சட்டச் சொற்கள் விளக்கம் 996-1000 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 991-995 : தொடர்ச்சி)
சட்டச் சொற்கள் விளக்கம் 996-1000
| 996. Authorise | அதிகாரமளி / அதிகாரம் அளி உரிமையளி, இசைவளி, ஏற்பளி செயலைச் செய்வதற்கான அதிகாரத்தை ஒருவருக்கோ நிறுவனத்திற்கோ சட்ட முறைப்படி அளித்தல். காண்க: Authorisation / Authorization |
| 997. Authorised absence / Authorized absence | இசைவுடன் வராமை ஏற்புடை வராமை இசைவு பெற்று வராமை ஓப்பளிப்புப்பெற்ற வாராமை என அகராதிகளில் குறிக்கப் பெற்றுள்ளன. பொருள் சரிதான். விடுப்பு ஒப்பளிப்பு என்பதுபோல்தான் இதுவும். என்றாலும் ஒப்பளிப்பு என்பது பொதுவாக நிதி சார் திட்டங்களுக்கு அல்லது செயல்களுக்கு அளிக்கும் ஒப்புதலையே குறிக்கிறது. வராதிருப்பதற்கான இசைவை அளிப்பதைக் குறிப்பது சரி யாகாது. |
| 998. Authorised agent / Authorized agent | ஏற்புடை முகவர் அதிகாரம் பெற்ற முகவர் ஒருவரின் சார்பில் அல்லது ஒரு நிறுவனத்தின் சார்பில் செயற்படும் அதிகாரம் கொண்டவர். |
| 999. Authorised by law / Authorized by law | சட்ட அதிகாரம் அளிக்கப்பட்ட சட்டத்தினால் ஏற்கப்பெற்ற சட்ட விதிகளுக்கிணங்க அல்லது சட்ட முன் எடுத்துக்காட்டு அடிப்படையில் ஒரு செயல் அல்லது முடிவு அல்லது இசைவை ஏற்பதற்கான அதிகாரம். |
| 1000. Authorised inquiring Authority / Authorized inquiring Authority | அதிகாரமளிக்கப்பெற்ற உசாவல் அலுவலர்; அதிகாரமளிக்கப்பட்ட விசாரணை செய்யும் அதிகாரி. துறை அடிப்படையிலான உசாவுதல்கள்/விசாரணைகள் அல்லது பிற உசாவல்களை நடத்த அதிகாரம் பெற்ற ஒருவர் அல்லது ஒரு குழு அல்லது அமைப்பாகும். சான்றுரைஞர்களை வரவழைத்து ஆவணங்களைக் கோருவதற்கு உரிமை வழக்கு நீதிமன்றத்தைப் போன்ற அதிகாரங்களைக் கொண்டுள்ளது. |
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்







Leave a Reply