செந்தமிழ் நாட்டார் வாடுகிறார்! – கெர்சோம் செல்லையா
செந்தமிழ் நாட்டார் வாடுகிறார்! மக்களாட்சி என்ற பெயரில், மானம் விற்போர் ஆடுகிறார். சக்கையாக ஏழையைப் பிழிந்து சாற்றை எடுத்து ஓடுகிறார்! செக்கு மாடாய்ச் சுற்றுகின்ற செந்தமிழ் நாட்டார் வாடுகிறார். எஃகு போன்ற துணிவு இல்லை; இதனால் அழுது பாடுகிறார்! -கெர்சோம் செல்லையா
ஆறுதல் இல்லாத் தேர்தல்! – கெர்சோம் செல்லையா
ஆறுதல் இல்லாத் தேர்தல்! அள்ளி வீசும் காசுகளால், ஆட்சியைப் பிடிக்கப் பார்க்கின்றார். கொள்ளையடிக்கும் நோக்கில்தான், கூட்டணி என்று சேர்க்கின்றார். தள்ள வேண்டும் இவர்களை நாம், தன்மானத்தில் ஏற்பவர் யார்? வெள்ளையடித்தக் கல்லறையை, வீடெனக் கொள்வோர் தோற்கின்றார்! -கெர்சோம் செல்லையா.
உன்புகழ் பதித்தேன்! -கெர்சோம்செல்லையா
அருவிக்கரை அன்று கண்ட அருவிக்கரையே! பஃறுளி ஆறாய்ப் பாய்ந்து வந்தாய்; படைத்தவர் தந்த அழகில் மிதந்தாய். வறுமை நீக்கி வாழ்வே தந்தாய்; வட்டாற்றில் கோதையுட் புகுந்தாய்! சிறுவனாக உன்மேல் குதித்தேன்; சீரிய உந்தன் அழகை மதித்தேன். வெறுமை இன்று வீழ்த்தாதிருக்க, விண்ணினீவே, உன்புகழ் பதித்தேன்! -கெர்சோம்செல்லையா
