அறிக்கைசெய்திகள்

காமராசர் பிறந்தநாள் கவிதைப்போட்டி

 maamduraikavignar_peravai01

 மாமதுரைக் கவிஞர் பேரவை சார்பில் நடைபெறவுள்ள காமராசர் பிறந்த நாள் விழா கவிதைப் போட்டிக்கு, போட்டியாளர்கள் தங்களது கவிதைப் படைப்புகளை சூன் 30 ஆம் நாளுக்குள் அனுப்ப அறிவிக்கப்பட்டுள்ளது.

  இது குறித்து, மாமதுரைக் கவிஞர் பேரவைத் தலைவர் சி. வீரபாண்டியத் தென்னவன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கருமவீரர் காமராசர் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில், பேரவை சார்பில் கவிதைப் போட்டி நடத்தப்படுகிறது. இதில், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கலாம். “எழுத்தெல்லாம் தூய தமிழ் எழுத்தாகுமா?” என்ற தலைப்பில், மரபு மற்றும் புதுக்கவிதைகள் 20 வரிகளுக்கு மிகாமல் இருக்கவேண்டும். போட்டியில் தேர்வானவர்கள் நேரில் வந்து கவிதையை அரங்கேற்ற வேண்டும்.

ஒரு பள்ளியில் இருந்து 30 மாணவர்கள் தேர்வானால், பள்ளிக்குக் கேடயமும், வெற்றி பெற்றவருக்கு நினைவுப் பரிசும் வழங்கப்படும். போட்டியாளர்கள்,

சி. வீரபாண்டியத் தென்னவன், 10 ஆம் குறுக்குத் தெரு, திருவள்ளுவர் நகர், பழங்காநத்தம் என்ற முகவரியில், சூன் 30 ஆம் நாளுக்குள் கவிதையை அனுப்பி வைக்கவேண்டும்.

மேலும் விவரங்களுக்கு, 98421-81462 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

தகவல் முதுவை இதாயத்து

One thought on “காமராசர் பிறந்தநாள் கவிதைப்போட்டி

  • Podhu valvil kamarajar

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *