பக்கம்: 10) பின் வருமாறு உரைக்கிறார்: “தமிழ் மொழியில் நமக்குக் கிடைத்துள்ள நூல்களில் மிகப் பழைமையானது தொல்காப்பியம் என்று கூறப்படுகின்றது. தொல்காப்பியத்திற்கு முற்பட்ட நூல்கள் நமக்குக் கிடைத்தில. ஆதலின் தொல்காப்பியத்திற்கு முற்பட்ட நூல்கள் இல்லையென்று கூறிவிட இயலாது. தொல்காப்பியம் ஓர் இலக்கண நூலாகும். எம்மொழியிலும்…
தொல்காப்பியமும் பாணினியமும் – 3 : நூற்சிறப்பு – இலக்குவனார் திருவள்ளுவன்
(தொல்காப்பியமும் பாணினியமும் – 2 :பாணினியின் அ(சு)ட்டாத்தியாயி பிரிவுகள் – தொடர்ச்சி) தொல்காப்பியமும் பாணினியமும் நூற்சிறப்பு தொல்காப்பியச் சிறப்பு தொல்காப்பியம், பழந்தமிழர் வரலாற்றை எழுதுவதற்கு வேண்டிய கருவூலமாகத் திகழ்வது என்றும் தொல்காப்பியமே கிறித்து காலத்திற்கு முற்பட்ட வரலாற்று வாயில் என்றும் பேரா.முனைவர் சி.இலக்குவனார் தொல்காப்பியத்தின் சிறப்பினைப் பாராட்டுகிறார். “பொருள்” சிந்தனை தமிழுக்கே உரியது. தொல்காப்பியரும் முன்னோர் வழித் தம் நூலான தொல்காப்பியத்தில் பொருள் சிந்தனையை வெளிப்படுத்தியுள்ளார். இதனைப் பேராசிரியர் க. அன்பழகனார் (கலைஞரின் தொல்காப்பியப் பூங்கா: அணிந்துரை: பக்கம். 12-13) பின்வருமாறு கூறுகிறார்:- “மேலும்,…
தொல்காப்பியமும் பாணினியமும் – 2 :பாணினியின் அ(சு)ட்டாத்தியாயி பிரிவுகள் – இலக்குவனார் திருவள்ளுவன்
(தொல்காப்பியமும் பாணினியமும் – 1 : தொடர்ச்சி) தொல்காப்பியமும் பாணினியமும் 2 பாணினியின் அ(சு)ட்டாத்தியாயி பிரிவுகள் எட்டு அத்தியாயங்களை உடைய நூல் என்னும் பொருளில் பாணினி தன் நூலுக்கு அட்டாத்தியாயி என்று பெயர் வைத்தார். தமிழில் அட்டம் என்றால் எட்டைக் குறிக்கும். எட்டுபோல் காலைக் குறுக்கே மடக்கி அமர்வதை அட்டக்கால் என்று இன்றும் கூறிவருகிறோம். தமிழ் அட்டத்திலிருந்து வந்ததே சமற்கிருத அசுட்டம். எனவே, எட்டு அத்தியாயங்களைக் கொண்டது என்னும் பொருளில் அட்டகம் என்றும் கூறுகின்றனர். இதனைத் தமிழில் வேறுவகையில் குறிப்பிடுவதானால் எண்(8) இயல்கள் பகுக்கப்பட்டுள்ள…
தொல்காப்பியமும் பாணினியமும் – 1 : இலக்குவனார் திருவள்ளுவன்
(தொல்காப்பியமும் பாணினியமும் – பொருளடக்கம் : தொடர்ச்சி) தொல்காப்பியமும் பாணினியமும் – 1 : மூவாத் தமிழில் கிடைத்துள்ள முதல் நூலாகத் திகழ்வது சாவாப் புகழ் கொண்ட தொல்காப்பியம் ஆகும். தொல்காப்பியத்தின் உண்மையான சிறப்பை இன்னும் தமிழர்களே அறிந்திலர். அவ்வாறிருக்கப் பிறர் எங்ஙனம் அறிவர்? தொல்காப்பியச் சிறப்பை மறைக்கும் வண்ணம் ஆரிய வெறியர்கள் பாணினியத்தை உயர்த்தியும் அதன் காலத்தை முன்னுக்குக் குறிப்பிட்டும் பிற வகைகளிலும் எழுதி வருகின்றனர். தொல்காப்பிய நூற்பாக்கள் சிறப்பு குறித்தும் பாணினியின் அட்டாத்தியாயி நூற்பாக்கள் குறித்தும் ஒப்பிட்டு எழுத முதலில் எண்ணினேன்….
தொல்காப்பியமும் பாணினியமும் – பொருளடக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்
(தொல்காப்பியமும் பாணினியமும் – முன்னுரை: தொடர்ச்சி) தொல்காப்பியமும் பாணினியமும் நூற்குறிப்பு 2 பொருளடக்கம் 5 நூற்பகுப்பு 7 எழுத்ததிகார இயல்கள் 7 சொல்லதிகார இயல்கள் 7 பொருளதிகார இயல்கள் 7 நூற்பாக்களின் எண்ணிக்கை 8 பாணினியின் அ(சு)ட்டாத்தியாயி பிரிவுகள் 9 அட்டாத்தியாயி சூத்திர எண்ணிக்கை 9 பெயர்க்காரணம் 10 நூற்சிறப்பு 10 தொல்காப்பியம் சிறப்பிக்கும் மரபு 11 முதனூல் 12 தொல்காப்பியத்திற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பல்லாயிரம் தமிழ் நூல்கள் இருந்தன 13 மிகவும் பழமை வாய்ந்தது தொல்காப்பியம் 13 தொல்காப்பியத்திற்கு முற்பட்ட நூல்கள்…
தொல்காப்பியமும் பாணினியமும் – முன்னுரை: இலக்குவனார் திருவள்ளுவன்
தொல்காப்பியமும் பாணினியமும் முன்னுரை கனடாவில் முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு நிகழும் திருவள்ளுவர் ஆண்டு 2055, புரட்டாசித் திங்கள், 04, 05, 06ஆம் நாள்களில் (2024-09-20, 2024-09-21, 2024-09-22) கனடா, தொரண்டோ (Toronto) நகரில் சிறப்பாக நடைபெற்றது. கனடாத் தொல்காப்பிய மன்றமும் (தமிழ்நாட்டின்) இலக்குவனார் இலக்கிய இணையமும் இணைந்து இதனை நடத்தின. அதன் கருத்தரங்கத்தில் வாசிக்க நான் ‘தொல்காப்பியமும் பாணினியமும்’ என்னும் கட்டுரையை அனுப்பியிருந்தேன். நான் பொதுவாகக் கருத்தரங்கங்களில் பங்கேற்கும்போது விரிவான கட்டுரையை அனுப்பிவிட்டு அதன் பின்னரே சுருக்கத்தை எழுதியனுப்புவது வழக்கம். ஏனெனில்…
உயிரறிவியலின் முன்னோடி – இலக்குவனார் திருவள்ளுவன்
அன்றே சொன்னார்கள் 4 உயிரறிவியலின் முன்னோடி 1902ஆம் ஆண்டு உலக மக்களை வியப்பில் ஆழ்த்தினார் அறிஞர் சகதீசு சந்திரபோசு. அவர் வெளியிட்ட உயிரினங்கள்-உயிற்றவற்றின் துலங்கல் தன்மை (Response in the Living and Non-Living) என்னும் நூலில் தாவரங்களுக்கு உயிர் உண்டு என்றதால் குழப்பமும் வியப்பும் ஏற்பட்டு இறுதியில் உலகம் அவரைப் போற்றியது. நம்மிடம் உள்ள அறிவியல் புதையலை அறியாத நாமும் அறியாமையால் இன்று வரையும் அவ்வாறுதான் படித்து வருகிறோம். பாடல் வடிவில் உள்ள தமிழ் இலக்கிய உண்மைகள் யாவும் கற்பனையே என்னும்…
விலங்கறிவியல் – இலக்குவனார் திருவள்ளுவன்
விலங்கு என்பது குறுக்காக நடப்பவற்றைத்தான் குறிப்பிடும். கைகளில் குறுக்காக மாட்டப்படும் சங்கிலிக்காப்பை விலங்கு என்கிறோம் அல்லவா? வளைந்த அமைப்பு உள்ளதுதானே வில். எனவே, குறுக்காக உடலுடைய உயிரினங்கள் விலங்குகள் எனப் பட்டன. எனினும் அறிவியலில் பறவை வகைகளும் விலங்கு வகையில் அடங்கும். ஏன், மனிதனே ஒரு மன்பதை விலங்குதானே! தமிழ்ப் பெருநிலப்பரப்பு, புவி அமைந்த தொடக்கக் காலத்தில் இன்றைய ஆப்பிரிக்கா முதல் ஆசுதிரேலியா வரை இருந்தமையால் எண்ணற்ற உயிரினங்கள் வாழ்ந்திருந்தன. அவற்றையெல்லாம் ஆராயும் நோக்கில் மாணாக்கர் அறிவு வளம் பெருக வேண்டும். பொதுவாக இப்புவியில்…
சங்கப் புலவர்கள் பொன்னுரை – 9 : பெண்களைப் போற்றிய தொல்காப்பியர்! – இலக்குவனார் திருவள்ளுவன்
(சங்கப் புலவர்கள் பொன்னுரை – 8 – தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 9 பெண்களைப் போற்றிய தொல்காப்பியர்! “செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும் அறிவும் அருமையும் பெண்பா லான “ (தொல்காப்பியம், பொருளதிகாரம், பொருளியல், நூற்பா 15) “செறிவு என்பது அடக்கம்; நிறைவு என்பது அமைதி; செம்மை என்பது மனங்கோடாமை; செப்பு என்பது சொல்லுதல்; அறிவு என்பது நன்மை பயப்பனவுந் தீமை பயப்பனவும் துணிதல்; அருமை என்பது உள்ளக் கருத்து அறிதலருமை” என்று இளம்பூரணர் உரை வகுத்துள்ளார். செப்பும் என்பதற்குக் கூறத் தகுவன கூறலும் என்கிறார் பேரா.முனைவர்…
வழிவழியாகச் சிறந்து வாழ்வாயாக…! – சங்கப்புலவர்கள் பொன்னுரை – 4: இலக்குவனார்திருவள்ளுவன்
(சங்கப்புலவர்கள் பொன்னுரை – 3 தொடர்ச்சி) வழிவழியாகச் சிறந்து வாழ்வாயாக…! வழிபடு தெய்வம் நிற்புறம் காப்பப்பழிதீர் செல்வமொடு வழிவழி சிறந்துபொலிமின்!(தொல்காப்பியம், பொருளதிகாரம், செய்யுளியல் 422) கடைச்சங்கக் காலத்தைத்தான் நாம் சங்கக்காலம் என்கிறோம். அதற்கு முற்பட்ட சங்கத்தைச் சேர்ந்ததுதான் தொல்காப்பியம். எனவே, தொல்காப்பியப் பொன்னுரைகளையும் சங்க இலக்கியப் பொன்னுரையில் சேர்த்துப் பார்ப்போம். கடவுள் வணக்கம் என்பது தமிழர்க்குரியதுதான். ஆனால், அதில் மூடநம்பிக்கை கலக்கக் கூடாது. தெய்வ முணாவே மாமரம் புட்பறைசெய்தி யாழின் பகுதியொடு தொகைஇஅவ்வகை பிறவுங் கருவென மொழிப. …