தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு! – பழ. நெடுமாறன்
தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு! மறைமலையடிகள் 1916-ஆம் ஆண்டில் தனித்தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்தார். அவர் 20-ஆம் நூற்றாண்டின் முதல் 50 ஆண்டுகள் தமிழுக்கும் தமிழர்களுக்கும் சிறந்த வழிகாட்டியாகத் திகழ்ந்தார். அவர் பிறந்த நாளான சூலை 15-ஆம் நாளில் தனித்தமிழ் இயக்கத்தின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிறோம். வடமொழிக்கோ பிறமொழிகளுக்கோ அவர் எதிரானவர் அல்லர். தமிழ், சமற்கிருதம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளில் புலமை மிக்கவர் அவர். ஒரு மொழியில் இயல்பாக உள்ள சொற்களைத் தவிர்த்துவிட்டு பிறமொழிச் சொற்களைக் கலந்து பயன்படுத்துவதன் மூலம், அம்மொழி அழியும்…
தமிழே தொன்மையும் வளமையும் சீர்மையும் செம்மையும் உடையது.
தமிழே தொன்மையும் வளமையும் சீர்மையும் செம்மையும் உடையது. திராவிட மொழிகளுள் தமிழ்மொழியே மிகமிகத் தொன்மை வாய்ந்ததும், பெருவளம் பொருந்தியதும், மிகவுஞ் சீர்திருந்தியதுமான உயர்தனிச் செம்மொழியாகும்; சொல்வள மிகுந்தது; அளவிட வொண்ணாப் பண்டைக்காலமுதற் பயின்று வருவது. வகையும் தொகையும் தனியுமாகக் கணக்கற்ற இலக்கியங்கள் இம்மொழியில் இலங்குகின்றன. ஆனால், பெரும்பாலும் அவையெல்லாம் மிகவுந் திருந்திய செந்தமிழ் நடையானியன்றவை; வழக்காற்றிற் பேசப்பட்டு வரும் கொடுந்தமிழ் நடையானியன்றவையல்ல. – கிரீயர்சன்; கால்டுவெல் ஒப்பிலக்கணம்: கிரீயர்சன் மொழியாராய்ச்சிக் குறிப்புகளுடன்: பக். 172
கால்டுவெல் 200ஆவது பிறந்தநாள் விழா & நாரண.துரைக்கண்ணன் நூற்றாண்டு விழா
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கம் ஆடி 25, 2045 / ஆக. 17, 2014
