தமிழ்க்காப்புக் கழகத்தின் தமிழ்ப்பூசை – தமிழ்ப்பூசாரி கட்டுரைப்போட்டி

      “என்னை நன்றாக இறைவன் படைத்தனன், தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே” – திருமூலர் தமிழ்க்காப்புக் கழகத்தின் தமிழ்ப்பூசை – தமிழ்ப்பூசாரி கட்டுரைப்போட்டி மொத்தப்பரிசு உரூ.10,000 /-   இறையன்பர்களுக்கும் பிற தமிழன்பர்களுக்கும் வணக்கம். தமிழ்க்காப்புக்கழகத்தின் சார்பில் “நமக்குத் தேவை தமிழ்ப்பூசைகளும் தமிழ்ப்பூசாரிகளும்” என்னும் தலைப்பில் கட்டுரைப் போட்டி நடைபெற உள்ளது. போட்டிக்கான பரிசுகளாக முதல் பரிசு உரூ. ஐந்தாயிரம் (5,000/-)  இரண்டாம் பரிசு உரூ. மூவாயிரம் (3,000/-)  மூன்றாம் பரிசு உரூ. இரண்டாயிரம் (2,000/-) வழங்கப்பெறும். பரிசுத்தொகைகளை இலக்குவனார் இலக்கிய…

தங்கநங்கை அம்ரிதாவிற்குப் பாராட்டுகள்!

அண்ணா பல்கலைக்கழகத்தின் அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரியில்  நெசவுத்தொழில்நுட்ப இளம்பொறியியலில் (B.Tech – Textile Technoloy) செல்வி அம்ரிதா முதலிடம் பெற்றுத் தங்கப் பதக்கம் பெற்றார். அண்மையப் பட்டமளிப்பு விழாவில் இவருக்குத் தங்கப்பதக்கம் அணிவிக்கப்பெற்றது. பெற்றோர் திருவாளர்கள் சி.மனோகரன்—கசுதூரி, தமக்கை மரு.சந்தனா, சுற்றத்தினர், ஆசிரியர்கள், நண்பர்களுடன் இணைந்து நிறைநலமும் உயர்புகழும் பெற ‘அகரமுதல இணைய இதழும்’ வாழ்த்துகிறது!

மூடநம்பிக்கை எதிர்ப்பு சட்ட வரைவு

மூடநம்பிக்கை எதிர்ப்பு  சட்ட வரைவு 11.12.13 அன்று மகாராட்டிரச் சட்டப் பேரவையில் வைக்கப்பட்டது. இந்தச் சட்ட முன்வடிவிற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.  சமூக நீதித்துறை அமைச்சர் சிவாசி(இராவு மொகே) இந்தச் சட்ட முன்வடிவை அளித்தார். பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும், பாதுகாப்பான சமூகச் சூழலை உருவாக்குவதற்கும், அப்பாவிப் பொதுமக்களை மூடநம்பிக்கைகளில் இருந்து பாதுகாக்கவும் இந்தச் சட்டம் வழி வகுக்கும் என்று சட்டப்பேரவையில் சிவாசி கூறினார். எதிர்க்கட்சிகள் தெரிவித்த கருத்துரைகளும் சேர்க்கப்பட்டுத் திருத்திய சட்டவடிவே சட்டமாக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். பிற மாநில அரசுகளும் இந்திய நாடாளுமன்றமும்…

எல்லாளன் வாழ்க! –

– திருக்குறள் பாவலர் தமிழ்மகிழ்நன் 92802 53329   எல்லாளன் இருக்கின்றார் எல்லாரும் அறிக ஈழத்தின் இடர்நீக்க  ஈங்கெழுந்தார் தெளிக! “இல்லையினி எல்லாளன்” என்று சொல்லு மெதிரி இடந்தேடி ஓடும்நாள் இனிவிரைவில் வருமே!

இதழ்களின் நிலை என்ன?

இன்று வெளிவரும் பெரும்பாலான இதழ்களின் நிலை என்ன? மக்களிடம் பொறிநுகர் உணர்ச்சிகளைக் கிளர்ந்தெழும்படிச் செய்வதையே குறிக்கோளாக் கொண்டு செயல்படுகின்றன. நல்லறிவு கொடுத்து மக்களைத் திருத்தி நல் வழிப்படுத்தவேண்டிய கடமை இதழ்களுக்குண்டு. அக்கடமையைப் பலவும் மறந்து விடுகின்றன. நாட்டில் பெரும்பாலான மக்கள் வளர்ச்சியற்ற நிலையிலேயேயிருந்து வருகிறார்கள். ஆகவே, அவர்களின் நிலைக்கு இறங்கிச் சென்று தங்களின் அறிவை விற்றால்தான் பணம் சேர்க்க முடியும் என்று கருதி அவ்விதமே செய்கிறார்கள். நான் அவர்களைக் குறைகூற வேண்டுமென்பதற்காக இவற்றைக் கூறவில்லை. செய்தி இதழ்களில் புலவர்களுக்கும் போதிய விளம்பரம் கொடுப்பது கிடையாது….

நாணுத்தரும்

–       முனைவர் ஔவை நடராசன்   ஒரு மொழி வருவதனால் பிறிதொரு மொழி கெடும் என்பார் கூற்றினைச் சிலர் எள்ளி நகையாடுகின்றனர். தமிழ்மொழியோடு வடசொற்கள் கலந்தமையாலேயே மலையாளம், கன்னடம்  முதலான மொழிகள்  தோன்றின என்பது மொழி நூலாரின் முடிபு. இன்றும் சிலர் ஆங்கிலச்  சொற்களையும் பிற மொழிச் சொற்களையும்

மீனியல் (Icthyology)

–       பேரா.முனைவர்  இலக்குவனார் மறைமலை “பெரிதே உலகம் பேணுநர் பலரே” என்று கூறிச் செலினும், இந்நிலப்பரப்பு மும்மடங்கு நீரால் சூழப்பட்டது என்று அறிந்தமையின் ”ஆழிசூழ் உலகம்” என அறைந்து சென்றனர் நம் முன்னோர். நீர்ப்பரப்பு போக எஞ்சியுள்ள நிலம் 1/4 பங்கே என்பதாலும் அவ்வெஞ்சியுள்ள பரப்பும் வற்றாத ஆறுகள், ஏரிகள், குளங்கள்,

காப்பாற்றுங்கள்……….!

– களப்பாள் குமரன்              எங்கே தமிழ்……. எங்கே தமிழ்…..? கல்விக்கூடத்தில் தமிழ் உண்டா… கடைத்தெருவில் தமிழ் உண்டா….? ஆலயத்தில் தமிழ் உண்டா….? ஆட்சியில் தமிழ் உண்டா தொலைக்காட்சியில் தமிழ் உண்டா…. திரைப்படத்தில் தமிழ் உண்டா….. தமிழ்நாட்டில் தான் தமிழ் உண்டா….எங்கே தமிழ்… தமிழ் எங்கே….?

எது சொந்தம்?

–     இன எழுச்சிக் கவிஞர் கவிஞர் இராமச்சந்திரன் விளைந்தபயிர் வளைந்தபடி குனிந்த வாறே        வீடெல்லாம் துடைப்பத்தால் பெருக்கி நின்றாள்! கலைந்தபடி கிடந்திருந்த குப்பை கூட்டி         காலடியில் அவள்குவித்தாள்! கட்டில் மீது

சோர்விற்கு விடைகொடு!

– தத்துவக் கவிஞர் இ பத்ருத்தீன் அலைபேசி : 9444272269 இளைஞனே ! வெட்டுவதும், துண்டிப்பதும் தான் வேலையென்றாலும், கத்தரிக்கோலை எவரும் கைது செய்யக் கோருவதில்லை ! அடிப்பதற்குச் சம்மட்டியை அருகிலேயே வைத்துக்கொண்டு – சிறு தீப்பொறியை வெங்கனலாக ஊதிப் பெருக்குவதே வேலையென்றாலும் – பட்டறைத் துருத்தியை எவரும் பழிப்பதில்லை !

தமி்ழ்க் கோட்டம் அமைய நன்கொடை வேண்டுகிறோம்!

பேரன்புடையீர், வணக்கம்.   தமிழுக்கும் தமிழருக்கும் மலேசியாவில் ஒரு மணிமண்டபமாக அமையவுள்ள ‘தமிழ்க் கோட்டம்’ எழுவதற்குத் தாங்கள் மனமுவந்து உதவ வேண்டுகிறோம். தங்களின் உதவியானது காலந்தோறும் நன்றியோடு நினைவுக் கூரப்படும்.   தமிழ் உள்ளமும் உணர்வும் கொண்ட தாங்கள், இந்தத் தூய்மைத் தமிழ்ப்பணிக்குக் கண்டிப்பாக உதவுவீர்கள் எனப் பெரிதும் நம்புகிறோம். நாம் வாழும் காலத்தில் தமிழுக்குச் செய்யும் ஓர் அரும்பணியாகவும் நிலையான திருப்பணியாகவும் நினைத்து இதனைத் தாங்கள் செய்ய வேண்டுமென மிகவும் எதிர்பார்க்கிறோம்.   விவரத்திற்கு : tamilkottam.blogspot.com தொடர்பிற்கு : tamilkottam@gmail.com. “காலத்தினாற்…