(புரட்டாசி 26 , 2045 / அக்.12, 2014 தொடர்ச்சி)
17. பழமையை அழித்துவிட்டுப் ‘பாதுகாக்கும்’ பன்னாட்டு நிறுவனங்கள்
வட அமெரிக்கா, ஈரான் – ஈராக் – ஆப்கானித்தான் நாடுகளில் தலையிடுகிறது என்றால், சீனாவோ தன்னுடைய மண்டலத்திலுள்ள இலங்கை, வட கொரியா முதலான நாடுகளின் உள்நாட்டுச் சிக்கல்களில் மூக்கை நுழைத்து அங்கெல்லாம் தமக்காக தளம் அமைத்துக் கொள்கிறது. ...