எழிலரசி அல்லது காதலின் வெற்றி 8 – பேரா.சி.இலக்குவனார்

(அகரமுதல 105  ஐப்பசி 29, 2046 / நவ. 15, 2015 தொடர்ச்சி) குற்றமொன் றில்லாக் குறுந்தொழில் புரியும் ஆளைக் கொன்றனர் ஆடலன் தப்பினன் எழிலர சிக்கோ ரிடுக்கணும் விளைத்தனர் எண்ணிய விளையும் இனிது முடித்திலர் துன்பக் கடலில் தோயப் புகுந்தனர் அறிவை யிழந்தனர் ஆண்மை குன்றினர் செய்வது யாவெனச் சிறிதும் அறிந்திலர் வாட்கிரை யான மகனை யாங்கே பறந்திடும் புட்கும் பாய்ந்திடும் நரிக்கும் இரையாய்க் கிடத்தி யேகினர். இல்லம் அடைந்தது மாங்கே அவனைச் சேணிடை “அவல் புரிய அனுப்பினோ ” மென்றனர் அவ்வித…

எழிலரசி அல்லது காதலின் வெற்றி 7 – பேரா.சி.இலக்குவனார்

(அகரமுதல 104 ஐப்பசி 22, 2046 / நவ.08, 2015 தொடர்ச்சி)     மகிழ்ச்சி ததும்பும் மாநட் பினர்போல் வேடிக் கையுடன் வியப்புச் சொற்களும் கலந்துரை யாடியே காத்தவீ ரனுக்குப் பலியிடுங் கடாவைப் பொலிவுறச் செய்து இழுத்துச் செல்லு மேழை களிடை 6 துள்ளுங் கடாப்போல் தோற்றம் விளைத்து அடைந்தனர் முடிவில் யாருமில் காட்டை. அவருடை தங்கை யவனுடை மையலில் வீழ்க் காரணம் விளைத்த பிழைக்கு பழிகொள வெண்ணினர் விழிக ளழன்றன ஒருவரை யொருவ ருற்று நோக்கினர் கைகள் சென்று கைவாள் தொட்டன…

எழிலரசி அல்லது காதலின் வெற்றி 3 – பேரா.சி.இலக்குவனார்

(எழிலரசி அல்லது காதலின் வெற்றி 2 தொடர்ச்சி) எழிலரசி அல்லது காதலின் வெற்றி 3   வானில் விளங்கா மதியென முகமும் சேலினைப் பழிக்கும் சீர்கரு விழியும் புன்னகை தவழும் மென்செவ் விதழும் முத்தென முறுவலும் மின்னென உருவும் வேய்த்தோள் மீது மிடைந்து சுருண்ட கருங்குழல் தவழும் காட்சியும் மன்றிச் சாதுவை வென்ற சாந்த குணமும் அன்பும் அடக்கமும் அருளும் அறமும் ஒருங்கே கொண்டு ஓரு வாகி யாழினு மினிய இசையுங் கொண்ட முற்றத் துறந்த முனிவரு மிவளை ஒருகால் நோக்கில் உணர்விழந் திடுவரால்,…