செய்திகள்

மஞ்சளாறு அணை : கால்வாய்கள் தூர்வாரப்படாததால் உழவர்கள் அல்லல்

50kaalvaaykal01

தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணையின் கால்வாய்கள் தூர்வாரப்படாததால் உழவர்கள் அல்லல்பட்டு வருகின்றனர்.

தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணையில் மொத்தம் 13 மடைகள் உள்ளன. இவற்றுள் ஒன்று முதல் எட்டுவரையுள்ள மடைகள் தூர்வாரப்பட்டன. அதன்பின்னர் 8 இலிருந்து 13வது வரை உள்ள மடைகள் தூர்வாரப்படவில்லை.

இந்த மடையில் இருந்து வரும் தண்ணீரை நம்பி ஏறத்தாழ 1,800 காணி நிலம் உள்ளது. இந்த 1,800 காணியில் நெல், பருத்தி, மக்காச்சோளம், கடலை, தட்டப்பயிறு முதலான பயிர்வகைகள் பயிரிடப்படுகின்றன.. இப்பகுதியில் குறைந்தது 40 நாட்களாது தண்ணீர் தரப்படவேண்டும். இதனை நம்பி புல்லக்காபட்டி, தேவதானப்பட்டி, வாடிப்பட்டி, எருமலைநாயக்கன்பட்டி முதலான பல ஊர்கள் உள்ளன. இதன் தொடர்பாகப் பலமுறை பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் முறையீடு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதன் தொடர்பாக 13 ஆவது மடை வலது கரை வேளாண் சங்கத்தலைவர் இராசா கூறுகையில், மஞ்சளாறு அணை பாசன வசதிக்காகத் திறந்து எந்தவிதப் பயனும் இல்லை. கடந்த 3 ஆண்டுகளாக இப்பகுதியில் மழை பொழியவில்லை. இந்நிலையில் கடந்த 1 வார காலமாகத்தான் மழை பெய்கிறது. இதனால் உழவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். அதே வேளையில் மஞ்சளாறு அணையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கால்வாய்கள், மடைகள், பொதுப்பணித்துறைக்குச் சொந்தமாக உள்ள குளங்கள் ஆகியவற்றைத் தூர்வாரவில்லை. இதனால் பல பகுதிகளுக்கு தண்ணீர் வருவதற்கு வாய்ப்பு இல்லை. அனைத்து மடைகளிலும் மண்தேங்கி நிற்கிறது. எனவே போர்கால அடிப்படையில் மடைகளைத் தூர்வாரவேண்டும் என்றார்.

எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் கால்வாய்கள், மடைகள், குளங்களைப் போர்கால அடிப்படையில் தூர்வார நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் இப்பகுதி உழவர்கள்

vaigaianeesu_name03

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *