இந்திய அரசு இலங்கைக்குக் கூலிப்படையா? – வைகோ கண்டனம்

இந்திய அரசு இலங்கைக்குக் கூலிப்படையா? வராகா கப்பலை இலங்கைக்கு வழங்கிய இந்தியாவின் இரண்டகம் வைகோ கண்டனம்   இந்த ஆவணி 10 /ஆகத்து 27 ஆம் நாளன்று அன்று இலங்கையின் தலைநகரமாம் கொழும்பு நகர் துறைமுகத்தில் ‘வராஃகா’ கப்பலை இலங்கைக்குத் தாரை வார்த்த இந்திய அரசின் செயல் ஈழத்தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் இந்தியா செய்த மன்னிக்கவே முடியாத பச்சை இரண்டகம் (துரோகம்) ஆகும்.   ஈழத்தமிழர்களைக் காத்து விடுதலைத் தமிழ் ஈழத்தை வென்றெடுக்க மகத்தான ஈகத்தாலும், தீரத்தாலும் களமாடிய தமிழ் ஈழ விடுதலைப் புலிகளை…

இலங்கையும் ஈழமும் : ஈழ மீட்பர்களைத் தேர்ந்து எடுங்கள்!

தமிழினப் பகைவர்களை வீழ்த்துங்கள்!     இலங்கையில் ஆனி 11, 2046 / சூன் 26, 2015 அன்று அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேன 14 ஆவது நாடாளுமன்றத்தைப் பதவிக் காலத்திற்குப் பத்துத் திங்கள் முன்கூட்டியே கலைத்தார். இதனால் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஆடி 32, 2016 / ஆகத்து 17, 2015 திங்கள் கிழமை நடைபெறுகிறது. அமைய உள்ள 15 ஆவது நாடாளுமன்றத்திற்கு 225 உறுப்பினர்கள் தெரிவாகஉள்ளனர்.  இத்தேர்தலில் ஈழ வாக்காளர்கள் சலனங்களுக்கு ஆட்படாமல் இனக் கொலையாளிகளையும் இனப்பகைவர்களையும் வீழ்த்த வேண்டும். இராசபக்சேவை வீழ்த்தியதுபோல்…

இறையாண்மை என்றால் இதுதான் 1 – இலக்குவனார் திருவள்ளுவன்

  இறையாண்மை என்னும் சொல்லிற்குக் காலந்தோறும் மாறுபட்ட பொருள் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எனினும் ஒரு குறிப்பிட்ட புவிப்பரப்பில் செலுத்தும் வகையில் அதிகாரம் முற்றிலும் உறைதல் (தங்குதல்) என்னும் அடிப்படைப் பொருளில் மாற்றம் மிகுதியாக இல்லை. இறையாண்மை என்பது அண்மையில் பெரிதும் பேசப்பட்டு வருவதால் நாம் இதனை அறிந்து கொள்ள வேண்டியது உள்ளது. தமிழர்க்கு இறையாண்மை மிக்க அமைப்பு தேவையா? அவ்வாறு பேசுவது சரியா? தவறா? தமிழக இறையாண்மை என்பது இந்திய இறையாண்மைக்கு எதிரானதா? என்பனவெல்லாம் நாம் அறிய வேண்டுவன ஆகும்.புவிப்பரப்பில் சட்டங்களையும் விதிகளையும்  ஆக்கவும்…

‘தமிழ்க்கோ’ அமைப்பின் மாபெரும் கவிதைப்போட்டி!

  ஆசுதிரேலியா / அவுத்திரேலியா, ‘தமிழ்க்கோ’ அமைப்பினால் இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள கவி ஆர்வம் கொண்டோர்க்கான மாபெரும் கவிதைப்போட்டி ஒன்று நடாத்தப்படவுள்ளது. இந்தப்போட்டியானது வட மாகாணத்தில் உள்ள கவி ஆர்வம் மிக்கவர்களின் திறன்களை ஊக்குவித்துச் சிறப்பிப்பதற்கும், அவர்களின் கவிதைகளை நூலாக்குவதற்குமாக நடாத்தப்படுகின்றது. மூன்று பிரிவுகளாக இப்போட்டி நடாத்தப்படும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் எட்டு இடங்களைப் பெறுவோர்க்குப் பணப்பரிசில்கள் அளிக்கப்படும். 1ஆம், 2ஆம் பிரிவுகளுக்கு: 1 ஆம் இடம் பதினைந்தாயிரம் உரூபாய் 2 ஆம் இடம் பத்தாயிரம் உரூபாய் 3 ஆம் இடம் ஐயாயிரம்…

உலகத்தமிழ்ப் பேராயிரம் கையெழுத்து இயக்கம் செப்ரெம்பர் வரை நீடிப்பு – வி.உருத்திரகுமாரன்

உலகத்தமிழ்ப் பேராயிரம் கையெழுத்து இயக்கம் செப்ரெம்பர் வரை நீடிப்பு : அடுத்து என்ன ? தலைமையாளர் வி.உருத்திரகுமாரன் அறிக்கை !    உலகத் தமிழர் பரப்பெங்கும் முன்னெடுக்ப்பட்டிருந்த சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு ஐ.நாவைக் கோரும் கையெழுத்து இயக்கம் செம்ரெம்பர் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமையமைச்சர் வி.உருத்திரகுமாரன் அறிவித்துள்ளார்.   குறிக்கப்பட்ட இலக்குடன் யூலை 15வரை ஈட்டப்பட்டுள்ள 12 இலட்சம் கையெழுத்துகள் ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளரிடம் ஒப்படைக்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ள தலைமையாளர், இக்கையெழுத்து இயக்கம் செயன்முனைப்பு குறித்து விரிவான…

இலங்கையில் சிங்களருக்கு முன் இருந்தவர் தமிழரே! – துடிசைக்கிழார்

இலங்கையில் சிங்களருக்கு முன் இருந்தவர் தமிழரே கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் கிரேக்க நாட்டிலிருந்து சந்திரகுப்தன் அரசவைக்கு வந்த யவன தூதனாகிய மெகஸ்தனீசு என்பவர், தாம் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முந்தைய நிகழ்வாகக் கேள்விப்பட்டதாகப் பாண்டியரைப் பற்றிக் கூறுகின்றபோது, “ஈராக்ளிசுக்குப் பாண்டேயா என்ற ஒரு பெண் பிறந்தாள். அவன் அப்பெண்ணிற்குத், தெற்கில் கடலைச் சார்ந்துள்ள ஒரு நாட்டை அளித்தான். அங்கு அவனது ஆட்சிக்குட்டப்பட்டவர்களை முந்நூற்று அறுபத்தைந்து ஊர்களில் பகுத்து வைத்து, ஒவ்வோர் ஊரினரும் ஒவ்வொரு நாளைக்கு அரசிக்குக் கப்பம் கட்ட வேண்டுமென்ற கட்டளையிட்டான்” என்று கூறியதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதில்…

தமிழ்மொழி பேசும் உலக உறவுகளே! நீங்களே சொல்லுங்களேன்?

  தமிழ் இனத்தின் தாய் – ஓர் உகத்தின் தாய், ஏன் தனிச்சிங்கள பெளத்த பேரினவாதியின் கால்களில் விழ வேண்டும்? அவன் சப்பாத்து கால்களுக்குள் ஏன் முகம் புதைத்து தன் குறைகள் சொல்லி அழ வேண்டும்?   இந்த ஒளிப்படத்தில் உள்ள சக்தியற்ற-பயனற்றவர்களால் தானே எமது இனத்துக்கு இந்த இழுக்கு! வெட்கம்! கேடு! அவமானம்! பழிப்புரை(சாபம்) எல்லாம்! எல்லாமே! ஒளிப்படத்தை நன்றே அவதானியுங்கள்.  ஈழத்தாயவள், சிங்களக் கொலைவெறி வண்கணாரின்(பாசிட்டுகளின் கால்களில் விழ முன்னே, பதறி ஓடோடிச்சென்று கைத்தாங்கலாகத் தூக்கி தாங்கிப்பிடித்துத் தேற்றாமல், நிகழ்கால நீலன்…

இலங்கையைப் புறக்கணிப்போம்!- ஆளுநர் மாளிகை முற்றுகை

இலங்கையைப் புறக்கணிப்போம்!  இந்திய அரசே! அரசுறவு, பொருளியல், கலை, பண்பாடு, விளையாட்டு, என அனைத்திலும் இலங்கையைப் புறக்கணி!  மாசி 29, 2045 / மார்ச்சு 13, 2015 வெள்ளி காலை 10.00 மணி – ஆளுநர் மாளிகை  நரேந்திர மோடியின் இலங்கைப் பயணத்தைக் கண்டித்து… ஆளுநர் மாளிகை முற்றுகை… தலைமை: தோழர் தியாகு, ஆசிரியர், தமிழ்த் தேசம். ஒருங்கிணைப்பு: தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம். அனைவரும் வருக!!

தமிழர் வாக்குகள் இராசபக்சேவிற்கான தண்டனையே! – உருத்திரகுமாரன்

தமிழ் மக்களின் வாக்குகள் இராசபக்சவுக்கான தண்டனையே! சிறிசேனவுக்கோ ஒற்றையாட்சிக்கோ வழங்கப்பட்ட அங்கீகாரம் அல்ல!!  தலைமையாளர் உருத்திரகுமாரன் «நடந்து முடிந்த  இலங்கைத் தலைவர் தேர்தல் தமிழின அழிப்பைத் தீவிரமாக மேற்கொண்ட மகிந்த இராசபக்சவுக்குத் தமிழ் மக்கள் தமது வாக்குகள் ஊடாக வழங்கிய தண்டனையாகக் கருதப்பட வேண்டுமே அன்றி, வெற்றி பெற்ற புதிய  தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கோ  இலங்கையின் ஒற்றையாட்சி அரசியலமைப்புக்கோ வழங்கப்பட்ட அங்கீகாரமாகக் கொள்ள முடியாது. அதனை அங்கீகாரம் என்று எவராவது  பொருள்தர முனைந்தால் ஒன்றில் அவர்கள் தமிழ் மக்களின் அரசியல் வேட்கையைப் புரியாதவர்களாக இருக்க…

இலங்கைத் தேர்தல் – வீழ்ந்தான் பக்சே! தோற்றது பா.ச.க.

இலங்கைத் தேர்தல் – வீழ்ந்தான் பக்சே! தோற்றது பா.ச.க.     இலங்கை அதிபர் தேர்தலில் கொலைகார இராசபக்சே மண்ணைக் கவ்வினான். கோவில் கோவிலாகச் சுற்றியும் கடவுள் கருணை காட்டவில்லை.   கணியத்தை – சோதிடத்தை – நம்பி ஈராண்டுக்கு முன்பே தேர்தலை நடத்தித் தன் தலையில் தானே மண்ணை வாரிகப் போட்டுக் கொண்டான்! மக்களை நம்பாமல் சோதிடத்தை நம்பினால் இதுதான் கதி என மக்கள் காட்டிவிட்டனர்.     அவனுக்கு வாழ்த்து தெரிவித்ததன் மூலம் அரசியல் கணிப்பின்மையை வெளிப்படுத்திய பாசக அரசின் தலைவர்…