image-1488

தமிழர் கண்ணோட்டம் பொங்கல் மலர் – 2045 (2014)

  கடந்த 25 ஆண்டுகளாகத், தமிழ் – தமிழர் உரிமைச் சிக்கல்களைத் தொடர்ந்து வெளியிட்டு வரும் “தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம்” மாதமிருமுறை இதழ் சார்பில் வழக்கம்போல் ‘பொங்கல் சிறப்பு மலர்’ வெளியிடப்பட்டுள்ளது. தமிழர்களுக்காகப் போராடும் பல்வேறு கட்சி, இயக்கத் தலைவர்களும், தமிழறிஞர்களும்,  குமுகாயச் செயற்பாட்டாளர்களும் இயற்றியப் படைப்புகள்  முந்தைய ஆண்டுகள்போல், இம்மலரிலும் வெளியிடப்பட்டுள்ளன.   சென்னையில் நடைபெற்று ...
image-1477

தொல்காப்பிய விளக்கம் – 9 (எழுத்ததிகாரம்)

தொல்காப்பியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் (முந்தைய இதழ்த் தொடர்ச்சி) நன்னூலாசிரியர், நெட்டெழுத்தே வேண்டியளவு நீண்டி ஒலிக்கும் என்றும் அதன் அடையாளமாக நெட்டெழுத்தின் பின்னர் அதன் இனக்குற்றெழுத்துத் தோன்றி நிற்கும் என்றும் கூறியுள்ளார். இக்கருத்து, தொல்காப்பியத்திற்கு மாறுபட்டது.   தொல்காப்பியர் முன்பு, மூன்று மாத்திரையாக ஒலித்தல் ஓரெழுத்துக்குக் கிடையாது என்றும் (நூற்பா 5) மாத்திரையை நீ்ட்டிச் சொல்ல வேண்டிய இடங்களில் மாத்திரைக்கேற்ப எழுத்துகளைச் ...
image-1499

மாமூலனார் பாடல்கள் – 9

 –சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்   (முந்தைய இதழ்த் தொடர்ச்சி) “நோயிலராக நம் காதலர்” -தலைவி இங்கிலாந்தில் காதலர் இருவர் கருத்தொருமித்து கணவனும் மனைவியுமாக இல்லற வாழ்க்கை நடத்தி வந்தனர். உலகப் பெரும்போர் தொடங்கிற்று. காதலியை விட்டு விட்டுக் காதலன் போர் முனைக்குச் சென்றான். காதலி காதலனிடமிருந்து வரும் மடல்களால்  மனம் ஆறியிருந்தாள். சில திங்கள் சென்றன; மடல்களும் ...
image-1485

இலக்குவனாரின் தொல்காப்பிய ஆய்வு – 8

-    தொல்காப்பியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்  (29 திசம்பர் 2013 இதழ்த் தொடர்ச்சி) பேராசிரியர் எம்.எசு. பூரணலிங்கம்,  'பண்பாடு மிக்க தமிழர் தம் கடவுளை, மேனிலையில் உள்ள கொடிநிலை, பற்றற்றக் கந்தழி, அருள் வழங்கும் வள்ளி என மூவகையாகக் கண்டனர். சுருங்கக்கூறின், தம்மை உருவாக்கி ஆள்பவருக்கு, முதன்மைப் பண்புகளாக எங்கும் உளதாகும் தன்மை, பற்றின்மை, அருள் முதலியவற்றை  ...
image-1473

அகரமுதல இணைய இதழின் நல்வாழ்த்துகள்!

  தமிழர்திருநாளாம் பொங்கல் நன்னாளில் அனைவருக்கும் அகரமுதல இணைய இதழின் நல்வாழ்த்துகள்! இனப்படுகொலைகளு்க்கும் நிலப்பறிப்பிற்கும் பிற துயரங்களுக்கும் ஆளாகி வரும் தமிழ் ஈழ மக்கள், 01.01.1600  இல் பெற்றிருந்த நிலப்பரப்பைப் பெற்றுத் தனியரசாய்த்திகழும் நாளே நமக்கு மகிழ்வு தரும் நாள் என்பதில் ஐயமில்லை. எனினும் துயரத்தை வென்றெடுக்க, ஊக்க உணர்ச்சி பெற, இன எழுச்சி பெற, இடையிடையே ...
image-1469

என்றைக்குமே இன்பம் நிலைகொள்ள வேண்டும்

செங்கதிர் எழுந்ததடி எங்கும் ஒளி ஆனதடி பொங்கல்திரு நாளடியே என்னருந் தோழி -- அதோ பொன்னரிவாள் ஏந்திவிட்டார் என்னருந்தோழி தெங்கில்இளம் பாளையைப் போல் செந்நெல்அறுத் தார் உழவர் அங்குக்களம் கொண்டடித்தார் என்னருந் தோழி -- அவர் சங்கத் தமிழ் பாடிப்பாடி என்னருந்தோழி. கட்டடித்தே நெல்லளந்தே கட்டை வண்டி ஏற்றுகின்றார் தொட்டளித்தார் தைப்புதுநெல் என்னருந் தோழி -- அவர் தோளை வையம் வாழ்த்திற்றடி என்னருந்தோழி. கொட்டு முழக் கோடு நெல்லைக் குற்றுகின்ற மாத ரெல்லாம் பட்டுடை இழுத்துக் ...
image-1465

எங்கும் இன்பம் இனிதே பொலிகவே!

குறள்நெறி     ஓங்கி         குடியர              சுயர்ந்து பசியும்           பிணியும்        பகையும்   நீங்கி வசியும்      வளனும்             சுரந்து            வாழியர் வையகம்      வாழ்க;        வான்தமிழ்     வெல்க உழைப்பே   உயிரென      உலகுக்    குணர்த்தும் பொங்கற்   புதுநாள்        பொலிவுடன்     சிறக்க எங்கும்           இன்பம்      இனிதே      பொலிகவே. -  செம்மொழிச்சுடர் பேராசிரியர்     முனைவர் சி.இலக்குவனார்        (குறள் நெறி பொங்கல் ஆண்டு மலர் 15-01-1965)
image-1460

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து !

உலகின்    வடிவம்   உருண்டை   என்பதை உருபெரும்  அறிவியலாளர்   கலிலியோ  கூறினார் கலிலியோ    கூற்றை   கண்கண்ட  நாடுகளுக்கு கருத்துரையாகப்   பரப்புரை  செய்தார்   ஆனால் ஈராயிரத்து   ஐநூறுக்குமுன்னே   சீராயிரம்  படைத்த இருவரிமறை  ஆசான்   திருவள்ளுவப்  பெருமகன் உருவான  உலகம்   உருண்டை  என்றே இருவரியிலே   உலகிற்கு   இயம்பினார்   அன்றே ! '  சுழன்றும்ஏர்ப்    பின்னது   உலகம் ;   அதனால் உழந்தும்    உழவே    தலை '    என்றாரே படித்தனர்   ஆயினும்    பரப்புரை  செய்தனரா ? பிறநாட்டார்  சொல்லையே ...
image-1450

கடவுச்சீட்டு விண்ணப்பத்திற்கு வங்கிக்கணக்கேடும் ஆவணமாகும்.

தென்மண்டிலக் கடவுச்சீட்டு அலுவலகம், கடவுச்சீட்டு விண்ணப்பத்திற்கான ஆவணங்களுள் ஒன்றாகப் பொதுத்துறை வங்கிகளின் கணக்கேடு-வங்கிக்கணக்கு விவரங்களை ஏற்று அறிவித்துள்ளது.இதனை அறிவித்துள்ள சென்னை மண்டிலக் கடவுச்சீட்டு அலுவலர் செந்தில் பாண்டியன் பின்வரும் வங்கிகள் அவ்வாறு ஏற்பதற்குரியன என அறிவித்துள்ளார்:   அலகாபாத் வங்கி, ஆந்திரா வங்கி,பரோடா வங்கி,இந்தியா வங்கி, மகாராட்டிரா வங்கி, கனரா வங்கி, இந்தியா மைய வங்கி, கூட்டாண்மை வங்கி(கார்ப்பரேசன் ...
image-1444

தானியங்கிப் பொறியில் பணம் எடுக்க எண்ணிக்கைக் கட்டுப்பாடு வருகிறதாம்!

     வங்கிக்குச் செல்லாமல் எந்நேரமும் பணம் எடுக்கும் வாய்ப்பினை எல்லா நேரத் தானியங்கி மையங்கள் அளித்து வருகின்றன. தான் கணக்கு வைத்துள்ள வங்கிகியின் தானியங்கிப் பொறியில் மட்டுமல்லாமல் பிற வங்கிகளின் தானிப்பொறிகளிலும் பணம் எடுக்கும் வாய்ப்பைக் குறைத்துப் பிற தானிப் பொறிகளில் மாதத்திற்கு 5 தடவைக்குமேல் எடுத்தால்  கட்டணம் என அறிமுகப்படுத்தினர். இப்பொழுது் கணக்கு வங்கி, ...
image-1454

பெரியாரின் பெருந்தொண்டர் திருவாரூர் தங்கராசு மறைந்தார்!

     தன்மானத்தை உணர்த்திய தந்தை பெரியாரின் களப்பணிகளில் தளபதிகளாகச் சிலர் விளங்கியுள்ளனர். அவர்களுள் முதன்மையானவர்களுள் ஒருவர் திருவாரூர் தங்கராசு. முத்தமிழ் வாயிலாகக் குறிப்பாக மேடைப்பொழிவிலும் நூலுரையிலும் திரைஉரையாடலிலும்  மூடநம்பிக்கைக்கு எதிராகவும் தன்மானத்திற்கும் தன்மதிப்பிற்கும் சார்பாகவும் பெரியாரின் கருத்துகள் குண்டுகளாக வீசப்பட்டன! பெரியாரியத்தின் கேடயங்களாக விளங்கின! ஒழுக்கக்கேடுகளுக்கு எதிராகவும் மறுமணத்திற்குச் சார்பாகவும் அவர் எழுதிய ‘இரத்தக்கண்ணீர்’  ...
image-1437

சேதுத்திட்டம்: தமிழக அரசின் செயல் ஏற்புடையதல்ல – வாசன்

சேதுக்கால்வாய்த்திட்டம்: தமிழக அரசின் வழக்காவண உறுதிமொழி ஏற்புடையதல்ல - மத்திய அமைச்சர் வாசன்  தூத்துக்குடி: 'சேதுக்கால்வாய்த்திட்டத்தினைச் செயல்படுத்துவதில், தமிழக அரசு  உச்சநீதிமன்றத்தில் அளித்த  உறுதியுரை ஆவணம் சரியானதல்ல,” என மத்திய அமைச்சர் வாசன் தெரிவித்தார்.  மேலும்,.  இது  நாட்டின்ம் தென்தமிழகத்திற்கும் ஊறு நேர்விக்கும். இத்திட்டத்தினைச் செயல்படுத்த  காலத்தாழ்ச்சியை ஏற்படுத்தும். என்றும் மத்திய அமைச்சர் வாசன் தெரிவித்தார்.