ஈழத்தமிழர் ஒரு தேசிய இனம் – கனடிய எதிர்க்கட்சி ஏற்றது.
ஈழத்தமிழர் ஒரு தேசிய இனம் – கனடிய எதிர்க்கட்சி ஏற்றது. ஈழத்தமிழர் ஒரு தேசிய இனமென்பதையும்; இடம்பெறும் தமிழர்இனவழிப்பிற்கான அனைத்துலக உசாரணையை கோருமென்றும்கனடாவின் பழமைவாதக் கட்சி அறிவிப்பு: சித்திரை 01, 2047 / 4.14.2016 அன்று நடைபெற்ற உயர் மட்டச் சந்திப்பில் கனடியத் தமிழர் தேசிய அவையும் (சூஊஊகூ) கனடாவில் தமிழர்பகுதிகளைச் சார்புபடுத்தும் மார்க்கம், மிசிசாகா, பிராமிடன், ஆட்டாவாவைச் சேர்ந்த அமைப்புகளும் கனடாவின் பழமைவாதக் கட்சியின் தலைவி (உ)ரோணா அம்புரூசு அம்மையார் அவர்கள் உடனான உயர் மட்டச் சந்திப்பை மேற்கொண்டனர். இச்சந்திப்பில் தமிழர்…
உலகத்தொல்காப்பிய மன்றம், கனடா
உலகத்தொல்காப்பிய மன்றம், கனடா சித்திரை 03, 2047 / ஏப்பிரல் 16, 2016 பிற்பகல் 3.00 – மாலை 5.00 திரு பொன்னையா விவேகானந்தன் : தொல்காப்பியத்தில் களவியலும் கற்பியலும் – ஒரு நோக்கு
என்று முடியும் ஈழ ஏதிலியர் துயரம்? – இலக்குவனார் திருவள்ளுவன்
செய்தியும் சிந்தனையும் [செய்தி: நண்பர் இ.பு.ஞானப்பிரகாசன், மின்னம்பலம் (https://minnambalam.com/k/1459296056 ) தளத்தில் இருந்து பின் வரும் செய்தியை அனுப்பியிருந்தார்: திருச்சிராப்பள்ளி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் ஈழத் தமிழ் ஏதிலியர்கள் பதினான்கு பேர் காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொய் வழக்குப் பதிவு செய்து தங்களைச் சிறையில் அடைத்துள்ளதாகவும், தங்களை விடுவிக்கும் வரை காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். மார்ச்சு 28, 29 ஆகிய இரண்டு நாட்களாக இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இவர்கள், மூன்றாவது…
பாலனின் சிறப்புமுகாம், மொழிபெயர்ப்பு நூல்கள் – ஒரு சிறுமியின் பார்வை : திவ்வியா பிரபாகரன்
ஈழத்து மண்ணில் சிறிலங்கா அரசு நடத்திய இனப்படுகொலைகளில் இருந்து தப்பி நல்வாழ்வு இல்லாவிட்டாலும் “உயிராவது வாழும் வாழ்வு கிடைக்குமா?” என்ற ஏக்கத்தோடும் வழி தேடும் நோக்கோடும் தமது வீட்டையும் உறவுகளையும் பிறந்து வளர்ந்த மண்ணையும் பிரிந்து “இந்தியா எங்களைக் காப்பாற்றும்”, “தமிழ் நாடு எங்களை அரவணைக்கும்”, “தமிழர்கள் எமக்காக உள்ளார்கள்” என நம்பித் தமிழகம் சென்று பாதுகாப்பு தேடிய எம் ஈழ உறவுகள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக 110 க்கும் மேற்பட்ட அகதி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு இருக்கின்றார்கள் விலங்குகளைப்…
வையகத் தமிழ் வாழ்த்து – சி. செயபாரதன்
வையகத் தமிழ் வாழ்த்து பாரதக் கண்டச் சீரிளம் தமிழே ! ஓரினம் நாமெலாம் ஒரு தாய் மக்கள் வாழ்த்துவம் உனையே ! வணங்குவம் உனையே ! தாரணி மீதில் உன் வேர்களை விதைத்தாய் வேர்கள் தழைத்து விழுதுகள் பெருகின ஈழத் தீவில் இணைமொழி நீயே சிங்கப் பூரினில் துணைமொழி நீயே மலேசிய நாட்டில் தனிமொழி யானாய் காசினி மீதில் தமிழர் பரப்பிய காவியத் தமிழே ! வாழ்த்துவம் உனையே ! வையகத் தமிழே ! வணங்குவம் உனையே ! ஆத்திசூடி ஓளவையார், ஆண்டாள்,…
ஊர்கள் தோறும் தமிழ்ப்பள்ளி தேவை! – பாரதியார்
ஊர்கள் தோறும் தமிழ்ப்பள்ளி தேவை! அனாவசியமான தண்டத்திற்கெல்லாம் தமிழர் பணத்தை வாரி இறைக்கிறார்கள். “கான்பரென்சு’ என்றும் “மீட்டிங்’ என்றும் கூட்டங்கள் கூடிவிடிய விடிய வார்த்தைகள் சொல்லுகிறார்கள். கிராமங்கள் தோறும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் போடுவதற்கு யாதொரு வழியும் செய்யாமலிருக்கிறார்களே! பாரதியார்: தேசியக் கல்வி (கனடாவில் பாரதி தமிழ்க்கல்வி தொடக்க விழாவில் எடுக்கப்பட்ட படம், தினகரன், 24.07.15)
பன்னாட்டு உசாவலுக்கான நீதிப் பேரணி, தொரண்டோ
தமிழர் தேசத்தை அங்கீகரி! இனப்படுகொலையாளிகளைத் தண்டி! அனைத்துநாட்டு விசாரணையை வலியுறுத்தி மாபெரும் போரணி தமிழீழத் தாயகம், தமிழகம், புலம் பெயர்ந்து வாழும் தேசங்கள் ஆகிய அனைத்து இடங்களைச் சேர்ந்த தமிழ்மக்களும் ஒன்றாக ஓரணியில் ஒருமித்த குரலில் அமெரிக்கா முதலான அனைத்து நாடுகள், தமிழ் மக்கள் மீதுதிணிக்கத் திட்டமிட்டிருக்கும் உள்ளக விசாரணையைக் கண்டித்து அனைத்துலக விசாரணையை வலியுறுத்தி இனப்படுகொலைக்கு அனைத்துலக விசாரணை மூலம் நீதி வேண்டி இந்த மாபெரும் பேரணி நடைபெறவுள்ளது. இடம்: 360, பல்கலைக்கழ நிழற்சாலை, அமெரிக்கத் தூதரகம் முன்பு (360 University Avenue…
கனடாவின் கியூபெக்குத் தமிழ்ச் சங்கம் பங்கெடுத்த பல்கலை நிகழ்வு
கனடாவின் கியூபெக்குத் தமிழ்ச் சங்கம் பங்கெடுத்த பல்கலை நிகழ்வு கனடாவின் கியூபெக்கு மாநிலத்தில் மொன்றியல் கிழக்குப் பகுதியில் கடந்த ஆடி 02, 2046 / 18-07-2015 அன்று பலநாடுகள் பங்குகொண்ட பல்கலை நிகழ்வு 2015 (Quebec City Festivals and Events) நடைபெற்றது. இந்த விழாவில் கடந்த 5 வருடங்களாக இலங்கைத் தமிழர்கள் தங்களின் கலை, பண்பாட்டினை பல்லின மக்களோடு பரிமாறும் பொருட்டு, கியூபெக்குத் தமிழ்ச் சங்கம் வருடா வருடம் பங்குகொண்டு பல கலை நிகழ்வுகளை மேற்கொண்டுவருகின்றது. ‘Festival d’été de Québec’ என்னும்…
கனடா உதயன் இதழின் 1000ஆவது இதழ் வெளியீட்டு விழா , சென்னை
கனடா உதயன் இதழின் 1000ஆவது இதழ் வெளியீட்டு விழா சென்னை தியாகராயநகர் வாணி மகாலில் வரும் ஆனி 12, 2046 / சூன் 27ஆம் நாள் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நிகழவிருக்கிறது. கவிதைஉறவு அன்பர்களும் இலக்கிய ஆர்வலர்களும் திரண்டு வந்து கலந்து கொள்ள அன்புடன் வரவேற்கிறேன். ஏர்வாடி இராதாகிருட்டிணன்
கவியழகனின் விடமேறிய கனவு – நூல் வெளியீடு: கனடா
வைகாசி 23, 2046 / சூன் 06, 2015 கனடா
தமிழின அழிப்புத் துயர நினைவுநாள் – கனடா
வைகாசி 4, 2046 / மே 18, 2015
சி.செயபாரதனின் ‘சீதாயணம்’ – நாடகம் : முகவுரை
[இன்றைக்கு நாடகங்கள் அருகிவிட்டன. மேடை நாடகங்களும் சூழலுக்கேற்ற புரிதலைஉடைய பேச்சு வழக்காக உள்ளனவே தவிர, எப்பொழுதும் புரியும் தன்மையில் இருப்பதில்லை. நகைச்சுவை என்ற பெயரில் துணுக்குத் தோரணங்களாகப் பெரும்பாலான நாடகங்கள் உள்ளன. ஆனால்,நல்ல நாடகங்களைப் படைத்துத் தருவோர் நம்மில் இல்லாமல் இல்லை. அவர்களில் ஒருவராகக் கனடா அறிவியலர் சி.செயபாரதன் விளங்குகிறார். சீதையின் பிற்கால வாழ்வை அடிப்படையாகக் கொண்டு சீதாயணம் என்னும் பெயரில் அருமையான நாடகத்தை உருவாக்கியுள்ளார். இராமனின் மறுபக்கத்தைப் பெரும்பாலோர் மறைத்திருக்க, அதனை வெளிக்கொணருவோர் வேறு கருத்துலகில் உழலுவதால் ஏற்கப்படாச் சூழலே உள்ளது. இந்நிலையில்…