உயர்தனிச்செம்மொழி முன்மொழிந்த மூதறிஞர்கள் – ப. மருதநாயகம்
(உயர்தனிச்செம்மொழி முன்மொழிந்த மூதறிஞர்கள் 2/5 தொடர்ச்சி) தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் பின்னிணைப்பு உயர்தனிச்செம்மொழி முன்மொழிந்த மூதறிஞர்கள் 3/5 5. விபுலானந்த அடிகளார் ஐந்தாம் கட்டுரை விபுலானந்த அடிகளார் குறித்தது. “யாழ்நூல் கண்ட விபுலானந்தர் தமிழிசைக்கு மட்டுமின்றி, தமிழியலின் பல்வேறு துறைகளுக்கும் பெரும்பங்களிப்பைச் செய்துள்ளார். “படைப்பிலக்கியக்காரராக, திறனாய்வாளராக, மொழியியல் வல்லுநராக, கலைவரலாற்று ஆசிரியராக, கவிஞராக, தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் மொழி பெயர்த்தவராக, தமிழினப் பாதுகாவலராக, இதழியலாளராக, அறிவியல், சமயம், தத்துவம், வரலாறு ஆகிய துறைகளில் புததொளி தந்தவராக, அவர் செய்துள்ள…
இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 13
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 12தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ 4. மொழி மாற்றங்கள் தொடர்ச்சி சொல் பழம்பொருள் புதுப்பொருள் அகம் உள்,மனம் கருவம் அகலம் மார்பு இடத்தின் பரப்பு அவல் பள்ளம் தின்னும் அவல் இயம்புதல் ஒலித்தல் சொல்லுதல் கண்ணி அடையாள மாலை வலை கருவி தொகுதி ஆயுதம் கிழவன் உரியவன் முதியவன் கோடை மேல்காற்று வெயிற்காலம் சாறு திருவிழா …
இந்தி எதிர்ப்புத் தீர்மானம்: முதல்வருக்கும் பேரவையினருக்கும் பாராட்டு! எனினும் . . . .- இலக்குவனார் திருவள்ளுவன்
முதல்வர் தலைமையில் தேசிய மொழிகள் ஆட்சிமொழிச் செயலாக்கக் குழு அமைக்க வேண்டும்! நேற்றைய சட்டமன்ற நாள்(ஐப்பசி 01,2053/18.10.2022) மொழிப்போர் வரலாற்றில் முதன்மையான நாள்களுள் ஒன்றாகும். நேற்று சட்டப்பேரவையில் இந்தி எதிர்ப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிக்கத்தக்கதாகும். தீர்மானத்தை முன் மொழிந்து முதல்வர் மு.க.தாலின், “மொழி என்பது, நமது உயிராய், உணர்வாய், விழியாய், நம் அனைவரின் எதிர்காலமாய் இருக்கிறது. . . . ஆட்சி நிருவாகத்தில் இந்தியைத் திணிப்பது தொடங்கிக், கல்வி மூலமாகத் திணிப்பது வரை, தாங்கள் ஆட்சிக்கு வந்ததன் நோக்கமே இந்தியைத் திணிப்பதுதான் என்று நினைக்கிறார்கள். …
இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 12
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 11 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ 4. மொழி மாற்றங்கள் ஒரு சொல் ஒரு பொருளையே உணர்த்துவதுதான் முறை. ஒரு சொல் தோன்றுங்காலத்து ஒரு பொருளை உணர்த்தவே தோன்றியது. ஆனால் காலப்போக்கில் ஒரு சொல் பல பொருளை உணர்த்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டது. மாந்தரின் சோம்பரும், புதிய சொல் படைக்கும் ஆர்வமும் ஆற்றலும் இன்மையும், இந் நிலை ஏற்படக் காரணங்களாக இருக்கலாம். கடி என்னும் கிளவி தொல்காப்பியர் காலத்தில் பன்னிரண்டு பொருள்களை உணர்த்தும் நிலையை அடைந்துள்ளது. கடியென் கிளவி …
‘ஒன்றிய அரசின் இந்தித்திணிப்புகள்’ தலைப்பிலான கட்டுரைப் போட்டி
‘ஒன்றிய அரசின் இந்தித்திணிப்புகள்’ தலைப்பிலான கட்டுரைப் போட்டி 17.11.2022 அன்று வரும் உலகத்தமிழ் நாளையும் தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் 123 ஆவது பிறந்த நாளையும் முன்னிட்டு, ‘ஒன்றிய அரசின் இந்தித்திணிப்புகள், முற்றாக ஒழிப்பதற்கான தீர்வுகள்’ என்னும் தலைப்பிலான கட்டுரைப்போட்டியைத் தமிழ்க்காப்புக் கழகமும் இலக்குவனார் இலக்கிய இணையமும் இணைந்து நடத்துகின்றன. ஏ4 அளவில் 4 பக்கம் குறையாமல் 6 பக்கம் மிகாமல் கட்டுரை இருத்தல் வேண்டும். இந்திய விடுதலை நாளில் இருந்து ஒன்றிய அரசு செய்துவரும் இந்தித்திணிப்புகளையும் அவற்றால் தேசிய மொழிகளுக்கு ஏற்பட்டு வரும் இடர்களையும்…
இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 11
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 10 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ 4. மொழி மாற்றங்கள் மொழியில் காணப்படும் இலக்கணக் கூறுகளின் மாற்றமும், சொற்பொருள்களின் மாற்றமும், சொல்மாற்றமும் விரைந்து நிகழ்வன அல்ல; மிகுந்தும் நிகழ்வனவல்ல. நூற்றாண்டு தோறும் சிலவாகவே நிகழும். இவ்வாறு மாற்றங்கள் நிகழ்வதற்குரிய காரணங்கள் மொழியைப் பயன்படுத்தும் மக்களுடைய சோம்பர், விரைவு, அயல் மொழியாளர் கூட்டுறவு, மொழியறிவு இன்மை எனப் பல திறப்படும். இம் மாற்றங்கள் மொழி வளர்ச்சியில் இயல்பாக நிகழக் கூடியன என்பதைத் தமிழ்மொழி இலக்கண ஆசிரியர்கள் நன்கு அறிந்துள்ளனர். தொல்காப்பியர் இவ்வகை மாற்றங்களை…
இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 10
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 9 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ 3. பழந்தமிழ் தொல்காப்பியர் காலம் ஆரியர்கள் தென்னாட்டில் குடியேறிய காலம். அக்காலம் கி.மு. ஏழாம் நூற்றாண்டு என்பர். அக்கால நிலையைத் தெளிவாக அறிவிப்பது தொல்காப்பியமே. தொல்காப்பியர் அவர்க்கு முன்பிருந்தோர் இயற்றிய நூல்களையும், அவர் காலத்து நூல்களையும் அவர் கால வழக்கினையும் நன்கு ஆராய்ந்து மொழியிலக்கணமும் இலக்கிய இலக்கணமுமாகப் பயன்படத் தம் நூலை ஆக்கித் தந்துள்ளார். அத் தொல்காப்பியத்துள் பயின்றுள்ள பல சொற்கள் இன்றும் தமிழை வளம்படுத்திக் கொண்டிருக்கின்றன. தொல்காப்பியச் சொற்களுக்கு உரிய அகராதியை ஒருமுறை…
இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 9
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 8 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ 3. பழந்தமிழ் தொடர்ச்சி ஆங்கில மொழியில் பிரித்தானியச் சொற்கள் எந்த அளவு கலந்துள்ளனவோ அந்த அளவு திராவிட (தமிழ்)ச் சொற்கள் சமசுக்கிருதத்தில் கலந்துள்ளன. ஆனால் இவ்வுண்மை நெடுங்காலமாக உணரப்பட்டிலது. (திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம், பக்கம் 714) மேனாட்டு மொழியியல் அறிஞர்கள் இந் நாட்டு மொழிகளைக் கற்று ஆராய்ந்து ஆரிய மொழியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட திராவிட மொழிச் சொற்களைத் தொகுத்து எடுத்து அறிவித்துள்ளனர். அதன் பின்னர்தான் ஆரியம் கடன் கொடுக்குமேயன்றிக் கொள்ளாது என்ற கொள்கை…
இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 8
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 7 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ 3.பழந்தமிழ் தொடர்ச்சி 4. அம் மொழியின் எழுத்து ஓவிய ஒலியெழுத்தாகும். ஓவியமாக நின்று உருவப்பொருளையும் ஒலியடையாளமாக நின்று அருவப் பொருளையும் அவ் வெழுத்து அறிவித்தது. 5. எழுத்தடையாளங்கள் அசைகளை அறிவியாது முழுச் சொற்களையே அறிவித்தன. உலக மொழிகள் அனைத்தும் முதலில் ஓவிய எழுத்துகளைக் கொண்டிருந்தன;பின்னர் அவற்றினின்றும் ஒலி எழுத்துகள் தோன்றின. ஆங்கில அ, ஆ என்பன ஓவிய எழுத்துகளிலிருந்து தோன்றியனவே. தமிழ் எழுத்துகளும் அவ்வாறு தோன்றியிருக்க வேண்டும்….
புரட்சி விதைகளை விதைத்தாரே இலக்குவனார்
புரட்சி விதைகளை விதைத்தாரே! தத்தனா தானனத் …… தனதான தத்தனா தானனத் …… தனதான ……… பாடல் ……… வற்றிடா நீர்வளச் சிறப்போடு உற்றசீர் வாய்மேடு–தலம்வாழ்ந்த சிங்கார வேலர் இரத்தினத்தாச்சி செய்தவப் பயனென உதித்தாரே ஒப்பிலாப் போர்க்குண மறத்தோடு முத்தமிழ் காத்திடப் பிறந்தாரே வளைந்திடாத் துணிவுக்கு உருவாக வையகம் போற்றிய இலக்குவரே! தத்தன தனதன தத்தன தனதன தத்தன தனதன …… தனதான முற்றிய புலவரின் உற்றநல் துணையொடு நற்றமி ழறிவினை –உளமாரப் பெற்றபின் இளையவர் கற்றிடும் வகையினில்…
இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 7
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 6 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ 3.பழந்தமிழ் மொழிகளின் தொன்மையை யறிவதற்கு அவற்றின் எழுத்துச் சான்றுகளும் (கல்வெட்டுகள், செப்பேடுகள்) இலக்கியங்களும் பெரிதும் துணை புரிகின்றன. எகித்து நாட்டில் கி.மு. 6000 ஆண்டிலிருந்தே கல்வெட்டுகள் தோன்றியுள்ளன. கி.மு. 3700 முதல் கி.மு. 200 வரை எழுத்தாவணங்கள் தொடர்ந்து வந்துள்ளன. அசீரிய பாபிலோனியா நாட்டில் இலக்கியப் பொற்காலம் கி. மு. ஏழாம் நூற்றாண்டின் இடைப்பகுதியாகும். பெரிசிய நாட்டில் கி.மு. ஆறாம் நூற்றாண்டிலிருந்து இலக்கியத் தோற்றம் எழுந்துள்ளது. பரதக் கண்டத்தில் ஆரிய…
இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 6
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 5 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ 2 மொழிகளும் மொழிக்குடும்பங்களும் தொடர்ச்சி தமிழ்க் குடும்ப மொழிகளுள் திணை எனும் பாகுபாடு உண்டு. ஏனைய குடும்ப மொழிகளுள் இத் திணைப் பாகுபாடு காண்டல் அரிது. இந்தோஐரோப்பிய மொழிகள் சொற்களின் இயல்புக் கேற்பப் பால் கூறும் முறையைக் கொண்டுள்ளது. பொருள் உயர்திணை ஆண்பாலைச் சார்ந்ததாய் இருக்கலாம். ஆனால் சொல் அஃறிணை ஒன்றன்பாலாய்க் கூறப்படும். இந்தோஐரோப்பிய மொழிகளுள் சிலவற்றுள் எல்லாம் உயர் திணையே; ஆண்பால் அல்லது பெண்பால் என்ற பகுப்புத்தான் உண்டு. …