சிங்கள அரசின் கணக்கெடுப்பு சரியானதல்ல

 கொல்லப்பட்டவர்கள் பற்றிய  சிங்கள அரசின் கணக்கெடுப்பு சரியானதல்ல: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கையில் உள்ள தமிழர்கள் மீது பேரினச் சிங்களவாத அரசு கடந்த 30 ஆண்டுகளாக அடக்குமுறையை மேற்கொண்டு வருகிறது. 2009-ஆம் ஆண்டு நடந்த  இனப்படுகொலையின் போது, நூறாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.   மேலும் தமிழர் பகுதிகளை  வன்முறையில் கவர்ந்துள்ள சிங்களப்படை தமிழர்களின் நிலங்களைக் கவர்ந்தும்  மனித உரிமை மீறல் நடவடிக்கைகளை  அரங்கேற்றி வருகிறது. உலக நாடுகளும் இதுகுறித்துக் கட்டுப்பாடற்ற உசாவல் நடத்த வேண்டும் வற்புறுத்தி வருகின்றன.

இனப்படுகொலையில் இந்தியாவின் பங்கு! மக்கள்தீர்ப்பாயத்தில் மே17 இயக்கத்தின் சான்றாவணங்கள்!

  ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலை குறித்து, செருமனியில் பிரமென் நகரில் நிலையான மக்கள் தீர்ப்பாயம்  திசம்பர் 7 முதல் 10 வரை உசாவல் நடத்தியது.     ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் துணைப் பொதுச் செயலாளர் தென்னிசு ஏலிடே  தலைமையிலான அத் தீர்ப்பாயத்தில்  பன்னாட்டுச் சட்ட சட்ட வல்லுநர்கள், இனப் படுகொலை வழக்குகள் தொடர்பான வழக்குரைஞர்கள், பேராசிரியர்கள்  முதலான பலரும்  இடம்பெற்றிருந்தனர்.   இத்தீர்ப்பாயத்தில் ஈழத்தில் நடைபெற்றது இனப்படுகொலை என்றும் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளின் உதவியுடன் சிங்கள அரசு இனப்படுகொலையை…

இனக்கொலைக் குற்றவாளிகள் தப்பவே முடியாது : வைகோ அறிக்கை

“நடந்தது இனப் படுகொலைதான் என செருமனி மக்கள் தீர்ப்பாயம் (Permanent People’s Tribunal) அறிவித்துள்ளது. எனவே இனக்கொலை குற்றவாளிகள் தப்பவே முடியாது” என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு :-    “இரவுக்குப் பின் வைகறை மலர்வதுபோல், துன்ப இருளில் தவித்த ஈழத் தமிழர்களுக்கு விடியலின் வெளிச்சம் தோன்றுகிறது. இலட்சக் கணக்கான ஈழத் தமிழர்களை ஈவு இரக்கமின்றி கொடூரமாகப் படுகொலை செய்த சிங்கள பேரினவாத அரசு நடத்தியது ‘இனப்படுகொலைதான் (Genocide)’ என்று ஜெர்மன் நாட்டில்…

இலங்கைக் கடற்படையினருக்கு இந்தியாவில் பயிற்சி! -இராமதாசு கண்டனம்.

தமிழக மீனவர்களைக் கொன்று குவிக்கும் இலங்கைக் கடற்படையினருக்கு இந்தியாவில் பயிற்சி! இராமதாசு கண்டனம்.   தமிழக மீனவர்களைக் கொன்று குவிக்கும் இலங்கைக் கடற்படையினருக்குப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு  விலக்கிக் கொள்ள வேண்டும் என பாமாக நிறுவனர் இராமதாசு வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள இந்திய கடற்படை கழகத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள கடல்சார் பாதுகாப்பு தொழில்நுட்ப படிப்பில் சிங்களக் கடற்படையினர் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்

1 9 10