வெருளி நோய்கள் 936-940: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 931-935: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 936-940 கொல்லுவது தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கொலை வெருளி.காண்க: கொலைகாரன் வெருளி(Foniasophobia)00 கொல்லைப்புறம்பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் கொல்லைப்புற வெருளி.zhoyun என்றால் கொல்லைப்புறம்.00 கொழுந்தனார் மீதான அளவுகடந்த காரணமற்ற பேரச்சம் கொழுந்தனார் வெருளி.கொழுந்தனாரின் பதவி நிலை, செல்வ நிலை போன்றவற்றாலும் தன் கணவரைச் சார்ந்து நின்றாலும் உதவிகள் வேண்டினாலும் தன் உடன்பிறந்தாளைச் சரியாகப் பேணாவிட்டாலும் உதவ விரும்பாத பெண்களுக்கு வெருளி வருகிறது.yifu என்னும் சீனச் சொல்லின் பொருள் கொழுந்தனார்.00 வீட்டில் அல்லது வெளியில் கொள்ளையடிக்கப்படுவது குறித்த அளவுகடந்த…
வெருளி நோய்கள் 931-935: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 926-930 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 931-935 931. கொண்டாட்ட வெருளி – Heortophobia கொண்டாட்டம் குறித்த வரம்பு கடந்த பேரச்சம் கொண்டாட்ட வெருளி Heorto என்னும் சொல்லின் மூலக் கிரேக்கச்சொல்லின் பொருள் விடுமுறை. விடுமுறை நாள் கொண்டாட்ட ங்களை இங்கேகுறிக்கிறது. 00 932. கொதிசாறு வெருளி – Soupaphobia கொதிசாறு(Soup) குறித்த அளவற்ற பேரச்சம் கொதிசாறு வெருளி. காய்கனிகளிலிருந்து அல்லது தக்காளி, முருங்கைக்காய் போன்ற குறிப்பிட்ட காய்கனியிலிருந்து அல்லது எலும்பிலிருந்து அல்லது பிற உண்பொருளிலிருந்து உருவாக்கப்படும் அனைத்துவகை கொதி சாறு அல்லது…
வெருளி நோய்கள் 926-930: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 921-925: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 926-930 கொழுப்பு பற்றிய தேவையற்ற பேரச்சம் கொழுப்பு வெருளி.கொழுப்பு கூடுவதால் உடல் எடை கூடும், மாரடைப்பு ஏற்படும், பிற நோய்கள் தாக்கும், தொந்தி வளரும் என்றெல்லாம் அளவு கடந்த கவலையால் வரும் பேரச்சம் இது.lipos என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் கொழுப்பு.கொழுப்பு என்னும் பொருள் கொண்ட adeps என்னும் இலத்தீன் சொல்லில் இருந்து Adipo என்னும் ஒட்டுச்சொல் உருவானது.00 கொள்ளையடிக்கப்படல் அல்லது வழிப்பறி குறித்த அளவுகடந்த பேரச்சம் கொள்ளையர் வெருளி/ திருட்டு வெருளி.நாளும் கொள்ளைபற்றிய செய்திகள்…
வெருளி நோய்கள் 921-925: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 916-920: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 921-925 கொடுங்கோலன் ஆட்சியால் துன்புறுவோருக்கும் அதனைக் கேள்வியுறுவோருக்கும் ஏற்படும் வெருளி காெடுங்கோலன் வெருளி.காலந்தோறும் உலகெங்கும் கொடுங்கோலாட்சியால் மக்கள் துன்புறுவதால் கொடுங்கோலாட்சிக்கு எதிராகவே உள்ளனர்.“கருணை இல்லா ஆட்சி கடுகி ஒழிக” என வள்ளலார் இராமலிங்க அடிகளாரும் கூறியுள்ளார்.“இம்மென்றால் சிறைவாசம் ஏனென்றால் வனவாசம்” (பாரதியார்) என்னும் கொடுங்கோலாட்சியால் மக்கள் அது குறித்துப் பேரச்சம் கொள்கின்றனர். கொடுங்கோலர் வரலாறுகள், படங்கள், படக்காட்சிகள், கதைகள் என எதுவாக இருந்தாலும் கொடுங்கோலர் குறித்துப் பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.00 கொப்பூழ் குறித்த அளவுகடந்த பேரச்சம்…
வெருளி நோய்கள் 916 – 920 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 911-915: தொடர்ச்சி) கைப்பந்து குறித்த வரம்பற்ற பேரச்சம் கைப்பந்து வெருளி.Volley என்றால் தட்டுதல் அல்லது அடித்தல் அல்லது தாக்குதல் எனப்பொருள்கள். Volleyball என்னும் பொழுது பந்து கீழே விழும் முன்னர் அதனைக் கையால் அடித்தல் என்று பொருளாகிறது.00 தாங்கள் கைவிடப்படுவோமோ என்ற பேரச்சம் கைவிடல் வெருளி.புறக்கணிக்கப்படுபவர்களுக்குக் கைவிடப்படுகிறோம் என்ற அச்ச உணர்வு பெருகும். பிள்ளைகளால் கை விடப்படுவோம், வளர்ப்பவர்களால் கை விடப்படுவோம், வாழ்க்கைத் துணைவரால் கை விடப்படுவோம் என்றெல்லாம் அளவு கடந்து கவலைப்படுவோர் உள்ளனர். இதனால் எதிர்காலம் குறித்த அளவுகடந்த பேரச்சம்…
வெருளி நோய்கள் 911-915: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 906-910 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 911-915 கை விளக்கு(torch light) குறித்த வரம்பற்ற பேரச்சம் கை விளக்கு வெருளி.தீவட்டி விளக்கு, தீப்பந்தம், கைப்பந்த மின்விளக்கு முதலானவற்றை குறிக்கிறது. இந்த இடத்தில் கைப்பந்த மின்விளக்கு என்பது சுருக்கமாகக் கைவிளக்கு எனக் குறிக்கப் பெற்றுள்ளது.Pyrso என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் தீ. ஒளிப்பிழம்பு, சுடரொளி என்னும் பொருள்களையும் குறிக்கிறது. இங்கே ஒளிச்சுடர் தரும் கை விளக்கையும் குறிக்கிறது.00 கை மீதான தேவையற்ற அளவுகடந்த பேரச்சம் கை வெருளி.தம் கைகளைக் கண்டாலோ அடுத்தவர் கைகளைக் கண்டாலோ…
வெருளி நோய்கள் 906-910: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 901-905: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 906-910 புனைவுருவான கேர்மிட்டு தவளை தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கேர்மிட்டு வெருளி.கேர்மிட்டின் பகுத்தறிவு, விரைவு, துணிச்சல் செயற்பாடு பலரையும் கவர்ந்தாலும் அதே விரைவும் துணிச்சலுமான செயற்பாடுகளே பலருக்கு வெருளி விளைவிப்பதாக உள்ள்து.தவளை வெருளி(Ranidaphobia), போன்மை வெருளி (Automatonophobia) உள்ளவர்களுக்குக் கேர்மிட்டு வெருளி வரும வாய்ப்பு உள்ளது.00 கேலிச்சித்திரப் பாத்திரம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கேலிப் பாத்திர வெருளி.கேலிப்படங்களில் இடம் பெறும் தனித்துவத் தோற்றம் காரணமாகச் சிறுவர்களுக்கு அச்சம் வருகிறது. வஞ்சன்(வில்லன்) பாத்திரத்தால் பாதிக்கப்படுவதைப் பார்க்கும் சிறுவர்கள் கெட்டகனவுகளுக்கும்…
வெருளி நோய்கள் 901-905: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 896-900: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 901-905 901. கெடுமதிப்பு வெருளி – Oppugnophobia(2) சுட்டுரை, முகநூல் முதலான குமுகத் தளங்களில் பின் தொடருநர் இழிவாக எண்ணும் வகையில் சிலர் மதிப்புக்கேடாகக் குறிப்பிடுவார்கள் எனப் பேரச்சம் கொள்ளுதல் கெடுமதிப்பு வெருளி. 00 902. கெண்டக்கி கோழி வெருளி -KFCphobia கெண்டக்கி கோழி உணா குறித்த வரம்பற்ற பேரச்சம் கெண்டக்கி கோழி வெருளி கெண்டக்கி வறுகோழி (KFC, Kentucky Fried Chicken) என்பது விரைவு உணவுச்சாலைகளின் கூட்டமைப்பு. இதன் தலைமையிடம் கெண்டக்கியில் உள்ள (உ)லூயிவிலில்…
வெருளி நோய்கள் 896-900: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 891-895: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 896-900 குனிவு, வளைவு, கூன் முதலானவை பற்றிய இயல்பு கடந்த பேரச்சம் கூன் வெருளி.குனிவு வெருளி என முன்பு குறித்திருந்தேன். இப்பொழுது கூன் வெருளி என மாற்றியுள்ளேன்.இராமாயணத்தில் இராமனைக் காட்டிற்கு அனுப்பக் காரணமாக இருந்த மந்தரை என்னும் பெண்மணி கூனியாக இருந்தமையால், கூனி என்றாலே சூழ்ச்சிக்காரர் என்ற நம்பிக்கை பலரிடம் உள்ளது.துன்ன_அரும் கொடு மன கூனி தோன்றினாள் (இராமாயணம்,அயோத்தியா காண்டம்,2.46/4)சூழ்ந்த தீ வினை நிகர் கூனி சொல்லுவாள்(இராமாயணம்,அயோத்தியா காண்டம், 2.55/2)என மந்தரையாகிய கூனியைக் கொடுமன கூனி…
வெருளி நோய்கள் 891-895: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 886-890: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 891-895 கூட்டாட்சி, கூட்டுரிமைக் குடியிருப்பு, கூட்டாண்மை(condominium) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கூட்டாண்மை வெருளி.00 புனைவுரு இசுகூபி -டூ (Scooby Doo) குறித்த வரம்பற்ற பேரச்சம் கூபிவெருளி.(இசு)கூபி-டூ (Scooby-Doo) என்பது அமெரிக்க இயங்குபடத் தொடராகும்.00 கூம்பு தித்தி குறித்த வரம்பற்ற பேரச்சம் கூம்பு தித்தி வெருளி1880 இல் இஃது முதலில் உற்பத்தியான பொழுது இதன் பெயர் கோழித்தீனி(Chicken Feed) என்பதுதான். கற்கண்டு நிறுவனம் (Wunderlee Candy Company) ஒன்று இதனை உற்பத்தி செய்தபொழுது அந்நிறுவனப் பெயரையும் இதன்…
வெருளி நோய்கள் 886-890: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 881-885: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 886-890 கூட்டத்தைக் கண்டு ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம் கூட்ட வெருளி.பொதுவிட வெருளி(agoraphobia) உடன் தொடர்பு உடையது.கூட்டம் என்பது சந்திப்பு என்பதையும் குறிக்கும். இங்கே திரளாகக் கூடுவதைக் குறிக்கிறது. திரளான கூட்டத்தைப்பார்ததால் அஞ்சுவோர் உள்ளனர்.கூட்டத்தில் பொருள்கள் தொலைந்து போகலாம், உடைமைகள் திருடு போகலாம், துன்புறுத்தல் நிகழலாம், தொற்றுநோய்க்கு ஆளாகலாம் என்பன போன்ற அச்சங்களாலும் கூட்டம் கண்டு அஞ்சுவோர் உள்ளனர்.‘சொர்க்கம்’ திரைப்படத்தில் கண்ணதாசனின் சொல்லாதே யாரும் கேட்டால் எனத் தொடங்கும் பாடலில்,உரிமையோ உரிமை என்று ஊரெங்கும் மேடை…
வெருளி நோய்கள் 881-885: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 876-880: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 881-885 குறை வுணா (junk food) மீதான மிகையான பேரச்சம் குறை வுணா வெருளி.குறை வுணா என்றால் குறைந்த அளவு உணவு என்று கருதாமல் குறைந்த அளவு ஊட்டமுள்ள சிற்றுணா எனக் கொள்ள வேண்டும்.junk, cibus ஆகிய கிரேக்கச் சொற்களுக்கு முறையே சிறுமை, உணவு எனப் பொருள்.00 தாளில் எழுதத் தொடங்கி அல்லது வரையத் தொடங்கி முற்றுப்பெறாமல் அரைகுறையாக விடப்படும் குறைபடைப்புத் தாள் குறித்த அளவு கடந்த பேரச்சம் குறை தாள் வெருளி.தாள் வெருளியிலும் வெற்றுத்தாள்…
