சட்டச் சொற்கள் விளக்கம் 431-440 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 421-430: இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 431-440 431. Account slip கணக்குத் தாள் ஓய்வூதியக் கணக்குத் தாள், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டக் கணக்குத் தாள், பொதுச் சேமிப்பு நிதிக் கணக்குத் தாள் எனப் பலவகைப்படும். குறிப்பிட்ட நிதிக்கணக்கில் செலுத்தப்படும் தொகை, வைப்பு, இருப்பு, வட்டி கடனாக எடுத்திருப்பின் கடன் திருப்பச் செலுத்தி விவரம், அக்கணக்கில் முன்பணம் பெற்றிருப்பின் அதன் விவரம் முதலியவற்றைப் பதிந்து அளிக்கும் சீட்டு. 432. account stated விவரிப்புக் கணக்கு …
சட்டச் சொற்கள் விளக்கம் 421-430 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 411-420 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 421-430 421. account of crime, Give an குற்ற வரலாறு கூறு/ கொடு குற்றம் சாட்டப்பட்டவர் அல்லது குற்றவாளியின் முந்தைய குற்ற வழக்கு, தண்டனை விவரக்கணக்கைத் தெரிவித்தல். குற்றக் கணக்கு என நேர் பொருளாக இருந்தாலும் வழக்கிலுள்ள குற்றவரலாறு என்பதே சரியாக உள்ளது. முதல் குற்றவாளியா, வழக்கமான குற்றவாளியா, சட்டவகையிலான குற்றவாளியா, ஒழுக்கக்கேட்டுக் குற்றவாளியா, மனநோய்க்குற்றவாளியா, நிறுவனக் குற்றவாளியா, வெள்ளாடைக் குற்றவாளியா(அழுக்குபடியாமல் குற்றம் செய்பவர்), தொழில்…
சட்டச் சொற்கள் விளக்கம் 411-420: இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 401-410 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி சட்டச் சொற்கள் விளக்கம் 411 – 420 411. according to that அதற்கிணங்க அதற்கேற்ப ஒன்றைக் குறிப்பிட்டு அதற்கேற்ப நடைமுறைப்படுத்துவதை அல்லது பின்பற்றுவதைக் குறிப்பது. 412. Accordingly இங்ஙனமே/அங்ஙனமே இதன்படியே/அதன்படியே இவ்வாறே/அவ்வாறே இவ்வண்ணமே/அவ்வண்ணமே ஒருவர் தன்னுடைய வரம்பை அறிந்து அதற்கேற்பச் செயற்படுவதை அல்லது பின்பற்றுவதைக் குறிப்பது.. 413. Accost அணுகு அணுகிப் பேசு தனிப்பட்ட பாதுகாப்பிற்கு எதிராக உடனடி உடல் தீங்கு ஏற்படும் அல்லது குற்றச் செயல் நிகழ…
சட்டச் சொற்கள் விளக்கம் 401-410: இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 391-400 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 401-410 401. Accord priority இணக்க முன்னுரிமை ஒப்பந்தத்தில் அல்லது உடன்படிக்கையில் அல்லது இசைவளிப்பதில் முன்னுரிமை அளிக்கப்படுவது. 402. Accordance இணக்கம் மற்றவரின் கருத்திற்கு, முன்மொழிவிற்கு, விருப்பத்திற்கு, வேண்டுகோளுக்கு உடன்படுதல். விதி, ஒப்பந்தம், அறிவுறுத்தம் அல்லது ஆணைக்கிணங்க ஒத்துபோதல். 403. Accordance with the dictates of conscience, In மனச்சான்றின் கட்டளைக்கிணங்க சரியானவையாக நம்பும் கொள்கைகள். மனச்சான்றின் கட்டளையைப் பின்பற்றின், ஒருவரின்…
சட்டச் சொற்கள் விளக்கம் 391-400: இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 381-390 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 391-400 391. Accompanied by a copy of a record, it shall be ஆவணப்படி யுடன் இஃது இணைக்கப்பட்டிருக்க வேண்டும். வாதுரையில் அல்லது எதிர் வாதுரையில் உரிய ஆவணத்தின் படி இணைக்கப்பட்டிருக்க வேண்டும். 392. Accompany உடன்செல் பின்தொடர் இணை சேர் இணைந்து செயலாற்று கூட்டாளியாக அல்லது துணையாகச் செல்லல் அல்லது இசைத்தல் அல்லது இயங்குதல். 393. Accompany deafness செவிட்டுத் தன்மை…
சட்டச் சொற்கள் விளக்கம் 381-390 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 371-380 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 381-390 381. accommodate இணக்குவி இடங் கொடு 382. accommodation இடவசதி உறையுள்; தங்கியிருத்தல் கடனுதவி; பணஉதவி ஏற்பமைவு, தகவமைப்பு, இசைவாக்கம் குடியிருப்பு, அறை, வாழ்விடம், பணியிடம், தொழிலிடம் போன்றவற்றிற்குத் தேவையான வாய்ப்பு நலனை வழங்குவது. அவசரக்காலத்தில், கடனாக அல்லது பணமாக அல்லது வேறு வகையில் தேவைப்படுவதை அல்லது விரும்புவதை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடு. 383. accommodation acceptor கடனுதவி ஏற்பவர்; பணஉதவி…
சட்டச் சொற்கள் விளக்கம் 371-380 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 361-370 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 371-380 371. accidental தற்செயலான எதிர்பாராத; தற்செயலாக தற்செயலான நேர்வில் ஏற்படும் குற்றத்தைக் குற்றமனச் செயலாகப் பார்ப்பதில்லை. 372. accidental consequences எதிர்பாரா விளைவுகள் எதிர்பாராமல் அல்லது எதிர்நோக்காமல் நேரும் தற்செயலான விளைவுகளைக் குறிப்பது. 373. accidental death தற்செயலான மரணம்; நேர்ச்சி மரணம் எதிர்பாராமல் அல்லது எதிர்நோக்காமல் நிகழும் ஊர்தி மோதல், தீப்பற்றல், வண்டி அல்லது படகு கவிழல் போன்ற நேர்ச்சியால் ஏற்படும் உயிரிழப்பைக்…
சட்டச் சொற்கள் விளக்கம் 361-370 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 351-360 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 361-370 361. Accident நேர்ச்சி எதிர்பாரா விளைவு விபத்து; தற்செயல் நேர்வு accidēns என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் நிகழ்தல்/நேருதல். எனவே, நேர் பொருளாக நேர்ச்சி என்கின்றனர். எதிர்பாரா நேர்வைக் குறிப்பதால், எதிர்பாரா நேர்ச்சி என்பர். இருப்பினும் வழக்கத்தில் விபத்து என்று சொல்லும் பொருளை இதில் உணராமல் பயன்படுத்துவதில்லை. எனினும் வண்டி மோதல், தீப்பற்றியது, என்பதுபோன்று இடத்திற்கேற்பச் சொல்லலாம். சட்டமுறையான செயலை சட்ட…
சட்டச் சொற்கள் விளக்கம் 351-360 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 341-350 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 351-360 351. Accession register அணுகல் பதிவேடு இதனை அருங்காட்சியக அணுகல் பதிவேடு, நூலக அணுகல் பதிவேடு என இரண்டாகக் குறிக்கலாம். அருங்காட்சியகத்திலுள்ள நிலையான காட்சியகப் பொருள்களின் பதிவுகளை மேற்கொள்வதற்குரிய பதிவேடு. நூலகத்தில் உள்ள புத்தகங்கள், ஒலிஇழை, ஒளிஇழை முதலான பல்வேடு வடிவங்களில் உள்ள நூற்பதிவுகள் ஆகியவற்றைப் பதியும் பதிவேடு. 352. accession to office பதவியிலிருத்துகை ஒருவரைப் பதவியில் அமர்த்தி இருக்க வைத்தல்….
சட்டச் சொற்கள் விளக்கம் 341-350 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 331-340 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 341-350 341. Access, direct நேரடி அணுகல் மின்னஞ்சல் முதலியவற்றை நேரடியாக அணுகும் வாய்ப்பு. 342. Access, open court to Which the public may have மக்கள் அணுகுவதற்கேற்ற வெளிப்படையான நீதிமன்றச் செயற்பாடு. கொள்கையளவில், இந்தியக் குடிமக்கள் அனைவரும் இந்நாட்டில் உள்ள நீதிமன்றங்களை அணுகலாம். ஒவ்வொரு குடிமகனுக்கும் நீதிமன்றத்தின் மூலம் நீதி பெற உரிமை உண்டு என்பதை இஃது உணர்த்துகிறது. எந்தவொரு குடிமகனும் தங்கள்…
சட்டச் சொற்கள் விளக்கம் 331-340 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 321-330 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 331-340 : இலக்குவனார் திருவள்ளுவன் Accepted and countersigned ஏற்று மேலொப்பமிடப்பட்டது ஆவணத்திலுள்ள விதிகள்/வகையங்கள்/கூறுகள், செயன்மை(action) இரு தரப்பாராலும் ஏற்கப்பட்டதன் அடையாளமாக முதல் தரப்பார் கையொப்பமிட்டதும் அதனை ஏற்கும் வகையில் மறு தரப்பாரும் கையொப்பமிடுவது. ஒப்பந்தங்கள், உடன்படிக்கைகள், முதன்மையான ஆணைகள், என எவையாக இருந்தாலும் ஒப்புதலுக்கான இரண்டாம் கையொப்பமே மேலொப்பமாகும். Accepted in principle கொள்கையளவில் ஏற்றல் முழு விவரங்கள் அறியாச் சூழலில், சாத்தியமா இல்லையா…
சட்டச் சொற்கள் விளக்கம் 321-330 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 311-320 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 321-330 321. acceptance of final bill இறுதிப் பட்டி ஏற்பு இறுதிப் பட்டியை ஏற்றல் கணக்கை முடித்து வைக்கும் பட்டி அல்லது நிதிப்பட்டியல் ஏற்றல். 322. acceptance of less sum குறை தொகை ஏற்பு குறைந்த தொகை ஏற்றல் ஒப்பந்தத்தில் அல்லது உடன்படிக்கையில் குறித்த தொகையைவிடக் குறைவான தொகையை ஏற்றல். 323. acceptance of offer தருகை ஏற்பு…
