இலக்குவனாரின் “பழந்தமிழ்”-ஆய்வுநூல்: 7 – மறைமலை இலக்குவனார்

(ஆவணி 06, 2046 / ஆக.23, 2015 தொடர்ச்சி) 7 எனினும் இத்தகைய உண்மைகளை உணரப்பெறா வையாபுரியார் தொல்காப்பியரை மேலும் கடன்பட்டவராகவே காட்ட விழைகிறார்.   தொல்காப்பியத்தில் ‘மொழிமரபு’ இயலில் அமைந்துள்ள இரண்டு நூற்பாக்கள் வரருசி இயற்றிய ‘பிராகிருதப் பிரகாசா’ எனும் இலக்கணநூலில் காணப்படும் இரு நூற்பாக்களின் மொழியாக்கமே என வாதிடுகிறார், வையாபுரியார்.  ‘அகர இகரம் ஐகாரமாகும்’ ‘அகர உகரம் ஔகாரமாகும்’ என்பவை அவ்விரு நூற்பாக்களுமாகும்.  ‘இவற்றுள் காணப்படும் புதுமை என்ன? பிராகிருத நூல்களிலிருந்து கடன்பெற்றுச் சொல்லவேண்டிய இன்றியமையாமை யாது உளது? மொழிவரலாற்றில் ஐயும்…

தமிழ் இணையக்கல்விக்கழகம் : நோக்கும் போக்கும் 2 – இலக்குவனார் திருவள்ளுவன்

(அகரமுதல 92 ஆடி 31, 2046 / ஆக.16, 2015 தொடர்ச்சி) 2   தமிழ்ப்புலமையுள்ளவர்களே இயக்குநர்களாக அமர்த்தப்பட வேண்டும் என்பது குறித்துத் தமிழ்க்காப்புக்கழகம் சார்பில் அரசிற்கு முறையீடு அளிக்கப்பட்டது. இதில், பின்வருமாறு தெரிவிக்கப்பட்டது :  “இத்தகைய நோக்கங்களையும் குறிக்கோளையும் நிறைவேற்ற தமிழ்ப்புலமை உள்ளவர் அதனை வழி நடத்தலே ஏற்றது என அனைவரும் அறிவர். ஆனால் இயக்குநராக நியமிக்கப்பட விரும்பியவரின் தகுதி அடிப்படையில் இந்நிறுவனம் தொடங்கப்பட்ட பொழுது அப்போதைய அரசால் இயற்பியல் / பொறியியல் / தகவலியலில் முனைவர் பட்டம் பெற்றிருத்தலே அடிப்படைத் தகுதியாக…

தமிழ்நலப் பகுத்தறிவுக் கவிஞர் பேராசிரியர் சி.இலக்குவனார் 1 – இலக்குவனார் திருவள்ளுவன்

      உலக மொழிகளின் தாயான தமிழ் மொழி, தனக்குரிய செம்மை நிலையைப் பன்னூறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அடைந்து விட்டது. உலகின் பல பகுதிகளில் மொழியே பிறந்திருக்காத பொழுது, ஏன், மக்களினமே தோன்றியிராத பொழுது இத்தகைய உயர்தனிச் செம்மை நிலையைத் தமிழ் அடைந்து விட்டது. அத்தகைய வளர்ச்சிக்கும் அதன் தொடர்ச்சியான செம்மைக்கும் பல்வேறு புலவர்கள், கவிஞர்கள், அறிஞர்கள், கட்டுரையாளர்கள், படைப்பாளர்கள், சொற்பொழிவாளர்கள் எனப் பல நிலையில் உள்ளவர்களும் பாடுபட்டுள்ளனர்; பாடுபட்டு வருகின்றனர்.   இத்தகையோருள் 20 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அறிஞர்களில் குறிப்பிடத்தக்க முதன்மையானவர்களில் ஒருவராகத்…

செவ்வியல் இலக்கியங்களில் கலைச்சொல் மேலாண்மை 4 – இலக்குவனார் திருவள்ளுவன்

(ஆடி 31, 2046 /ஆக.16, 2015 தொடர்ச்சி) 4 expertise : தனித்துறைச் சிறப்பறிவுத்திறம், சிறப்புத்திறமை, சிறப்பறிவாளர் ஆய்வுரை, சிறப்பறிவுத் திறம் , சிறப்பறிவாளர் கருத்துரை, தொழில் நுட்ப அறிவு, வல்லமை, நிபுணத்துவம், சிறப்புத் திறன் எனப் பலவாகக் குறிப்பிடுகின்றனர். வல்லமை என்பதையே கையாளலாம். மருத்துவ வல்லமை – medical expertise வல்லமை அறிவாற்றல்     – expertised knowledge வல்லமை மேலாண்மை – expertise management இவ்விடங்களில் வல்லுநர் அறிவாற்றல், வல்லுநர் மேலாண்மை எனக் குறி்க்கின்றனர். அது தவறு. வல்லமையுடையவர் வல்லுநர் ஆவார். இங்கே…

இணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – 4 இலக்குவனார் திருவள்ளுவன்

(ஆடி 31, 2046 /ஆக.16, 2015 தொடர்ச்சி) 3.] சங்க இலக்கியச் சொல்லடைவு இதில் தேடுபொறி இல்லை. அகரவரிசைப்படி நாம் சொல்லைத் தேடுவதற்கு மாற்றாகச் சொல் தேடுதல் அமைந்தால் எளிதில் பொருள்காண இயலும். நேரம் வீணாவது தடுக்கப்படும். நூற்பக்கங்களில் பக்க எண் தேடல் உள்ளது. 4.] திருக்குறட் சொல்லடைவு ‘திருக்குறட் சொல்லடைவு சொல் தேடல்’ என்னும் தலைப்பு உள்ளது. இதன் மூலம் அகரவரிசையிலான முழுப் பக்கங்களைத்தான் காண இயலும்(பட உரு 20). வேண்டும் சொல்லுக்கான பொருளை எளிதில் காண இயலாது. ஆனால், இதில் பக்க…

எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! வடக்கு மண்டில மாநாடு

தமிழர் தேசிய முன்னணி நடத்தும் : எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! வடக்கு மண்டில மாநாடு தமிழராய் இணைவோம்! நாள் : திருவள்ளுவர் ஆண்டு 2046 கன்னி 9 (26-09-2015) காரி (சனி)க்கிழமை) இடம் : திருவாவடுதுறை டி.என். இராசரத்தினம் கலையரங்கம், இராசா அண்ணாமலைபுரம், சென்னை-600 028. நீதிநாயகம் கல்வியாளர்கள் எழுத்தாளர்கள் தலைவர்கள் பங்கேற்கிறார்கள் தமிழர்களே திரண்டு வருக!

செவ்வியல் இலக்கியங்களில் கலைச்சொல் மேலாண்மை 3 – இலக்குவனார் திருவள்ளுவன்

(ஆடி 24, 2046 / ஆக 09, 2015 தொடர்ச்சி) 3    பதவிப்பெயர்கள் அல்லாமல் வேலைத் தேர்ச்சி அடிப்படையிலும் வகைப்பாடு கொண்டு நாம் தொழிலாளிகளைப் பிரிக்கிறோம். வேலையில் முழுமையான தேர்ச்சி அல்லது அரைகுறை தேர்ச்சி அல்லது தேர்ச்சியின்மை என்ற மூன்றின் அடிப்படையில் தேர்ச்சிநிலையையும் தேர்ச்சி நிலைக்குரிய தொழிலாளர்களையும் குறிப்பிடுவர்.   skilled labour     அல்லது skilled worker –  செயல்திற வேலையாள்,  தேர்ச்சியுடைத் தொழிலாள்,  திறமிகு தொழிலாளர்,  தேர்ச்சியுற்ற தொழிலாள், திறமையான தொழிலாளர்,  திறமிகு பணியாளர் எனப்பலவகையாக இப்பொழுது குறிப்பிடுகின்றனர்.  (skilled person …

தமிழ் இணையக்கல்விக்கழகம் : நோக்கும் போக்கும் 1 – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ் இணையக்கல்விக்கழகத்தின்  இப்போதைய ‘நோக்கும் போக்கும்’ எவ்வாறுள்ளது என்பது குறித்தும் எவ்வாறு அவை அமைய வேண்டும் என்பது குறித்தும் ஒரு சிற்றாய்வு. ங.) சிதைக்கப்படும் நோக்கம்: “உலகில் நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வாழும் தமிழர்கள் தங்களுடைய மரபுகளையும், விழுமியங்களையும், பண்பாட்டையும் பாதுகாக்க வேண்டும். இத்தேவையை நிறைவேற்ற அவர்கள் தங்கள் மொழி, கலை, இலக்கியம் இவற்றோடு நீங்காத தொடர்புடன் வாழ வேண்டும். உலகு தழுவி வாழும் தமிழ் மக்களின் பண்பாட்டுத் தேவைகளை மனத்திற்கொண்டு தமிழக முதல்வர் அவர்கள் 1999இல் தமிழ். இணையப் பல்கலைக்கழகத்தைத் தொடங்கினார்”…

இணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – 3: இலக்குவனார் திருவள்ளுவன்

3   தமிழ்கியூப் அகராதி(http://dictionary.tamilcube.com/ ) முதலான பிற அகராதிகளில் மேற்குறித்த எவ்வகையில் சொல் அமைந்தாலும் உரிய பொருள்களைக் காட்டும். எடுத்துக்காட்டு விளக்கம் வருமாறு(பட உரு 15, 16 & 17):-    படவுருக்கள் 15, 16 & 17  ஐரோப்பிய அகராதியில் (http://eudict.com) இடைக்கோடு இருக்க வேண்டிய இடங்களில் இடைக்கோடு இல்லாவிட்டால் மட்டும் காட்டாது(படவுருக்கள்18 & 19). படவுருக்கள்18 & 19 தனியார் சிறப்பான முறைகளில் தேடுபொறிகளை அமைத்துப் பயன்படுத்துநர் உரிய பயனை அடைவதில் கருத்து செலுத்தும் பொழுது தஇகக அதில் கருத்து…

ஈழமும் தமிழகமும் கருத்தரங்கம் – மே 17 இயக்கம்

ஆவணி 05, 2046 / ஆகத்து 22, 2015  மாலை 5.00 சென்னை   ஈழம் குறித்த கருத்தரங்கம் வரும் சனிக்கிழமை மாலையில் சென்னையில் நிகழ்கிறது. கடந்த சில வருடங்களில் நமக்கு எதிராக இந்தியாவும், பன்னாடுகளும் முன்னெடுத்த நகர்வுகள் குறித்தும், தமிழர்களின் எதிர் செயல்பாடுகளும் அதற்கான தேவை குறித்தும் ஆய்வரங்கம். ஈழவிடுதலைப் போராட்டத்தைக் குறித்த நமது செயல்பாடுகளைப் பின்னுக்குத்ளதள்ளும் இந்தியாவின் தொடர் செயல்பாடுகளை வீழ்த்துவோம். ஈழம் குறித்த விவாதத்தையும், அடுத்த மாதம் ஐ.நாவின் மனித உரிமை அமர்வில் அளிக்கப்படும் அறிக்கை குறித்தும் விவாதிப்போம். வாய்ப்பிருக்கும்…

சமகாலவாழ்வியலும் சாதிய வன்கொடுமைகளும் – கருத்தரங்கம்

ஆவணி 06, 2046 / ஆகத்து 23, 2015 மாலை 5.01 மயிலாப்பூர், சென்னை தொடர்ந்து வரும் சாதிய தாக்குதல்களை தடுத்து நிறுத்தவும். வருங்கால வளரும் தலைமுறையை சாதியற்ற சமூகமாக மாற்றவும் ‪#‎தமிழ்நாடு_மாணவர்_கழகம் நடத்தும் “சமகால வாழ்வியலும் சாதிய வன்கொடுமைகளும் எனும் தலைப்பில் கருத்தரங்கம். அனைத்து மாணவர் இயக்கங்களும் கலந்துகொள்கின்றன . அனைவரும் வருக‪ #‎எங்கள்_தலைமுறைக்கு_வேண்டாம்_சாதீ  

பேரா.அ.இராமசாமி, நூல் வெளியீடும் திறனாய்வும் – வெள்ளி விழா நிகழ்வு

  ஆவணி 02, 2046 / ஆக.19, 2015 மு.ப.11.45 – பி.ப.04.00 மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் திருநெல்வேலி