பிச்சைப் பாத்திரத்திடம் கையேந்தலாமா? – ஆரூர் தமிழ்நாடன்

பிச்சைப் பாத்திரத்திடம் கையேந்தலாமா? உழவர்களே! நாட்டின் அட்சயப் பாத்திரமான நீங்கள் பிச்சைப் பாத்திரத்திடம் கையேந்தலாமா? தாய் வீடான  தமிழகம் திரும்புங்கள்! நீங்கள் இதுவரை வடித்த கண்ணீரைக் கொண்டே இருபோகச் சாகுபடியை இங்கே முடித்திருக்கலாம். அழுகிய காயங்களிடம் மருந்து கேட்காதீர்கள்! வெளிச்சத்தின் புத்திரர்களே! விழி ஈரம் துடைத்துத் தாய் வீடான தமிழகம் திரும்புங்கள்! அதிகாரப் பசியெடுத்த ஆதிக்கக் கழுகுகளுக்கு இதயம் இல்லை. செவிகளும் கூடச் சேர்ந்தாற்போல் செத்துவிட்டன அவற்றின் கண்களும் கல்லறைக்குப் போய்விட்டன இறக்கத்தில் கிடக்கும் அவற்றிடம் இனியும் இரக்கத்தை எதிர்பார்க்கலாமா? தாய் வீடான தமிழகம்…

போராட்டத்தில் ஈடுபட்ட உழவர்கள் கைது

சென்னை மத்தியத் தொடர்வண்டி நிலையத்தருகே போராட்டத்தில் ஈடுபட்ட உழவர்கள் கைது   வேளாண் கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும், வறட்சியால் இழந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திக் கழுத்தில் தூக்குக் கயிற்றுடன் சென்னை மத்தியத் தொடர்வண்டி நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட உழவர்கள் கைது செய்யப்பட்டனர்.   கடந்த பங்குனி 18, 2047 / ௩௧-௩-௨௦௧௬ (31.3.2016) அன்று இப்போராட்டம் நடைபெற்றது. “பயிர் செய்த நிலங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டு விட்டன. ௬௦௦ ஆயிரம் (60 இலட்சம்) தென்னை மரங்கள்…

பறிக்கப்படாமல் உள்ள கோழிக்கொண்டைப் பூ

தேனி மாவட்டத்தில் விலை இல்லாததால் பறிக்கப்படாமல் உள்ள கோழிக்கொண்டைப் பூ – உழவர்கள் கவலை   தேனி மாவட்டத்தில் விலை குறைந்ததால் கோழிக்கொண்டைப் பூக்கள் பறிக்கப்படாமல் தோட்டத்திலேயே விடப்பட்டுள்ளன.    தேவதானப்பட்டி அருகே உள்ள அ.வாடிப்பட்டி, குள்ளப்புரம், எருமலைநாயக்கன்பட்டி முதலான பகுதிகளில் பூ பயிரிடல் நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் கோழிக்கொண்டை ஊசிப்பூவும் பலவிதமான மலர்களும் பயிரிடப்படுகின்றன. இவ்வாறு பயிரிடப்படும் பூ வகைகள் ஆண்டிபட்டி, நிலக்கோட்டை, சென்னை முதலான பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.    கடந்த 3 ஆண்டுகளில் போதிய மழை இல்லாததால் பூப் பயிரிடலை…

மஞ்சளாறு அணை : கால்வாய்கள் தூர்வாரப்படாததால் உழவர்கள் அல்லல்

தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணையின் கால்வாய்கள் தூர்வாரப்படாததால் உழவர்கள் அல்லல்பட்டு வருகின்றனர். தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணையில் மொத்தம் 13 மடைகள் உள்ளன. இவற்றுள் ஒன்று முதல் எட்டுவரையுள்ள மடைகள் தூர்வாரப்பட்டன. அதன்பின்னர் 8 இலிருந்து 13வது வரை உள்ள மடைகள் தூர்வாரப்படவில்லை. இந்த மடையில் இருந்து வரும் தண்ணீரை நம்பி ஏறத்தாழ 1,800 காணி நிலம் உள்ளது. இந்த 1,800 காணியில் நெல், பருத்தி, மக்காச்சோளம், கடலை, தட்டப்பயிறு முதலான பயிர்வகைகள் பயிரிடப்படுகின்றன.. இப்பகுதியில் குறைந்தது 40 நாட்களாது தண்ணீர்…

தண்ணீர்ப் பற்றாக்குறையினால் சொட்டுநீர்ப் பாசனத்திற்கு மாறிவரும் உழவர்கள்

  தேனிப் பகுதியில் தண்ணீர்ப் பற்றாக்குறையினால் வேளாண் பெருமக்கள் சொட்டு நீர்ப் பாசனத்திற்கு மாறிவருகிறார்கள்.   தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, சில்வார்பட்டி, செயமங்கலம் முதலான பகுதிகளில் சோத்துப்பாறைஅணை, வைகை அணை,மஞ்சளாறு அணை ஆகிய அணைகளின் பாசனத்தை நம்பி உழுதொழில் புரிந்து வந்தனர். இதனால் நெல், கரும்பு, வாழை எனப்பயிரிட்டு தமிழகத்திற்குள்ளும் பிற பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில வருடங்களாகப் போதிய மழை இல்லாததால் வறட்சி காணப்பட்டது. இதனால் உழவர்கள் பயிரிட்ட தென்னை, வாழை, கொய்யா,   எலுமிச்சை மரங்கள் அனைத்தும் கருகத்துவங்கியன….