ஏணிப் படியாய் உயர்த்திய சான்றோர்! – மறைமலை இலக்குவனார்
இழுக்கு நிறைந்த போலிச் சடங்கும் அழுக்குப் படிந்த மூடத் தனங்களும் அழுத்தி வைத்த அடிமை வாழ்வே ஆண்டவன் கொடையென மயங்கிய நாளில் ஆதவன் உதயமாய் விடியல் அளித்தார்; நாணத் தக்க சாதிப் பீடையால் கூனிக் குறுகிக் கிடந்த தமிழரை ஏணிப் படியாய் உயர்த்திய சான்றோர்; பெரியார் பெருமை உரைக்கவும் இயலுமோ? -மறைமலை இலக்குவனார்
நன்றி மறவேன் என்றும்! – இலக்குவனார் மறைமலை
சொந்தக் கதை 01 எண்ணிப் பார்த்தால் எனக்கே நகைப்பாம் அறுபது அகலுது வருவது எழுபது எண்களில் மட்டுமே இந்த மற்றம் எனக்குள் எந்த மாற்றமும் இலையே! பிறந்தேன் எனல்பிழை பெற்றனர் என்னை; இலக்குவர் மலர்க்கொடி இணையர் அன்பால் உலகினில் தோன்றினேன் என்செயல் என்ன? வந்தேன் வளர்ந்தேன் வண்டமிழ்ச் சூழலில்! கல்வியால் பதவியும் பதவியால் செல்வமும் மேலும் மேலும் மேன்மையும் தேடிய அறிஞர் நிறைந்த அருந்தமிழ் நாட்டில் கல்வியும் பதவியும் செல்வமும் கொண்டே தமிழின் உரிமை மீட்கும் பணியில் தளரா(து) உழைத்தவர் என்னருந் தந்தை…