செய்திகள்நிகழ்வுகள்

இராமநாதபுரம் தமிழ்ச் சங்கத்தில் இலக்கிய விழா

 

இராமநாதபுரம் தமிழ்ச் சங்கத்தில் இலக்கிய விழா மார்கழி 12, 2051 / 27.12.2020 ஞாயிற்றுக்கிழமை காலை அரவிந்து அரங்கத்தில் நடந்தது. இந்த விழாவானது தமிழ்ச்சங்க முன்னாள் துணைத் தலைவர் அமரர் த. குழந்தை(ச் செட்டியார்) அவர்களின் 27 ஆம் ஆண்டு நினைவு இலக்கிய விழாவாக நடந்தது.

இந்த விழாவுக்குச் செயலாளர் மரு. பொ. சந்திரசேகரன் தலைமை வகித்தார்.

தொடக்கமாக இறைவாழ்த்து, தமிழ்த்தாய் வாழ்த்துகளை இலதா சேசாத்திரி பாடினார். விழா அறிமுகத்தையும் வரவேற்பையும் தலைவர் பேராசிரியர் மை. அத்துல் சலாம் கூறினார்.

மகளிர் அணித்தலைவி மரு. திருமதி மதுரம் அராவிந்தராசு அமரர் த. குழந்தை(ச் செட்டியார்) படத்தைத் திறந்து வைத்தார்.

சாத்தூர் மரு. த.அறம் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினார்.

பார்த்திபன், சந்தக் கவிஞர் நா.வேலுச்சாமி துரை, இரா. இராம்மோகன், கே. செந்தில் குமார் முதலனாோர் உரை நிகழ்த்தினர்.

தமிழக அரசின் ‘தமிழ்ச் செம்மல்’ விருது பெற்ற தமிழ்ச் சங்கத் தலைவர் பேராசிரியர் மை. அத்துல் சலாம் நினைவுப் பரிசு வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார்.

வழக்கறிஞர் ஆ. இரவிச்சந்திர இராமவன்னி, அ. அபீபா அத்துல் சலாம், கா. இராமகிருட்டிண சுவாமிகள், பாத்திமா சின்னத்துரை, தமிழரசி உதயக்குமார் முதலானோர் அவரவர் துறைகளில் சிறந்து விழங்கியதற்காக விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டனர். விருதாளர்களைக் கு.விவேகானந்தன் அறிமுகம் செய்து வைத்தார்.

கு. இளங்கோவன் நன்றியுரை நிகழ்த்தினார்.  காளீசுவரி சுகுமார் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். துணைத்தலைவர் மு.ச. கருணாநிதி, பொருளாளர் கா. மங்கள சுந்தரமூர்த்தி ஆகியோர் விழாவை ஒருங்கிணைத்தனர்.

நிகழ்ச்சியில் பொற்கிழிக் கவிஞர் இளையான்குடி மு. அதாயத்துல்லா, ஊடகவியாளர் முதுவை இதாயத்து, இலக்கிய ஆர்வலர் பெருமாள், கவிஞர் குத்துபுதீன் ஐபக்கு முதலானோர்  ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

– முதுவை இதாயத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *