இலக்குவனாரின் தொல்காப்பிய ஆய்வு – 8
– தொல்காப்பியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் (29 திசம்பர் 2013 இதழ்த் தொடர்ச்சி) பேராசிரியர் எம்.எசு. பூரணலிங்கம், “பண்பாடு மிக்க தமிழர் தம் கடவுளை, மேனிலையில் உள்ள கொடிநிலை, பற்றற்றக் கந்தழி, அருள் வழங்கும் வள்ளி என மூவகையாகக் கண்டனர். சுருங்கக்கூறின், தம்மை உருவாக்கி ஆள்பவருக்கு, முதன்மைப் பண்புகளாக எங்கும் உளதாகும் தன்மை, பற்றின்மை, அருள் முதலியவற்றை எடுத்தியம்பினர் எனலாம்.” (தொல்காப்பியம் பொருளதிகாரம் விளக்கவுரை பக்கம் 335) (தமிழ் இந்தியா பக்கம் 53.) பால்வரைதெய்வம் (பொருள். 57) என்று சொல்வதிலிருந்து, கடவுள் ஊழி்னை…
இலக்குவனாரின் தொல்காப்பிய ஆய்வு – 7
(முந்தைய இதழ்த் தொடர்ச்சி) 311. அளவைகளும் எடைகளும் பல்வேறு அளவைகளும், நிறைகளும் பயன்பாட்டில் கண்டயறிப்பட்டுள்ளன. பயன்பாட்டின் போது பெயர்களின் ஒலிகள் மாறுவது தொடர்பான விதிகளை அவர் ஒழுங்குபடுத்தியுள்ளார். (எழுத்து: நூற்பாக்கள் 164, 165, 166, 167, 168, 169, 171, 239, 240) 171 ஆம் நூற்பாவிலிருந்து அளவைகள், நிறைகளின் பெயர்கள் க, ச, த, ப, ந, ம, வ, அ, உ ஆகிய தொடக்க எழுத்துகளைக் கொண்டு உள்ளமை அறியலாம். உரையாசிரியர் நச்சினார்க்கினியார் பின்வருமாறு அவற்றின் பெயர்களைக் குறிப்பிடுகின்றார். அளவைகள்:…
தொல்காப்பிய விளக்கம் – 7 (எழுத்ததிகாரம்)
(முந்தைய இதழ்த் தொடர்ச்சி) நூன்மரபு 32. ஆ, ஏ, ஒ அம்மூன்றும் வினா. ஆ, ஏ, ஓ என்பன மூன்றும் வினாப்பொருளில் வருங்கால் வினா வெழுத்துகள் எனப் பெயர் பெறும். காட்டு : வந்தானா வந்தானே வந்தானோ வந்தானே என்பது வினாப்பொருளில் இப்பொழுது வழக்கில் இன்று. 33. அன்புஇறந்து உயிர்த்தலும் ஒற்றிசை நீடலும் உளவென மொழிப இசையொடு சிவணிய நரம்பின் மறைய என்மனார் புலவர். உயிர் எழுத்துகள் தமக்குரிய அளபினை (மாத்திரையை)க் கடந்து ஒலித்தலும், ஒற்றெழுத்துகள் தமக்குரிய…
இலக்குவனாரின் தொல்காப்பிய ஆய்வு – 6
(முந்தைய இதழ்த் தொடர்ச்சி) 3.9. பல்வேறு வகுப்பினரின் மன்பதைத் தொழிற்பாடுகள்: ஒவ்வொருவரும் தத்தம் செயற்பாடுகளில் சிறந்து விளங்க எதிர்ப்பார்க்கப்பட்டனர். ஒருவர் தன் வாழ்க்கைப் பாதையில் வெற்றி காண்பதற்குத் தெரிவு செய்வதுவே அவரின் இலக்காகின்றது. தொல்காப்பியர் பிறருக்கு இடையூறு இல்லாத வகையில் தன்னுடைய திறமையை வளர்த்துக் கொள்வதே சிறந்தது என குறிப்பிடுகின்றார். (நூற்பா 74,பொருள்). மன்பதை தொழில்முறையினால் 7 பகுப்பினைக் கொண்டிருந்தது. இவை அறிவர், அரசர், மக்கள், கற்றோர், கலைஞர்கள், மேற்கூறிய பகுப்புகளில் சேராத பிறர் என்போர் ஆவார் (நூற்பா 75, பொருள்)….
தொல்காப்பிய விளக்கம் – 6 (எழுத்ததிகாரம்)
பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் (முந்தைய இதழ்த் தொடர்ச்சி) நூன்மரபு 21. இடையெழுத்து என்ப ய, ர, ல, வ, ழ, ள. ய, ர, ல, வ, ழ, ள என்பன இடையெழுத்துகள் என்று சொல்லப்படும். மெய்யெழுத்துகளை வல்லினம், மெல்லினம், இடையினம் என வகுத்திருப்பது அவற்றின் ஒலிப்பு முறையால் ஆகும். மேலைநாட்டு மொழிநூலார் எழுத்துகளின் பிறப்பிடத்தால் வகைப்படுத்தியுள்ளனர். 22. அம்மூவாறும் வழங்கியல் மருங்கின் மெய்ம்மயக்கு உடனிலை தெரியுங்காலை ஆராயுமிடத்து, அங்ஙனம் மூவினமாக வகுக்கப்பட்ட பதினெட்டு மெய்களும், மொழிப்படுத்தி…
தொல்காப்பிய விளக்கம் – 5 (எழுத்ததிகாரம்)
பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் (முந்தைய இதழின் தொடர்ச்சி) நூன் மரபு : 13. அரையளபு குறுகல் மகரம் உடைத்தே இசையிடன் அருகும் தெரியும் காலை. மகரமெய்(ம்), தனக்குரிய அரை மாத்திரையிலும் குறுகி ஒலித்தலைப் பெற்றுள்ளது. ஆராயுமிடத்து, அஃது அவ்வாறு ஒலிக்கும் இடம் சிறுபான்மையாகி வரும். வேறொரு மெய்யோடு சேர்ந்து வருங்கால் அவ்வாறு ஒலிக்கும். ‘போலும்’ என்பது செய்யுளில் ‘போன்ம்’ என வரும். இதில் உள்ள ‘ம்’ அரை மாத்திரை பெறாது. கால்மாத்திரையே பெறும் என்பர். 14. உட்பெறு புள்ளி உருவாகும்மே….
இலக்குவனாரின் தொல்காப்பிய ஆய்வு – 3
(முந்தைய இதழ்த் தொடர்ச்சி) 3. மன்பதை வாழ்க்கை தொல்காப்பியம் தமிழ் மக்களின் முன்னேறிய மன்பதையைப் பெரிதும் வெளிப்படுத்துகிறது. வாழ்க்கையின் இலக்கு இப்பொழுதும், இனி எப்பொழுதும் மதிப்பு மிக்கதாக மிகவும் முன்னேறிய நிலையினதாகக் காணப்படுகிறது. தொல்காப்பியர் வாழ்க்கையின் இலக்காகப் பின்வருமாறு கூறுகிறார். காமம் சான்ற கடைக்கோட் காலை, ஏமம் சான்ற மக்களொடு துவன்றி, அறம் புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே. (தொல்காப்பியம்: பொருள்.192) எனவே அனைவரும் பிறருக்கும், தமக்கும் பயன்தரக்கூடிய பெரும் செயல்களை அடைவதை இலக்காக கொண்டு அறவாழ்க்கை நடத்துவதையே…
தொல்காப்பிய விளக்கம்
– பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் (முந்தைய இதழின் தொடர்ச்சி) எழுத்துப் படலம் நூன்மரபு எழுத்துப்படலத்தில் உள்ள ஒன்பது இயல்களில் முதல் இயல் நூன்மரபாகும். நூல் எழுதுவதற்கு வேண்டப்படும் எழுத்துகளைப் பற்றிக் கூறுவதனால் இவ்வியல் நூன்மரபு எனும் பெயரைப் பெற்றுள்ளது. இதில் கூறப்படுகின்ற இலக்கணம் சொற்களிடையே நிற்கும் எழுத்திற்கு அன்றித் தனியாக நிற்கும் எழுத்திற்குஆகும் என அறிதல் வேண்டும். க. எழுத்து எனப்படுப அகரம் முதல் னகர இறுவாய் என்ப சார்ந்துவரல் மரபின் மூன்று அலங்கடையே. இந்நூற்பா தமிழ் எழுத்துகள் …