இலக்கியங்கள் கூறும் தமிழர்க்கான காவிரி 51-70 – இலக்குவனார் திருவள்ளுவன்

(இலக்கியங்கள் கூறும் தமிழர்க்கான காவிரி 31-50 தொடர்ச்சி) இலக்கியங்கள் கூறும் தமிழர்க்கான காவிரி 51-70  51.காவிரி படப்பை பட்டினம்-தன்னுள் – இளங்கோ அடிகள், சிலப்பதிகாரம், மதுரைக் காண்டம் 5.151தோட்டச்சிறப்பு மிக்க காவிரி பாயும் பட்டினத்துள்   52.கங்கை பேர் யாற்றினும் காவிரி புனலினும் – இளங்கோ அடிகள், சிலப்பதிகாரம், வஞ்சிக் காண்டம் 2.120கங்கைப் பேராற்றிலும் காவிரி நீரிலும் 53.முது நீர் காவிரி முன் துறை படுத்தல் – இளங்கோ அடிகள், சிலப்பதிகாரம், வஞ்சிக் காண்டம் 25.123பழமைச்சிறப்பு மிக்க காவிரியின்துறைக்கண் நீர்ப்படுத்தல்  54.காவிரி புரக்கும் நாடு கிழவோற்கு…

இலக்கியங்கள் கூறும் தமிழர்க்கான காவிரி 31-50 – இலக்குவனார் திருவள்ளுவன்

(இலக்கியங்கள் கூறும் தமிழர்க்கான காவிரி 11- 30 – தொடர்ச்சி) இலக்கியங்கள் கூறும் தமிழர்க்கான காவிரி 31-50   காவிரி புரக்கும் நன் நாட்டு பொருந – நல்லிறையனார, புறநானூறு, 393.23 (காவிரியால் காக்கப்படும்நல்லநாட்டின் பொருந) முழங்குநீர்ப் படப்பைக் காவிரிக் கிழவன்  – ஐயூர் முடவனார் ,  புறநானூறு, 399. 11-12 (முழங்குகின்ற நீர்நலம் உடைய காவிரி பாயும் நாட்டுத் தலைவன்) 33.    காவிரி புரக்கும் நாடு கிழவோனே – முடத்தாமக்கண்ணியார், பொருநராற்றுப்படை, 248 (காவிரியால் காக்கப்படும் நாட்டிற்கு உரியவனே!) 34.    மலைத்தலைய கடல்…

வவுனியாவில் இளங்கோ அடிகள் நினைவுநாள் நிகழ்வுகள்

வவுனியாவில் இளங்கோ அடிகள் நினைவுநாள் நிகழ்வுகள்   சித்திரை  முழுநிலா அன்று இளங்கோஅடிகள் நினைவு நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு, வவுனியா சின்னப்புதுக்குளம், சிவன் கோவிலுக்கு அருகிலுள்ள  இளங்கோ அடிகளின் திருவுருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்டச் சமூகச்சேவை அலுவலர் திரு. எசு.எசு. சீனிவாசன் அவர்களினால் அன்னாரின் நினைவுப் பேருரை நிகழ்த்தப்பட்டது.   இந்நிகழ்வில் முன்னாள்  நகரத்துணைத்தலைவரும், இளங்கோ அடிகளின் திருவுருவச் சிலையினை நிறுவியவருமான திரு. க. சந்திரகுலசிங்கம், மாவட்டச்சிற்றூர் ஆட்சி அலுவலர் திரு. எம். விசயரட்ணம், மாவட்டக்…

வஞ்சினமாலை எழுப்பும் சிந்தனைகள் 3/3 – இராம.கி.

(வஞ்சினமாலை எழுப்பும் சிந்தனைகள் 2/3 தொடர்ச்சி) 3/3  அடுத்த கதை மதுரையில் நடந்ததுபோல் புகாரில் நடந்த சகக்கிழத்திகள் கதையாகும். ……………………………………………………………….   இணையாய   மாற்றாள் குழவிவிழத் தன்குழவி யுங்கிணற்று   வீழ்த்தேற்றுக் கொண்டெடுத்த வேற்கண்ணாள் (இளங்கோவடிகள், சிலப்பதிகாரம், 2.21 வஞ்சினமாலை 17-19)     புகார்வணிகன் ஒருவனுக்கு இருமனைவிகள். (ஒருவனுக்கு இருவரென்பது கண்ணகியைப் பெரிதும் பாதித்திருக்கலாம்.) இருவருக்கும் ஓரிரு வயதுவேறுபாட்டிற் குழவிகளுண்டு. வீட்டுக் கிணற்றுச்சுவரில் உட்கார்ந்த மாற்றாள்குழந்தை தவறிவிழுந்துவிட அதைக்கண்ட ஒரு கிழத்தி “வேண்டுமென்றே திட்டமிட்டுத் தள்ளிவிட்டதாய் மாற்றாளும், பங்காளி, உறவினரும், ஊராரும் சொல்வரோ?” என்று…

வஞ்சினமாலை எழுப்பும் சிந்தனைகள் 2/3 – இராம.கி.

வஞ்சினமாலை எழுப்பும் சிந்தனைகள் 1/3 2/3   இக்கதையை 2 மாற்றங்களோடு நின்றசீர் நெடுமாறன் காலத்தில் திருவிளையாடற் புராணங்கள் பயிலும். (இப்புராணங்கள் அமைப்பிலும் கதைவிவரிப்பிலும் முரண்படும். இராமாயணத்தில் எத்தனையோ வேற்றங்கள் – versions – உண்டல்லவா? அவைபோல இவற்றைக் கொள்ளலாம்.) திருவிளையாடற்புராணங்களில் மடைப்பள்ளி கிணறாகவும், மணம்நடத்திவைத்தது சம்பந்தரென்றும் ஏரணத்தால் முரணாகும். 7 ஆம் நூற்றாண்டில் சம்பந்தர் மணம் நடத்தியிருந்தால் அவரையே புகார்ப்பெண் சான்றாக்கியிருக்கலாமே? சொல்லவில்லையே? சம்பந்தர் ஞானப்பால் குடித்தது 3 வயதிலெனில், அவர் வரலாற்றைப் பார்க்கையில், புறம்பியம் போனது 7/8 வயதெனலாம். அவ்வயதில் மங்கைக்கு அவர் மணம் நடத்திவைத்திருப்பாராவென்பது…