‘இந்தி எதிர்ப்புப் போராளி’ சி.இலக்குவனார் – கதிர் நிலவன்
‘இந்தி எதிர்ப்புப் போராளி’ சி.இலக்குவனார் நினைவு நாள் ஆவணி 18, 2004/ செப். 3, 1973 1965ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு மாணவர் போராட்டத்தில் தமிழாசிரியர்களின்பங்கு முதன்மையானது. மாணவர்களுக்கு தமிழ்மொழி காக்கும் உணர்வையும் இந்தித்திணிப்பை எதிர்த்திடும் போர்க்குணத்தையும் கற்றுக் கொடுத்தவர்கள்தமிழாசிரியர்களே! மதுரை தியாகராசர் கல்லூரி மாணவர்கள் நடத்திய முதல் போராட்டம்தான் தமிழகமெங்கும்மாணவர்களைப் போர்க்களத்தில் இறக்கி விட்டது. அந்தக் கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றிய செந்தமிழ்க் காவலர் சி.இலக்குவனார் வைத்த முதல் ‘தீ’ தான் காங்கிரசு ஆட்சிக்குக் கொள்ளி வைப்பதில் முடிந்தது. இலக்குவனார்இந்தி எதிர்ப்புப் போருக்கு…
வ.உ.சிதம்பரனாரும் சி.இலக்குவனாரும்
செப்தம்பர் 5 ஆம் நாளன்று இந்தியா முழுவதும் விழா கொண்டாடப்படுகிறது. ஆனால், அந்த விழா யாருக்காகக் கொண்டாடப்படவேண்டுமோ அவருக்காகக் கொண்டாடப்படவில்லை. வள்ளியப்பன்உலகநாதன் – பரமாயி இணையரின் மூத்த மகனான அறிஞர் வ.உ.சிதம்பரம்(பிள்ளை) அவர்களின் பிறந்த நாள் ஆவணி 22, 1903 / 5.09.1872 ஆகும். இந்தியாவில் இருந்த குறிப்பிடத்தகுந்த வழக்குரைஞர்களில் இவரின் தந்தையும் ஒருவர். தந்தையின் வழியில் சட்டம் பயின்று சிறந்த வழக்குரைஞராகத் திகழ்ந்தார். வழக்குரைஞராகப் பணியாற்றிப் பெரும் பணம் சம்பாதித்திருக்க முடியும். குடும்பச் செல்வத்தையே நாட்டிற்காகத் தந்தவர் இதைப்பற்றியா கவலைப்பட்டிருப்பார்….
(இ)ரியாத்தில் சி.இலக்குவனார் நூற்றாண்டு விழா – வ.உ.சி நினைவேந்தல்(2010)
(இ)ரியாத்தில் செந்தமிழ்ச்சுடர் பேராசிரியர் சி.இலக்குவனார் நூற்றாண்டு விழா – வீரச் செம்மல் வ.உ.சி நினைவேந்தல் (ரியாத் : சவுதி அரேபிய வளைகுடா செந்தமிழ்ச் சங்கம் சார்பாக புரட்டாசி 22, 2041 / 8.10.2010 வெள்ளி அன்று செந்தமிழ்ச்சுடர் பேராசிரியர் சி.இலக்குவனார் நூற்றாண்டு விழா- வீரச் செம்மல் வ.உ.சி நினைவேந்தல், முருகேசன் அவர்கள் தலைமையில். தேனி செயராமன் முன்னிலையில் இனிதே நடைபெற்றது. பேராசிரியர் இலக்குவனார் பற்றி இணைய அரங்கத்தின் மூலம் சென்னையிலிருந்து இலக்குவனார் திருவள்ளுவன் ஆற்றிய உரை) அயலகத்தில் கால் ஊன்றியிருந்தாலும் எண்ணமும் சொல்லும்…
இலக்குவனார் நினைவரங்கம், ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம், சென்னை
ஆவணி 17, 2045 / செப்.02, 2014
மாமூலனார் வாழ்க்கைக் குறிப்பு – சி.இலக்குவனார்
(ஆடி 25, 2045 /ஆகத்து 10, 2014 இதழின் தொடர்ச்சி) மாமூலனார் பாடல்கள் – நிறைவுரை -சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் பழந்தமிழ்நாட்டில் வாழ்ந்த புலவர்கள் அரசர்கள் முதலியோரின் உண்மை வரலாறுகள் நமக்குக் கிடைக்கப் பெறவில்லை எழுதிவைக்கப்பட்ட வரலாறுகள், பல தமிழ் நூல்கள் அழிந்தவாறு அழிந்தனவோ? அன்றி, பழந்தமிழ் நாட்டுப் பெரியார்கள் தம்மையும், தம் போன்ற மக்களையும் பொருட்படுத்திக் கொள்ளாது தமிழையே நினைந்து, தமிழுக்காகவே வாழ்ந்து, தமிழ்த் கொண்டு ஆற்றி மறைந்தார்களோ? அறியோம். சில பெரும் புலவர்கட்குப்…
மாமூலனார் பாடல்கள் 30: சி.இலக்குவனார்
(ஆடி 18, 2045 /ஆகத்து 03, 2014 இதழின் தொடர்ச்சி) ௩௰ “உடையும் என் உள்ளம்” – தலைவன் -சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் எல்லா வகையிலும் மேம்பட்டு விளங்கிய தலைவனும் தலைவியும் தம்முள் காதலித்தனர். ஒருவர்கொருவர் வாழ்க்கைத் துணைவர்களாக இருப்பதற்கு உறுதிசெய்து கொண்டனர். பிரிந்து அவர் அவர் வீட்டிற்குச் சென்றனர். தலைவன் தலைவி நினைவோகவே இருந்தான்; தலைவி தலைவன் நினைவாகவே இருந்தாள். தலைவன் காதலியை அடைந்து காதல் உரையாடிக் களிப்பெய்தக் கருதினான். ஒரு பெண் – மணமாகாத பெண்…
மாமூலனார் பாடல்கள் 29: சி.இலக்குவனார்
(ஆடி 11, 2045 / சூலை 27, 2014 இதழின் தொடர்ச்சி) உகூ. “நாட்டனர் வாழி!” -சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் தோழி : அம்ம! நின் காதலர் நின்னை விட்டுப் பிரியவே மாட்டார் என்றாய்! பிரிந்தாலும் விரைவில் வந்துவிடுவார் என்றாய், சென்றவரை இன்னும் காணமுடியவில்லையே. தலைவி: வராது என்ன செய்வார்? வருவார். தோழி: எப்போழுது? உன் அழகு எல்லாம் மறைந்து உன் உடல் இளைத்து உருமாறிய பின்பா? தலைவி: அப்படிக் கருதேல் அவர் அன்பின் திறம் நீ அறியாய்?…
மாமூலனார் பாடல்கள் 28: சி.இலக்குவனார்
(ஆடி 4, 2045 / சூலை 20, 2014 இதழின் தொடர்ச்சி) உஅ. முன்னே புறப்படு என்நெஞ்சே! -சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் தலைவன் திருமணத்தை நடத்திக்கொள்ளாது வேற்றுநாட்டிற்குச் சென்றுவிட்டான். தலைவி முதலில் ஆற்றி இருந்தாளேனும், நாள் ஆக, நாள் ஆக உடல் இளைத்தது; கைகளில் அணிந்துள்ள வளையல்கள் கழன்று கழன்று விழுந்தன உறக்கம் என்பது இல்லாது கண்களினின்றும் கண்ணீர் வடிந்து கொண்டே இருந்தது. ஆற்ற முடியாத துன்பம்! இதைப் போக்கி கொள்வதற்கு வழிதேடுதல் வேண்டும். வழி என்ன?…
மாமூலனார் பாடல்கள் 27: சி.இலக்குவனார்
(ஆனி 29, 2045 / சூலை 13, 2014 இதழின் தொடர்ச்சி) உஎ. “ஆண்டு அவர் நீடலர்” – தோழி சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் “சென்றவர் என்று வருவரோ” என்ற சிந்தனையில் ஆழ்ந்திருக்கின்றாள் தலைவி, உயிர் அனையதோழி வாளாய் இருப்பாளா? ஆறுதல் கூறுகின்றாள். “தோழி! வருந்தேல், ஏதேனும் தொழில் செய்தல் வேண்டும். சோம்பி இருத்தல் ஆகாது.’ என்ற நினைப்பு அவரை வேற்று நாட்டுக்குச் செல்லவிடுத்தது. அவர் சென்ற இடத்தின் தன்மையைக் கேள். மலைமேடுகளில் காடுகளைத் திருத்தி விதைத்து…
மாமூலனார் பாடல்கள் 26: சி.இலக்குவனார்
26. நீ செயலற்றது எதனால்? -சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் (ஆனி 22, 2045 / சூலை 06, 2014 இதழின் தொடர்ச்சி) 26 பாடல் அகநானூறு 359 பாலை பனிவார் உண்கணும் பசந்ததோளும் நனிபிறர் அறியச்சாஅய நாளும். கரந்தனம் உறையும் நம்பண்பு அறியார் நீடினர் மன்னோ காதலர் என நீ எவன் கையற்றனை இகுளை! அவரே வான வரம்பன் வெளியத்து அன்னநம் மாண்நலம் தம்மொடு கொண்டனர் முனாஅது அருஞ்சுரக்கவலை அசைஇய கோடியர் பெருங்கல் மீமிசை இயம் எழுந்து ஆங்கு வீழ்பிடி…
மாமூலனார் பாடல்கள் 25: சி.இலக்குவனார்
உரு. எவன் ஆய்ந்தனர்கொல் தோழி! – தலைவி –சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் (ஆனி 15, 2045 / சூன் 29, 2014 இதழின் தொடர்ச்சி) திருமணம் நிகழ்ந்தபின் தலைவன் தலைவியைவிட்டுப் பிரிந்து சென்றுள்ளான். பண்டைத் தமிழ்நாட்டில் திருமணம் நிகழ்ந்த சின்னாட்களில் தலைவன் தலைவியைப் பிரிதல் சிறப்புக்கல்வி பெறும்பொருட்டும், அரசியல் அலுவல் பொருட்டும். பொருளீட்டும் பொருட்டும் நிகழ்ந்தது. இப் பிரிவுகளைப்பற்றிய விரிவுகளைத் தொல்காப்பியர் இலக்கண நூலில் தெளிவுற அறியலாம். இப்பாடலில் வருகின்ற தலைவனும் அவ்வாறே பிரிந்து சென்றுள்ளான். தலைவனைப்பிரிந்த தலைவி வருந்துகின்றாள்….
மாமூலனார் பாடல்கள் 24: சி.இலக்குவனார்
(ஆனி 8, 2045 / சூன் 22, 2014 இதழின் தொடர்ச்சி) “கண்பனி நிறுத்தல் எளிதோ” – தலைவி – சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் உச பாடல். அகநானூறு 97 பாலை கள்ளி அம்காட்ட புள்ளி அம் பொறிக்கலை வறன் உறல் அம் கோடு உதிர வலம் கடந்து புலவுப்புலி துறந்த கலவுக்குழி கடுமுடை இரவுக் குறும்பு அலற நூறி நிரைபகுத்து இருங்கல் முடுக்கர்த் திற்றிகொண்டும் கொலையில் ஆடவர் போலப் பலவுடன் பெருந்தலை எருவையொடு பருந்து…
