கட்டுரைசங்க இலக்கியம்

சிந்தனைப் பரப்பும், செறிந்த தெளிந்த கல்வியும் சங்கக் காலத்து இருந்தன!

தலைப்பு-சங்கக்கல்வி,வ.சுப.மா. :thalaippu_sangakaalkalvichirappu_va.supa;ma

சிந்தனைப் பரப்பும், செறிந்த தெளிந்த கல்வியும் சங்கக் காலத்து இருந்தன!

 

  சங்கக் காலத்துப் புலவர்களின் இலக்கிய வன்மை மென்மைகளைப் பாட்டின் எண்ணிக்கையை வைத்து அளக்கலாகாது, அளக்கமுடியாது. நூறு பாடியோர் பாவின் வனப்பும், ஒன்று பாடியோர் பாவின் வனப்பும் சங்கத் தன்மையுடையனவாகவே உள. நூல் நூறு எழுதியோர் திறஞ்சான்றோர் எனவும், தொல்காப்பியர் திருவள்ளுவர் இளங்கோபோல நூல் ஒன்றே எழுதினார் திறஞ்சாலார் எனவும் கூறுவதுண்டோ? எல்லாம் சிந்தனைத் திறத்தைப் பொறுத்தது. சங்கக்காலம் யார்க்கும் சிந்தனையை வளர்த்த காலம். சங்கக்கல்வி கற்பவர்க்கெல்லாம் சிந்தனையை ஊட்டிய கல்வி. ௩௭௮ (378) அகப்புலவோருள் ஒரே பாடல் பாடியமைந்த புலவோர் தொகை ௨௪௯ (249) எனின், படித்தோர் பெருக்கமும், பாடவல்லுநர் பெருக்கமும், சிந்தனைப் பரப்பும், செறிந்த தெளிந்த கல்வியும் சங்கக் காலத்து இருந்தமை பெறப்படும்.

  •  மூதறிஞர் வ.சுப.மாணிக்கனார் :
  • தமிழ்க்காதல் 
  • அட்டை-தமிழ்க்காதரல், வ.சுப.மாணிக்கம் : attai_thamizhkaathal01

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *