திறனாய்வு நெறியில் சிறந்த பேராசிரியர்கள் – மு.வை.அரவிந்தன்
திறனாய்வு நெறியில் சிறந்த பேராசிரியர்கள்
பேராசிரியர்கள் உரை விளக்கம் சிறந்த இலக்கியத் திறனாய்வு நெறிகளைக் கொண்டுள்ளது. முற்காலத்து இலக்கியக் கொள்கைகளையும் திறனாய்வு முறைகளையும் அறிந்து கொள்ள இவர் உரை பயன்படுகின்றது. கவிதைக் கலையைப் பற்றி வரன்முறையாகவும் நுட்பமாகவும் சிறந்த மேற்கோள்தந்து ஆராய்ச்சித் திறனோடு இவர் விளக்குகின்றார். இலக்கியக் கலைமாட்சி, இலக்கியக் கொள்கை இலக்கியத் திறனாய்வு வகை ஆகியவற்றைத் தனித்தனியே பெயர் கூறி இவர் விளக்கவில்லை என்றாலும், இவரது உரையில் அவரை பற்றிய அடிப்படையான உண்மைகளைக் காண முடிகின்றது. இலக்கிய ஒப்பியல் ஆய்வும் இவரிடம் உண்டு. முற்காலத்துக் கொள்கைகளைப் பிற்காலத்துக் கொள்கைகளோடு (அணி, யாப்பு பற்றியவை) ஒப்பிட்டு ஒற்றுமை வேற்றுமை காணுதல், வடமொழி நெறியை நினைவூட்டித் தமிழ்நெறியை விளக்குதல் போன்ற ஆய்வு நெறிகளை இவரிடம் காணலாம்.
-ஆராய்ச்சியாளர் மு.வை.அரவிந்தன்: உரையாசிரியர்கள் : பக்கம்.210








Leave a Reply