செய்திகள்நிகழ்வுகள்

(உ)ருவண்டா தமிழ்ச் சங்கம் நடத்திய பொங்கல் விழா

Rwandapongal21

கிகாலி : (உ)ருவாண்டா குடியரசு ஆப்பிரிக்காவின் நடுப் பகுதியில் அமைந்துள்ள ஒரு நாடாகும். (உ)ருவண்டா தமிழ்ச் சங்கம் சார்பில் பிப்பிரவரி முதல்  நாளன்று (உ)ருவண்டாவில் பொங்கல் விழா  மிகவும் உற்சாகமாகவும் எழுச்சியுடனும் கொண்டாடப்பட்டது. அன்றைய  நாளில் (உ)ருவண்டா தமிழ்ச் சங்கத்தின் இணையத்தளமும் தொடக்கி வைக்கப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்துடன்  தொடங்கிய பொங்கல் விழாவில் குழந்தைகள்,  பெண்கள், இளைஞர்கள் பங்கேற்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற நகைச்சுவை நாடகம், விழாவில் பங்கேற்ற அனைவரையும் வயிறு குலுங்கச் சிரிக்க வைத்தது.  விழா நிறைவில்  வாழை இலையில் தமிழர்களின்  பரம்பரை மரபிற்கேற்ப சுவையான விருந்து அளிக்கப்பட்டது. இவ்விழாவில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  

Rwandapongal01 Rwandapongal02 Rwandapongal03 Rwandapongal04       Rwandapongal05         Rwandapongal06

Rwandapongal07 Rwandapongal08 Rwandapongal09 Rwandapongal10        Rwandapongal11         Rwandapongal12

Rwandapongal13 Rwandapongal14 Rwandapongal15 Rwandapongal16        Rwandapongal17        Rwandapongal18

Rwandapongal26        Rwandapongal25       Rwandapongal24 Rwandapongal23       Rwandapongal22      Rwandapongal20 Rwandapongal19


(உ)ருவண்டா தமிழ்ச்சங்கம் சிறப்பாகச் செயல்பட்டுத் தமிழர்க்குத் தொண்டாற்றித் தமிழைத் தழைக்கச் செய்து நிலைத்து வாழ அகரமுதல இணைய இதழ் வாழ்த்துகிறது.

4 thoughts on “(உ)ருவண்டா தமிழ்ச் சங்கம் நடத்திய பொங்கல் விழா

  • நன்றி. மகிழ்ச்சி. உங்கள் பங்களிப்பையும் தாருங்கள். நண்பர்களுக்கும் பகிர்ந்து அனுப்புங்கள்.

    Reply
  • Very Good website, Keep going. We have shared about your website to all our Tamil Sangam Rwanda(TSR) members.
    Worth reading …

    Reply
    • மகிழ்ச்சி. தங்கள் சங்கம் பற்றிய தகவல்களையும் அவ்வப்பொழுது நடைபெறும் கூட்டம் பற்றிய செய்திகளையும் தெரிவியுங்கள். தங்கள் பகுதி சார்ந்த தமிழ்படைப்புகளை அளிக்குமாறு சங்கத்தினரிடம் தெரிவியுங்கள். நன்றி. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் ஆசிரியர் அகரமுதல http://www.akaramuthala.in
      இணைய இதழ் /தமிழே விழி! தமிழா விழி!எழுத்தைக்காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

      Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *