தொகைநூலில் இடம்பெறா மேற்கோள் பாடல்கள் – மு.வை.அரவிந்தன்
தொகைநூலில் இடம்பெறா மேற்கோள் பாடல்கள்
இறையனார் களவியலுரை, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை ஆகிய தொகை நூல்களிலிருந்து பல செய்யுட்களை ஆங்காங்கே மேற்கோள் காட்டியுள்ளது. இடம் விளங்கா மேற்கோள் பாடல்கள் சில உள்ளன. அவை இலக்கியச் சுவை மிகுந்தவை; கற்கும்தோறும் இன்பமூட்டவல்லவை. “பையுள் மாலை” (சூத்.7), ‘ஏனல்’ (சூத்.7), ‘வெள்ளாங்குருகின்’ (சூத்.9), ‘நெருநலு முன்னாள்’ (சூத்.12) என்னும் தொடக்கத்தையுடைய அகப்பாடல்கள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. இவை, தொகைநூலில் இடம்பெறாத பழைய அகப்பாடல்கள். தொகுத்தவை போக எஞ்சிய பாடல்கள் இவை போன்றவை பல இருந்திருக்கக் கூடும். (பிற உரையாசிரியர்களும் பல பழம் பாடல்களை எடுத்துக் காட்டுகின்றனர்.)
-ஆராய்ச்சியாளர் மு.வை.அரவிந்தன்:
உரையாசிரியர்கள்: பக்கம்.134







Leave a Reply