சுந்தரமூர்த்தி கவிதைகள்
சுந்தரச் சிலேடைகள்
மாணவரும் ஆடும்

சிலேடை 1

அடைந்திருக்கும் ஓரிடத்தில் ஆளின்றேல் தாவும்
கடைநிலையிற் கொம்படிக்கும் கத்தும்-இடைநின்
றிழுக்க அசைபோட் டிறுதி விருந்தாம்
எழுத்தறி வானாட்டுக் கீடு.

பொருள்

மாணவர்=வகுப்பறையில் அனைவரும் இருப்பர்.
ஆசான் இல்லாதபோது இங்குமங்கும் விளையாடுவர்.
படிக்காத கடை மாணவர் கொம்பால் அடிவாங்குவர்.
பள்ளிவராமல் உள்ளோர் சகமாணவர்களால் இழுத்து வரப்படுவர்.
அழுவர்.
கற்றதை அசைபோடுவர்.பின்னாளில் நல்ல விருந்தளிப்பர்.

ஆடு=கொட்டகையில் அடைந்து கிடக்கும்.
ஆளில்லை என்றால் இங்குமங்கும் தாவும் சேட்டை செய்யும் , சண்டையிடும் , கொம்பால் முட்டிக்கொள்ளும்.இடையிலே நின்றுபோனால் இழுத்துவந்து சேர்ப்பர்.கத்தும் , தின்றதை அசைபோடும் , கொழுத்து இரையாகும்.

கட்டிக்குளம்
ஒ .சுந்தரமூர்த்தி