கவிதைதேர்தல்முகநூல்

அறம் காப்பார் அடுத்த முதல்வர்! – சச்சிதானந்தம் தெய்வசிகாமணி

தலைப்பு-அடுத்தமுதல்வர், தெய்வசிகாமணி : thalaippu_aramkaappaar_deiyvachikamani

அறம் காப்பார் அடுத்த முதல்வர்!

அரசு அலுவலகம் அனைத்திலும் இங்கே,

முரசு கொட்டியே கையூட்டு கூத்தாடும்,

அசுரகுல மாந்தர் அங்கு பணியாற்ற,

அனைத்து குலமாந்தர் நலமும் பாழாகும்!

ஆட்சி அதிகாரம் மாற்றம் கண்டாலும்,

காட்சி மாறாத கோலம் அங்கென்றும்!

ஆற்று மணலென்று மக்களை எண்ணி,

அங்கு நாள்தோறும் சுரண்டல் அரங்கேறும்!

ஆண்டு ஐம்பதைக் கடந்த பின்னாலும்,

அவலம் மாறாத கொடுமை நாள்தோறும்!

அதனை எண்ணி மனம் வெம்பும் அனைவர்க்கும்,

அரிய வாய்ப்பாக அமையும் இத்தேர்தல்,

அறத்தின் வழிநின்று ஆளும் ஒருவரை,

அடுத்த முதல்வராய் ஆக்கலாம் நாமும்!

சச்சிதானந்தம் தெய்வசிகாமணி

நாற்காலி படம்  நன்றி :  ஓர் இந்தியா வலைத்தளம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *