தமிழர் அழிவது யாராலே? – இலக்குவனார் திருவள்ளுவன்
எவராலே?
ஈழம் சிதைவது எவராலே?
தமிழர் அழிவது யாராலே?
கொடுஞ்சிறை வதைமுகாம் பிறவற்றில்
தமிழர் மடிவது எவராலே?
உணவும் நீரும் சிறிதுமின்றி
மருந்தும் உடையும் கிட்டாமல்
நாளும் ஒழியும் சூழலுக்குத்
தள்ளப்பட்டது யாராலே?
கற்பும் பொற்பும் சிதைப்பவரை
ஓட ஓட விரட்டாமல்
அஞ்சி அஞ்சிச் சாகும்நிலை
வந்தது இன்று எவராலே?
தமிழர் அழுவது யாராலே?
இந்தியம் சிரிப்பது எவராலே?
– இலக்குவனார் திருவள்ளுவன்