இனப்படுகொலை – ஆவணப்படம் வெளியீடு
அன்பார்ந்த தோழர்களே , உலகம் கண்டிராத இனப்படுகொலை அவலம் நம் ஈழத்தமிழ் உறவுகளுக்கு திட்டமிட்டு இந்தியா உள்ளிட்ட வல்லாதிக்க சக்திகளால் நிகழ்த்தப்பட்டு 6 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் “இது,திட்டமிட்ட இனப்படுகொலை!” என்பதை மறைக்கும் சதியை முறியடிக்க வேண்டும். நீதி கேட்கும் நெடும் பயணத்தில்,செறிவான ஆவணப்படம் மூலம் உலகின் மனச்சான்றை உலுக்கும் வகையில் இயக்குநர்.வ.கவுதமன் அவர்களின் “இது, இனப்படுகொலையா இல்லையா?” எனும் நெருப்புப் படைப்பு சித்திரை 30, 2046, மே 13 ,2015 அன்று மாலை 5.00 மணியளவில் (ஆர்.கே.வி.படநிலையம், வடபழனி, சென்னை) வெளியாக உள்ளது….
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல்
அனைவருக்கும், வணக்கம் ! முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்ச்சியை உலகத் தமிழ் அமைப்பு (World Thamil Organization,USA ) ஒருங்கிணைக்கின்றது. அனைவரும் கலந்துகொண்டு இனப்படுகொலை செய்யப்பட்டோருக்கு அஞ்சலி செலுத்துமாறு வேண்டுகின்றோம். நாள்: வைகாசி 03, 2046 / 05/17/2015 – ஞாயிற்றுக் கிழமை நேரம்: மாலை 12.30 – மாலை 3.00 மணி (கிழக்கு நேரம்) [இடம்: Cascades Senior Center, 21060 Whitfield Pl,Sterling, VA 20165] – தரவு : நாஞ்சில் பீட்டர்
“பணிந்து போகத் தமிழன் என்ன நனைந்த கோழியா?” – (இ)லீ குவான் (இ)யூ
“பணிந்து போகத் தமிழன் என்ன நனைந்த கோழியா?” – சிங்கப்பூர் முன்னாள் தலைமையர் (இ)லீ குவான் (இ)யூ உணர்ச்சிப்பெருக்கம்! “சிங்களவர்களால், தமிழர்களை ஒரு போதும் அடக்க முடியாது. அவர்கள் அடங்கிப்போகவும் மாட்டார்கள். சிங்களவர்களுக்குப்பயந்து ஓடி ஒழிந்து விடவும் மாட்டார்கள். அதிலும் யாழ்ப்பாணத்தமிழர்களை வெல்லவே முடியாது. அதனால்தான் சிங்களவர்கள், தமிழர்களை நசுக்கி ஒடுக்க முனைகின்றார்கள்” எனக் குறிப்பிட்டுள்ள சிங்கப்பூரின் முன்னாள் தலைமையர் (இ)லீ குவான் (இ)யூ, “தமிழர்களுக்குத்தனி நாடே தீர்வாகும்!” எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் அதிபர் மகிந்த ராஜபக்ஷவையும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்….
இசைப்பிரியாவிற்கு நீதி வேண்டி ஒன்றுகூடுவோம்!
இனப்படுகொலையாளன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள்
இனப்படுகொலைகாரன் பட்சேவை அழைப்பதற்காக, நரேந்திர(மோடி) தென்ஆசியநாட்டுத் தலைவர்களை அழைத்துத் தன்னைப் பெருமைப்படுத்திக்கொண்டு தமிழர்களைச் சிறுமைப்படுத்தி விட்டார். இதற்கு உலகெங்கும் எதிர்ப்புகள் எழுந்தன. எடுத்துக்காட்டிற்காகச் சில ஆர்ப்பாட்டங்களின் ஒளிப்படங்கள்.
யாழ் பல்கலையில் தமிழினப் படுகொலை – பழிதீர் சூளுரை நாள்
ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை ! ஆணையிட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை !! இலங்கை இராணுவத்தின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் யாழ் பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்.. தமிழர்களின் வீரத்திற்கு இணையேது?
பிரான்சில் தமிழினப் படுகொலை – பழிதீர் சூளுரை நாள் (மே18)
தமிழினப் படுகொலை – பழிதீர் சூளுரை நாள் : மே பதினேழு இயக்கம்
கனடா : தமிழினப் படுகொலை – பழிதீர் சூளுரை நாள்: ம.நடராசன் பங்கேற்பு
யேர்மனியில் : தமிழினப் படுகொலை – பழிதீர் சூளுரை நாள்
தமிழ் இளையோர் அமைப்பு – யேர்மனி ஈழத்தமிழர் மக்கள் அவை யேர்மனி
தமிழரைக் காப்போம் (சேவ் தமிழ்) நிகழ்த்திய தமிழினப் படுகொலை – பழிதீர் சூளுரை நாள்
நாம் இரண்டல்ல ஒன்று – செந்தமிழினி பிரபாகரன்
நாம் இரண்டல்ல ஒன்றெனச் சொல்லுங்கள். கடற்கோள்கள் பிரித்த தமிழாண்ட தேசங்கள்.. அடிமை தேசங்களாய்… அவனியில் இன்று.. ஆயினும் உணர்வழியா இனமாய்.. ஒன்றெனச் சொல்லுங்கள். உரத்துச் சொல்லுங்கள்.. எங்கள் இனம் இன்று ஒன்றானதென்று! இல்லை என பார்ப்பவர்கள் பகைவர்கள்! . பிரித்துப் பார்ப்பவர்கள் பித்தர்கள்…!! ஒன்றான மாந்தர் ஒன்றுபட்ட இனம்.. ஒற்றை தாய் மொழி.. கடல் பிரித்த தேசங்கள்.. இரண்டானாலும் தமிழினம் என்றும்… ஒரு குடி காண்! ஒற்றுமை ஒன்றே உயர்வெனக் கொண்ட வேற்றுமை இல்லா தமிழர் நாம்!.. ஒன்றே எம் இலக்கு. விடுதலை எம்…
