வலைத்தளத்தின் மூலம் பல செய்திகளை, ஒலியிழைகளை, காணொளியிழைகளைப் பரிமாறிக்கொள்கிறோம். இதன் படிமுறை வளர்ச்சியாக மின்வழி அருங்காட்சியகம் உருவமைக்கப்பட்டுச் செயற்பட்டுவருவது இணையத்தளத்தின் மற்றொரு திருப்புமையமாகும்.   அருங்காட்சியகத்தில் அரிய செய்திகளையும் காட்சிகளையும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள உருமாதிரிகளையும் பார்வையிடுகிறோம். விளக்கங்களை வழிகாட்டுநரோ அல்லது ஒலிபெருக்கியோ வழங்கும். இதுபோன்றே மின்வழி அருங்காட்சியகத்தில் காட்சிகளையும் ஒலியிழைகளையும் காணொளியிழைகளையும் சேமித்துத் தொகுத்து முறைமைப்படுத்தித் திட்டமிட்டு ஒரு நிகர்நிலைக் காட்சிக்கூடம் அமைக்கலாம் என்னும் கோட்பாடே மின்வழி அருங்காட்சியகத்திற்கு அடிப்படையாக விளங்குகிறது. வரலாற்று நிகழ்ச்சிகளை, நம் கடந்தகாலத்தில் ஏற்பட்ட திருப்புமையங்களை இத்தகைய வகையில்…