புசல்லாவ சிரீ விவேகானந்தா அறநெறிப் பாடசாலையின் “குரு பூர்ணிமா பூசை”

புசல்லாவ  சிரீ விவேகானந்தா அறநெறிப் பாடசாலையின் “குரு பூர்ணிமா பூசை”   ஆடி மாதத்தில் வரும் முழு நிலவு நாள் அன்று சீடர்கள் தங்களுக்குக் கல்வி புகட்டிய குருவைப் போற்றும் முகமாகக் குரு வழிபாடு எனும் குரு பூசை செய்வதே குரு பூர்ணிமா எனப்படும். அந்த வகையில்  புசல்லாவ  சிரீ விவேகானந்தா அறநெறிப் பாடசாலையும் இந்து இறைஞர் மன்றமும் இணைந்து குரு பூர்ணிமா பூசையை ஆடி 04, 2047 / சூலை 19, 2016 அன்று நடாத்தியது.   இதில்  தலைமை விருந்தினராக மத்திய…

மாத்தளை கதிர்வேலாயுதக் கோவில் வெள்ளித்தேர்த்திருவிழா

  மாத்தளை கதிர்வேலாயுதக் கோவில் வெள்ளித் தேர்த் திருவிழா நடைபெற்றது. இந்நிகழ்வில் மலைநாட்டு புதிய  சிற்றூர்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும்  மன்பதை மேம்பாட்டு(சமுதாய அபிவிருத்தி) அமைச்சர் பழனி திகாம்பரம் மாத்தளை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்  ரோகினி கவிரட்ன  முதலானவர்கள் கலந்துகொண்டனர்.

காப்பிக்காட்டில் தொல்காப்பியர் சிலை திறப்பு விழா – நிகழ்ச்சிப் படங்கள்

[படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.] [embpicasa id=”6306482064070265953″]   படங்கள் நன்றி : தினமணி இலாசர்,  பெங்களூர் மு.மீனாட்சி சுந்தரம், கருங்கல் கண்ணன், அகரம்

பசும்பொன் நுண்கலைக்கழகப் படத்திறப்பு நிகழ்வுப் படங்கள்

திருமிகு எசு.ஆர்.கருப்பண்ணன் இ.ஆ.ப.(ஓய்வு) தாமரைத்திரு மனோரமா பொறியாளர் பொன்னையா ஆகியோர் படத்திறப்பு ஆனி 19, 2047 / 03-07-2016 காலை 10.00   [embpicasa id=”6305203207396406129″]

மாணிப்பாய் சத்திய சாயி பாபா பாடசாலைக்கு அமைச்சர் வே.இராதாகிருட்டிணன் வருகை

  மாணிப்பாய் சத்திய சாயி பாபா பாடசாலைக்கு மாநிலக்கல்வி அமைச்சர் வே.இராதாகிருட்டிணன் அண்மையில்  வருகை புரிந்தார்.  அதுபோது பாடசாலையின் அதிபர், ஆசிரியர்களுடன் பாடசாலையின்  மேம்பாடு தொடர்பான கலந்துரையாடலில் ஈடுபட்டார். சத்தி சாயி பாடசாலையானது தேசியக் கல்வி முறையைப் பின்பற்றுகின்றது. இப்பாடசாலை இலங்கையில் காணப்படும் சத்திய சாயி பாபா பாடசாலைகளில் ஒரு  முதன்மைப் பாடசாலையாகக் காணப்படுகின்றது. இங்கு இருமொழி கற்கை நெறி நடைபெறுவதோடு  மேலதிகக் கல்விசார் நடவடிக்கைகளில் முன்னிலை வகிக்கின்றது. [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]

கல்வெட்டில் முதல்திருக்குறள்

  சென்னை குறள்மலைச்சங்கம் சார்பில், ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகில்உள்ள மலையப்பாளையத்தில் உள்ள உதயகிரி முத்துவேலாயுதசாமி கோவிலில் கல்வெட்டில் முதல்திருக்குறள் எழுதப்பட்டுள்ளது.   2047 ஆனி 19  / 2016 சூலை அன்று கல்வெட்டில் முதல் குறள் திறப்பு விழா நடைபெற்றது. இவ் விழாவில் இ.வி.ஆ.மை.(இசுரோ) இயக்குநர் மயில்சாமி அண்ணாத்துரை கலந்து கொண்டு கல்வெட்டில் முதல் திருக்குறளை அறங்கேற்றம் செய்து பேசினார்.   திருக்குறளை  நாள்தோறும் படிக்க வேண்டும். அதைப்புரிந்து கொண்டு, அதன்படி நாம்வாழ்க்கையில் வாழ வேண்டும். இங்கே திருக்குறள் கல்லில் பதியப்பட்டிருப்பது போல்,…

ஆதிரைமுல்லையின் நூல் வெளியீட்டுவிழா

எழுத்தாளர் கவிஞர் ஆதிரைமுல்லையின் நூல் வெளியீட்டுவிழா   கவியரசர் கண்ணதாசன் பிறந்த நாள் விழாவும் நூல் வெளியீட்டு விழாவும் நால்வருக்கு விருது வழங்கும் விழாவுமான முப்பெரும் விழாவில்  ஆதிரை முல்லையின்  “உச்சிதனை முகர்ந்தால்” என்னும் கட்டுரைத் தொகுப்பு நூல் வெளியிடப்பட்டது.   திரைப்பட நடிகர்  இராசேசு தலைமை வகித்தார். கலைமாமணி பிறைசூடன்  நூலை வெளியிட்டுச் சிறப்புரையாற்றினார். இலக்கிய வள்ளல் மாம்பலம் பாரி சந்திரசேகர்  நூல்களைப் பெற்றுக்கொண்டார்.   கவியரசரின் திருக்குமரன் அண்ணாமலை கண்ணதாசன் நிகழ்வில் முன்னிலை வகித்தார். [படங்களை அழுத்தின் பெரியஅளவில் காணலாம்.]

மல்லாவியில் ஆய்வுக்கூடங்கள் திறப்பும் அமைச்சர் உரையும்

மல்லாவியில் ஆய்வுக்கூடங்கள் திறப்பும் அமைச்சர் உரையும்   “கடந்த காலங்களில் கல்விக்காக நிதி ஒதுக்கப்பட்டபொழுது அதில் பாகுபாடு காட்டப்பட்டது. பெரும்பான்மைக் கல்விக்கூடங்களுக்கு ஒரு மாதிரியாகவும் சிறுபான்மைக் கல்விக்கூடங்களுக்கு வேறு மாதிரியாகவும் நிதி பகிரப்பட்டது. ஆனால், இன்று நிலைமை அப்படி இல்லை. அனைத்துக் கல்விக்கூடங்களுக்கும் ஒரே அளவான நிதி ஒதுக்கப்படுகின்றது. அதற்காகத் தமிழ் அமைச்சர் ஒருவரும் பணியமர்த்தப்பட்டுள்ளார். எனவே, எமது கல்வியின் முன்னேற்றம் வெகு தொலைவில் இல்லை. இதனை எமது மாணவர்களும் ஆசிரியர்களும் முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” எனக் கல்வி அமைச்சர் வேலுசாமி இராதாகிருட்டிணன்…

வெள்ளவத்தையில் பரிசளிப்பு விழா

வெள்ளவத்தையில் பரிசளிப்பு விழா    வெள்ளவத்தை இராமகிருட்டிணா கல்விக்கூடத்தின் பரிசளிப்பு விழா அதன் தலைவர் தலைமையில் நடைபெற்றது.    இந்நிகழ்விற்குத் தலைமை விருந்தினர்களாகத் தேசிய இணைவாழ்வு – கலந்துரையாடல் – அரசவினை மொழிகள் அமைச்சர் மனோ.கணேசன், கல்வி அமைச்சர் வே.இராதாகிருட்டிணன், மேல் மாகாண அவை உறுப்பினர் சண். குகவரதன், இடைநிலைக் கல்விப் பணிப்பாளர் திருவாட்டி த.இராசரத்தினம், கொழும்பு தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திருவாட்டி சீ.கே.இலங்கதிலக முதலான பலர் கலந்து கொண்டார்கள்.   இத்துடன் மாணவர்களுக்கான பரிசளிப்பும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.   [படங்களை…

இராம.குருமூர்த்தி – உமாராணி இணையர் மணிவிழா – ஒய்எம்சிஏ: படங்கள்

   மணிவாசகர் பதிப்பக இராம.குருமூர்த்தி – உமாராணி இணையர் மணிவிழா – ஒய்எம்சிஏ:படங்கள் [embpicasa id=”6298290927512074337″]

தமிழர் எழுவருக்கான விடுதலைப் பேரணி, சென்னை : ஒளிப்படங்கள்

 சென்னை எழும்பூரிலிருந்து கோட்டை வரையிலான எழுவர் விடுதலைப் பேரணி  : ஒளிப்படங்கள் [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.] [embpicasa id=”6295259630384115473″]   முகிலன் பிரபாகரன் செகதீசுவரன் பிரசாந்து துறையூர் மயில் வாகனன் பரணிப்பாவலன் வாஞ்சிநாதன்