தமிழ்வழிக்கல்வி குறித்து செய்திகள் 7 தொ.கா.வில் நான். . . .

  புரட்டாசி 11, 2046 / செப்.28, 2015 செய்தி 7 தமிழ்த் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு : இரவு 9.00 – 10.00 மணி கேள்விநேரம் நிகழ்ச்சியில் தமிழ்வழிக்கல்வி  குறித்து உரையாடுகிறேன். உடன் தோழர் தியாகுவும் உரையாடுகிறார். மறு ஒளிபரப்பு 12.01 இணையத்தில் காண : http://ns7.tv/ta நிகழ்ச்சியாளர் : செந்தில்;  ஒருங்கிணைப்பாளர் : அமீது அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக்காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

மனித நேயர் அப்துல்கலாம் புகழ் வாழ்கவே! – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ்நேயம் மறந்தாலும் மனித நேயர் அப்துல்கலாம் புகழ் வாழ்கவே!   தன் எளிமையாலும் இளைஞர்களிடம் நம்பிக்கை விதைக்கும் உரைகளாலும் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், இந்தியா முழுமைக்கும், சொல்லப்போனால் உலகளாவிய புகழ் பெற்றவர் மேதகு அப்துல்கலாம். அவரின் மறைவு அனைவருக்கும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளித்துள்ளது. முகநூல் பக்கங்களிலும் பதிபேசிப் பக்கங்களிலும்(வாட்சுஅப்) இப்பொழுது மிக மிகுதியாகப் பகிரப்படுவன அவரைப்பற்றிய நினைவுகளும் புகழுரைகளுமே! சாதி, சமய, இன, மொழி வேறுபாடின்றி அனைவராலும் போற்றப்படும் அளவிற்கு உழைப்பால் உயர்ந்தவராகத் திகழ்கிறார் தமிழ் வழிபடித்துத் தரணி ஆள முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கியுள்ளார்….

ஆங்கிலவழித் திணிப்புக்கு எதிராகத் தொடர் மறியல் போராட்டம்!

தமிழக அரசின் ஆங்கிலவழித் திணிப்புக்கு எதிராக ஆகத்து 3 முதல் 7 வரை தொடர் மறியல் போராட்டம்! சென்னை தலைமைச் செயலகம் – திருச்சி மாவட்ட ஆட்சியரகம் தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் அறிவிப்பு     தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கத்தின் பொதுக்குழுக் கூட்டம், (ஆனி 17, 2046 / சூலை 02, 2015 அன்று) சென்னையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு. பெ.மணியரசன் தலைமையேற்றார்.   காந்தியப் பேரவைத் தலைவர் திரு. குமரி அனந்தன், ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு. மல்லை சத்யா, விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சித் தலைவர்…

பைந்தமிழில் படிப்பது முறை ! – பாவலரேறு பெருஞ்சித்திரனார்

பழந்தமிழ் நாட்டில் பைந்தமிழ் மொழியில் படிப்பதுதானே முறை? இழந்தநம் உரிமை எய்திடத் தடுக்கும் இழிஞரின் செவிபட, அறை! கனித்தமிழ் நிலத்தில் கண்ணெனுந் தமிழில் கற்பது தானே சரி! தனித்தமிழ் மொழியைத் தாழ்த்திய பகையைத் தணலிட் டே, உடன் எரி! தமிழ்வழங் கிடத்தில் தாய்மொழி வழியாய்த் தமிழர் படிப்பதா பிழை? அமிழ்ந்தவர் எழுந்தால் அயலவர்க் கென்ன? அயர்வதா? நீ, முனைந் துழை! பிறந்தநம் மண்ணில் பீடுறும் தமிழில் பேசுதற் கோ, ஒரு தடை? மறந்த,பண் பாட்டை மறவர்கள் மீட்க மறிப்பவர் எவர்? கொடி றுடை! முத்தமிழ்த்…