– பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் (முந்தைய இதழ்த் தொடர்ச்சி)  எனது மகள் அவனோடு சென்ற வழி?”  – செவிலி.  ஆ! எனது அன்பிற்குரிய மகளே! நானும் உனது தோழிகளும் இப்பொழுது நீயில்லாது தனித்திருந்து  வருந்த விடுத்துச்சொன்றாயே! எப்படிச் சென்றாய்? நமதுவீடு எவ்வளவு பாதுகாவலையுடையது. நன்னன் தலைநராகிய பாழியைப்போல் மிகுந்த காவல் உடையதல்லவா? இக்காவலைக் கடந்து எவ்விதம் சென்றாய்? நீ சென்ற வழியின் தன்மையை முன்பே அறிந்திருந்தாயா? அவ்வழிகளில் கரடிகள் மிகுதியும் உண்டே. இனிய துணைவனைப் பின்பற்றிச் செல்லுதலே  சிறந்த கொள்கை