வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்

மாட்சியின் மாசற்றார் கோள். (திருக்குறள், ௬௱௪௰௬ – 646)                                               

தமிழே விழி!                        தமிழா விழி!

                 தமிழ்க்காப்புக்கழகம்

நாள்: பங்குனி 29, 2057 ஞாயிறு 12.04.2026 காலை 10.00 மணி

கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ;  கடவுக்குறி / Passcode: 12345

அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)

ஆய்வரங்கம் :தமிழ் ஆண்டு எது என்பது தொடர்பான படைப்புகள் குறித்து

0000000000000000000000000000000000000000

தொல்காப்பியர் காலத்தில் அவரது காலத்திற்கு முன்பிருந்தவாறு ஆவணியே ஆண்டின் தொடக்கமாக இருந்தது. 365 நாளுக்கு ஒரு முறை முளைக்கும் மூங்கிலுக்கு  ஆண்டு  எனப் பெயர்.   மூங்கில் முளைக்கும் திங்கள் ஆவணி. எனவே, ஓராண்டுக் கால அளவைக்குறிப்பிடும் மூங்கில் தோன்றிய மாதத்தில் இருந்து ஆண்டினைக் கணக்கிட்டுள்ளனர்.

சித்திரையில் தொடங்கி பங்குனியில் முடிவது வருடம். சித்திரைத்திங்கள் மேழ ஓரையில் வருகிறது. மேழம் என்பது வருடை என்னும் ஒரு வகை ஆட்டைக் குறிக்கும். வருடையில் தொடங்கும் ஆண்டுப்பகுப்பு வருடம் எனப்படலாயிற்று.

திண்ணிலை மருப்பின் ஆடுதலை யாக

விண்ணூர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலத்து (நக்கீரர்: நெடுநல்வாடை: அடிகள் 160-161) என வரும் சங்க இலக்கியப் பாடலடிகள் ஆட்டினை – சித்திரையை – முதலாக உடைய காலப்பகுப்பைக் குறிக்கின்றது.  வியாழ வட்ட அடிப்படையில் 60 ஆண்டு காலச் சுழற்சி முறையும் பயன்பாட்டில் இருந்துள்ளது. ஆனால் சமற்கிருத இழி காமக்கதைகளால் நாம் இதனைக் கைவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டோம்.

தை முதல் நாள்,  சூரியன் வடதிசை நோக்கித் திரும்பும் நாள் என்பதால், இயற்கையின் புதிய  தொடக்கமாகக் கருதப்பட்டு ஆண்டுக் கணக்கிடப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.எனவே, அறிஞர்கள் கூடித் தொடராண்டு கணக்கிற்காகத் தை முதல்நாளைப் பயன்பாட்டிற்குக் கொண்டுவந்தனர். திருவள்ளுவர் ஆண்டாகக் குறிக்கப் பெறும் இதனையே நாம் நடைமுறையில் பின்பற்ற  வேண்டும்.

சித்திரை மாதத்தில் சித்திரை நாளில் முழு நிலா சேர்ந்ததாக இளங்கோ அடிகள்,

“சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தென அந்நாள்” (சிலப்பதிகாரம், 5.64) எனக் குறிப்பிடுகிறார். அப்பொழுதுதான் இந்திர விழா கொண்டாடப்படும். சிலப்பதிகாரம், மணிமேகலை காலத்தில் இவ்விழா அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டுள்ளது. இவ்விழா, சித்திரை ஆண்டுப் பிறப்பைச் சிறப்பிப்பதாகக் கருத வேண்டும்.சித்திரைத் தொடக்கமே இளவேனிற் காலத் தொடக்கம். இளவேனிற் காலத்தை இளங்கோ அடிகள் குறிப்பிடுகிறார்.