இலக்குவனாரின் ‘பழந்தமிழ்”-ஆய்வுநூல் 3 – மறைமலை இலக்குவனார்
(ஆடி 10, 2046, சூலை 26, 2015 தொடர்ச்சி) பேராசிரியரின் கருதுகோளை இற்றைத் தொல்லியல் வளர்ச்சி நிலையில் மீள்ஆய்வு செய்யவேண்டும். நூலுள் நுவலப்பட்டுள்ள செய்திகள் பண்பாட்டுமானுடவியல், கல்வெட்டியல், தொல்லியல் ஆகியவற்றின் அடிப்படையில் ஆய்வதற்கு ஒரு தூண்டுகோலாகப் பேராசிரியரின் கருதுகோள் விளங்குகிறது. செம்மொழி ஆய்வுக்குச் சிறப்பான ஆற்றுப்படையாகக் கீழ்வரும் இயல்கள் திகழ்கின்றன எனலாம்: பழந்தமிழ் (ப. 26-42) பழந்தமிழ்ப்புதல்விகள் (ப. 65-95), பழந்தமிழ் இலக்கியம் (ப. 96-116), பழந்தமிழ் நிலை (ப. 117-141), பழந்தமிழின் எழுத்துச் சான்றுகள் (ப. 142-157), பழந்தமிழ்ச் சொல்லமைப்பு (ப….